அந்த நேரம் முதற்கொண்டு FROM THAT TIME 60-07-16 1. வழக்கமாக நாம் அதை கிரான்ஸ் பாஸில் (Grants Pass)-ல் நடத்துவதற்கு முன்பாக, இங்கேயிருக்கும் ஏதோ வேறொரு பட்டணத்தில் நடத்துகிறோம். அவர் ஓரேகானிலுள்ள வேறு ஏதோவொரு இடத்தில் இருந்தார். நான் அங்கு அவரைச் சந்தித்து, நான்... பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும்போது, அது உங்களை சிலிர்ப்படையச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியும், அது என்னையும் சிலிர்ப்படையச் செய்கிறது. நான் எல்லா நேரமும் அவரைக்குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர் வழக்கமாக... கூட்டங்களை நிர்வகிப் பதுண்டு, அவர் சற்று முன்பு இங்கே இருக்க வேண்டுமென்றும், அவர் நம்மிடம் சிறிதளவு பேச வேண்டுமென்றும் அவரிடம் கூறினபோது, அவரோ, "என்னால் வர முடியாது. ஓ, நான் சற்றுமுன்பு தான் மிகத் துரிதமாக வந்து உம்மைப் பார்க்க வேண்டியிருந்தது" என்றார். அதற்கு நான், "நீர் வருவது நல்லது" என்றேன். 2. சற்றுநேரத்திற்கு முன்பு, எனது மகன் பில்லி ஒரு சிறு பொட்டலத்தை என்னிடம் கொடுத்தபோது, வேறொரு புளகாங்கித உணர்வு ஏற்பட்டது. நான்-நான் நீண்டகாலமாக கொண்டிருந் ததிலேயே மிகவும் இனிமை யான காரியமாக அது இருந்தது என்று நான்-நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இங்கே ஒரு சிறுமி இருந்தாள், அவளுடைய சிறு ஆத்துமா முழுவதுமாக மிகப்பெரும் உணர்வுபெருக்கோடு எதையாவது செய்ய வேண்டு மென்ற வாஞ்சை உண்டாகி, அவள் எனக்கு ஒரு-ஒரு காணிக்கை அனுப்பினாள். நான் இதை ஒப்ப டைத்துவிடப்போகிறேன் என்று Federal agents- நினைத்தால், அவர்கள் தவறாக இருக்கிறார்கள். மிகவும் அழகான ஒரு சிறிய குறிப்பும் இங்கே உள்ளது. 3. அவள், "நான் உம்மை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு 13 வயதாகிறது. நான் இந்தக் காணிக்கையை உமக்குக் கொடுக்கிறேன். பாட்டில்களை (குப்பிகளை மொழிபெயர்ப்பாளர்) விற்றதால் இது எனக்குக் கிடைத்தது. தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிப்பாராக" என்று கூறியிருந்தாள்: 13 காசுகள். 4. அது மிகவும் இனிமையாக இருந்தது. அவள் ஒருபோதும் தன்னுடைய பெயரைக் கையொப்பமிடாமல், "வெறுமனே கர்த்தரை நேசிக்கும் ஒரு சிறுமி" என்று கூறியிருந்தாள். அன்பு சகோதரியே, நீ யாராக இருந் தாலும், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது... அது எனக்கு எவ்வளவு முக்கியமானதாக உள்ளது என்று உங்களுக்குத் தெரியாது. அது அங்கேயுள்ள யாரோ ஒருவர் 100 டாலர் பணத்தை என்னிடம் கொடுப்பது போன்று அவ்வளவு தனிச்சிறப்பாக உள்ளது. 5. மகத்தான ஜிப்சி ஸ்மித் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் சூழல்களில் சிலவற்றை வாசித்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர் எப்பொழுதும் பெற்றதிலேயே மிகப்பெரிய அளவில் மெய்சிலிர்க்கச் செய்தது (புளகாங்கித உணர்ச்சியாக இருந்தது) எது வென்று ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நல்லது, ஒரு இரவிலே அவர்கள் அவருக்காக ஓர் அன்பின் காணிக்கையை எடுக்கப்போவதாக இருந்தார்களாம், பின்னாலிருந்த படிக்கட்டுகளில் அவர் ஏறிப் போகையில், அங்கே மிகப்பழைய கிழிந்துபோன கந்தை துணியை உடுத்தியிருந்த ஒரு சிறிய நாடோடி இன சிறுமி இருந்தாள்" என்றார். 6. அவள், "திரு. ஸ்மித் அவர்களே? நாங்கள் ஒரு ஏழை குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நீர் என்னுடைய அம்மாவையும் அப்பாவையும் கர்த்தராகிய இயேசுவிடம் வழிநடத்தியிருக்கிறீர். இன்றிரவு உமக்காக அன்பின் காணிக்கை எடுக்கப்பட்டது என்பதை நான் அறிந் திருந்தேன், உமக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. இன்று ஒரு சீமாட்டி எனக்கு ஒரு -ஒரு குச்சிமிட்டாய் கொடுத்தார்கள், திரு. ஸ்மித் அவர்களே, நான் அதை அந்தக் காணிக்கையில் போட விரும்பவில்லை, எனவே நான்-நான் அதை அப்படியே பொதிந்து, என்னுடைய காணிக்கையை நேரில் கொடுத்துவிடலாம் என்று எண்ணினேன்" என்றாளாம். ஒரு குச்சிமிட்டாய். சிறு குச்சியில் பொருத்தப்பட்டுள்ள சிறிய இனிப்பு தின்பண்டம். 7. அப்போது அவர் கந்தை துணியை உடுத்தி யிருந்த அந்த ஏழை சிறுமியை உற்றுப்பார்த்ததாகவும், என்ன சம்பவித்தது என்றும் சொன்னார். அது முக்கியமானது என்று உங்களுக்குத் தெரியும், அது உண்மை யான இருதயத்திலிருந்து வருகிறது. அது இனிமையானதும் மனதை நெகிழவைப்பதுமான ஏதோவொன்று என்று உங்களுக்குத் தெரியும். அங்குதான் உண்மையான உயிர்த்துடிப்பு இருக்கிறது என்றும், அது முழு இருதயத்திலிருந்து வரும்போதுதான் என்றும் நான் நினைக் கிறேன். 8. பின்லாந்தில் நடந்த கூட்டங்கள் ஒன்றில் சம்பவித்த அதைப்போன்ற ஒரு - ஒரு சிறிய ஏதோவொன்றை என்னால் நினைவுகூர முடிகிறது. நான் உங்கள் மன்னிப்பை கோருகிறேன், அது ...ல் நடந்தது. ஆமாம், அது பின்லாந்தில் தான் என்று இன்னும் எனக்கு நினைவிருக்கிறது; ஆமாம், அது கூப்பியோவில் (Kuopio) நடந்தது. நான் சிறிது காலமாக அதைக்குறித்து சிந்தித்துப் பார்க்கவில்லை. நான் வெளி நாட்டிற்குப் போவதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பே (இங்கே அமெரிக்காவில் வைத்து) ஒரு தரிசனத்தில் கண்ட ஒரு சிறு பையன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான். 9. நான் அதைக்குறித்து பேசினதைக் கேட்டிருக்கிற சிலர் இங்கே இருக்கலாம்; நான் பக்கத்தில் வருகிறேன்... ஆமாம், அநேக கரங்கள் உயர்த்தப்படுகின்றன. நான், ஒரு சிறு பையன் ஏதோவொரு இடத்தில் கிடப்பான், அங்கு மரங்களும், உயரமான பசுமைமாறா ஊசியிலை மரங்களும், பெரிய பாறைகள் இணைந்து ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும் இருக்கும். அந்தச் சிறு பையன் ஒரு விபத்தில் கொல்லப்படுவான், தேவனாகிய கர்த்தர் அவனை உயிரோடு எழுப்புவார்" என்று சொன்னேன். 10. நான்...ன் அந்த கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன். நான்... நீண்ட காலமாகி விட்டது... அந்தக் கோபுரத்தின் பெயர் எனக்கு மறந்துவிட்டது. அது மேலே...ல் இருந்தது. அது பின்லாந்திலுள்ள கூப்பி யோவாக இருந்தது, அது ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன்பு, நாங்கள் கீழே இறங்கி வந்துகொண் டிருந்தோம். 11. பின்லாந்தில் ஏறக்குறைய 6 அல்லது வருடங்கள் பயன்படுத்தப் பட்ட ஒரு ஃபோர்டு காரானது, ஏறக்குறைய 2500 டாலர்களுக்கு விற்கப்படும், ஒருக்கால் 3000 டாலர்களாக இருக்கலாம். ஒரு காலன் பெட்ரோல் 95 சென்டு காசுகள். எனவே அங்கே குறைந்தது 25,000, 35,000 பேர்கள் இருந்தாலும், இரண்டோ மூன்றோ மோட்டார் வாகனங்களை தான் நீங்கள் காண்பீர்கள். அங்கு மேலே, சிறிய பனிச்சறுக்கு வண்டி போன்றதிலோ, குதிரை அல்லது நாய் இழுத்துச்செல்லும் ஒருவகை சக்கரமில்லாத வண்டியைப் போன்றதிலோ அவர்கள்-அவர்கள் சவாரி செய்கிறார்கள், ஒரு சிவப்பு இந்தியன் சுமந்து செல்லவோ, சவாரி செய்யவோ, அல்லது வழக்கமாக, அவன் பிரயாணம் செய்ய நாய் அல்லது குதிரை இழுத்துச்செல்லும் ஒருவகை சக்கரமில்லா வண்டியில் தான் சவாரி செய்வான், நாய் அல்லது குதிரை இழுத்துச்செல்லும் இந்த ஒருவகை சக்கரமில்லா வண்டியில் அவர்களை இழுத்துச்செல்லும் ஒருவகை கலைமானை அவர்கள் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு கீழே... 12. மேலே அந்தக் குன்றின் உச்சியில் ஒரு காரில் நான் இருந்தேன், கீழே பின்லாந்தின் கூப்பியோ இருந்தது... கிட்டத்தட்ட மே மாதத்தின்போது நான் அங்கேயிருந்தேன். சூரியன்... அங்கே அவர்களுக்கு ஒரு வருடத்தில் ஒரு நாள் மாத்திரமே கிடைக்கிறது, வெறும் ஒருநாள் மாத்திரம். அங்கே ஆறு மாதங்கள் சூரிய உதயமும் ஆறு மாதங்கள் சூரிய அஸ்தமனமும் இருக்கும். இது சூரியன் அப்படியே அடி வானத்தின் விளிம்புக்கு ஓரமாக சென்றுகொண்டிருந்த நேரமாக இருந்தது. நள்ளிரவிலும், நம்மால் அப்படியே.... முடியும். இங்கு உள்ளே இருப்பதுபோன்று அருமையாகவும் வெளிச்சமாகவும் இருக்கும், நள்ளிரவிலும் ஒரு செய்தித்தாளை வாசிக்க முடியும். அதன்பிறகு சூரியன் மறுபடியும் திரும்ப உதிக்கிறது. உங்களுக்கு தூக்கம் வரும்போது, நீங்கள் தூங்கப் போகலாம்; சூரியன் உதிக்கையில் ஏறக்குறைய அவ்விதமாகத்தான் அந்நாளை நீங்கள் சமாளிக்கிறீர்கள். அதன் பிறகு ஒரு வருடமாக, அல்லது ஆறு மாதங்களாக சூரியன் அஸ்தமித்து விடும். அதன்பிறகு... லாப்லேன்ட்டில் சூரியன் உதிக்கிறது. 13. நாங்கள் பாடிக்கொண்டே அந்த மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தோம், அங்கு மேலே குடி போதையிலிருந்த ஒரு -ஒரு ஆங்கிலேயர் இருந்தார். என்ன tak-... என்று அவர் அறிந்திருக்கவில்லை. இங்கி லாந்திலிருந்து வந்த அவர் மரச்சட்டங்களை விலைக்கு வாங்குபவராயிருந்தார், அந்த பாடல் எதைக்குறித்து என்று அவர் அறிய விரும்பினார். அவரும் ஏறக்குறைய என்னைப்போன்றே மோசமான நிலைமையில் தான் இருந்தார், நான்... பின்லாந்து மக்கள் பேசும் மொழியை உங்களால் பேச முடியும் என்னும்போது, நீங்கள் மிகவும் நன்றாக இருக்கிறீர்கள், ஏனென்றால் அகரவரிசையிலேயே அவர்களுக்கு ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது எழுத்துக்கள் உண்டு, எனவே அவர்கள்... அவர்கள் மிகவும் இனிமையான ஜனங்கள், என்னுடைய ஜீவியத்தில் நான் எப்பொழுதும் சந்தித்த மிகவும் அருமையான ஜனங்களில் சிலராக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் அன்புள்ள ஜனங்கள். 14. எனவே அதன்பிறகு, நான் அங்கு மேலே இருக்கையில், இந்த ஆங்கிலேயர் தொடர்ந்து அவ்வாறு செய்துகொண்டிருந்தார். அது ஒரு மார்க்க சம்பந்தமான கூட்டம் என்று அவரிடம் சொன்னேன். அவர் கர்த்த ராகிய இயேசுவை தம்முடைய சொந்த இரட்சகராக அறிந்துள்ளாரா என்று அவரிடம் கேட்டேன். அவர் இல்லை என்று சொன்னார், எந்த மார்க்கத்தையும் பற்றி அவருக்கு எதுவும் தெரியாதிருந்தது. இந்நிலையில் அங்கு வெளியே முற்றத்தில் அந்த சேறும் சகதியுமான இடத்திலேயே முழங்கால்படியிட்டு, இந்தப் பெரிய கோபுரம் இருக்கும் இடத்தில், அது ஒருவிதமான காவற் கோபுரம், ஒரு பழமை காலத்து காவற்கோபுரம், அந்த இடத்திலேயே கர்த்தராகிய இயேசு அவரை குடி பழக்கத்திலிருந்து விடுதலையாக்கி அவருடைய ஆத்துமாவுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதைக் காணும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது, நாங்கள் உன்னதத்திலிருந்த தேவனுக்கு துதிசெலுத்தியபடி அங்கு மேலே இருந்தோம். 15. யுத்தத்தின்போது, ரஷ்யர்கள் எப்படியாக வந்து அந்தப் பட்டணத்தின் மேல் குண்டுகளைப் போட்டார்கள் என்றும், அந்தக் கோபுரத்திற்கு அருகில் வந்தார்கள் என்றும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அப்போது ஏறக்குறைய இரண்டு மைல்கள் தூரத்திலுள்ள ரஷ்யாவிற்குள்ளிருந்த இரும்புத்திரையை சரியாக காண முடிந்தது 16. இறங்கி வந்துகொண்டிருந்தோம்... அவர்கள் இந்த ஆங்கிலேயரைக் கண்டபிறகு ஜெபிக்கும்படியாக நாங்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினோம்... நான் கீழே இறங்கி அந்தக் கோபுரத்தின் அடிப்புறத்தில் அப்படியே சுற்றிலும் நடந்து கொண்டிருந்தேன், சகோதரன் ஜாக் மூர் என்னோடிருந்தார், இந்த ஆங்கிலேயர் சற்றுமுன்பு தான் கிறிஸ்துவிடம் வந்திருந்தார். அவர்கள் யாவரும் இறங்கி வந்து கொண்டிருந்தபோது, ஏதோவொன்று மிகவும் வினோதமாக என்மேல் வந்தது. நல்லது, அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்தார்கள், நான் அதை வீட்டில் வைத்திருக்கிறேன். நான், "ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் அப்படியே அதை உணருகிறேன். ஏதோவொன்று நடக்கப்போகிறது. என்னவென்று எனக்குத் தெரியாது" என்றேன். அதனால் அவர்கள், "அது என்னவாக இருக்கும்?" என்று கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு நான், "எனக்குத் தெரியாது. ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது" என்றேன். 17. அந்தக் குன்றுக்கு ஏறக்குறைய ஒரு மைல் தூரம் கீழே, அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு வருட காலமான ஃபோர்டு கார்... இருக்கும் இடத்தைக் கண்டோம். அந்தக் குன்றின் மேலே அந்தக் கோபுரத்தில் இருந்த அந்த ஜனங்களில் சிலர் கீழே இறங்கி வந்திருந்தார்கள், அப்போது சில சிறு பள்ளிப் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள்... அவர்களுடைய பெற்றோர்கள்... அவர்கள் அந்தப் பட்டணத்தில் வசிப்பவர்கள், ஜெர்மனியைப் போன்ற ஏதோவொன்று, அவர்கள் அந்தப் பட்டணத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் வெளியே நாட்டுப் புறத்தில் உழுது பயிர்செய்துவிட்டு, பிறகு பட்டணத்திற்குள் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். 18. இரண்டு சிறு பையன்கள், ஒருவனுக்கு ஏறக் குறைய 9 வயதிருக்கும், ஒருவனுக்கு ஏறக்குறைய, ஓ, ஏறக்குறைய 6 வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் சாலையை கடந்து போய்க் கொண்டிருந்தார்கள், அப்போது இந்தக் கார் வேகமாக வந்து கொண்டிருந்தது, கார்கள் இல்லாததால், அவர்கள்... பெரும்பாலும் (கார்கள் மொழிபெயர்ப்பாளர்) ஒன்றுமில்லை, அவர்கள் ஒரு காரையும் எதிர்பார்க்கவில்லை. அந்தச் சிறு பையன்கள் ஒருவர் மற்றவரின் கரங்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள், அப்போது அந்தக் கார் வேகமாக வந்துகொண்டிருக்கும் காட்சியைக் கண்டு, ஒருவன் ஒரு புறமாகவும், ஒருவன் மறுபுறமாகவும் உடனடியாக நகர்ந்து போனார்கள். அவர்கள் ஒருவன் மற்றவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக, ஒருவரையொருவர் கரத்தை விடுவித்துக் கொண்டபோது. காரோட்டி வந்த அம்மனிதன் பரபரப்பாகி, எந்த வழியில் போவது என்று அவனுக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அந்தப் பிள்ளைகள் இருபுறங்களிலும் சட்டென இழுக்க, கார் கட்டுப்பாட்டை இழந்தது. 19. இடது பக்கமிருந்த தடுப்பான்களில் ஒன்று ஒரு சிறு பையனை அந்த விதமாக கண்களுக்கு இடையே மோதி, அவனை மேலே வீசி எறிந்து, ஒரு மரத்தின்மேல் அவனை மோதி நொறுக்கி விட்டபடியால், தலையில் அடிபட்டு (மூளை கலங்கி), அவனுடைய எலும்புகளை துண்டுதுண்டாக உடைத்துப்போட்டது. மற்றொருவனோ, கார் சரியாக நேரே அந்த விதமாக அவன் மேல் ஏறிவிட்டது. அவன்மேல் போய், அது அவனை தூக்கி எறிந்துவிட்டது, பின்பக்க சக்கரம் அவனை இடித்து, முற்றிலுமாக சாலையின் மறுபக்கத்தில் புற்கள் வளர்ந்திருந்த தரையில் மோதியது. காரோ அந்த மேட்டின் மேல் ஏறி, ஒருகூட்ட பாறைகள் மேல் மிக பலமாக இடித்து, தலைகீழாக கவிழ்ந்தது 20. அந்த சம்பவம் நடந்த இடத்தில் நாங்கள் வந்துசேர்ந்தோம், எங்களுக்கு முன்பாக ஒரு வண்டியில் அங்கு வந்திருந்த வேறு யாரோ ஒருவர் சுவாசம் இருந்த சிறு பையனை எடுத்து, அவனை தங்களுடைய மருத்துவமனைக்கு கொண்டுபோயிருந்தார். ஒரு பட்டணத்தின் மேயருக்கு இணையான, அப்பட்டணத்தின் பிரதான தலைவர் அங்கே இருந்தார், மருத்துவரும் அங்கு வந்திருந்தார், மேலும்... 21. ஆனால் பின்லாந்தின் சட்டத்தின்படி, பெற்றோர்கள் வரும் வரையில், அவர்களால் இந்தப் பிள்ளையை இப்பொழுது அங்கிருந்து கொண்டுபோக முடியாது. எனவே அந்தப் பிள்ளையின் பெற்றோர்களைக் கண்டு பிடித்து அழைத்துவரும்படி, குதிரையிலோ, அல்லது வண்டியிலோ வயலுக்குப் போயிருந்தார்கள். 22. நல்லது, நாங்களும் நிறுத்தினோம். சகோதரன் கார்டன் லிண்ட்சேயும், சகோதரன் ஹால் அவர்களின் மைத்துனரும், சகோதரன் எர்ன் பாக்ஸ்டரும், சகோதரன் ஜாக் மூரும், மற்றும் சகோதரர்கள் பலரும் உடனிருந் தார்கள்; நாங்கள் நிறுத்தினோம். திருமதி. ஐசக்ஸன்; அவள் ஒருக்கால் இன்றிரவு இக்கூட்டத்தில் இருக்கலாம்; அவள் வெளியே இங்கு எங்கோ தான் வசிக்கிறாள். சகோதரி ஐசக்ஸன், இங்கே நீங்கள் இருக்கிறீர்களா? அவள் தான் பின்லாந்து மொழிக்கான எனது மொழி பெயர்ப்பாளராக இருந்தாள். 23. இந்நிலையில், அந்தச் சிறு பையனை பார்க்க அவர்கள் காரைவிட்டு வெளியே வந்துவிட்டு பின் திரும்பி வந்தார்கள். ஒரு விபத்து நடந்ததை நாங்கள் கண்டோம். அவர்கள் திரும்பி வந்து... என்று சொன்னார்கள். நான், "என்ன நடந்தது?" என்று கேட்டேன். 24. 'ஓ, வெளியே வந்து பாரும், சகோதரன் பிரான்ஹாமே, ஒரு சிறு பையன் கொல்லப்பட்டுள்ளான். வேறொருவனும் கூட கொல்லப் பட்டிருக்கிறான் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அவர்கள் அவனை மருத்துவமனைக்கு கொண்டுபோயிருக்கிறார்களாம்" என்றார்கள். 25. நான், ஓ, நான் போக விரும்பவில்லை. அடுத்து, நான் என்னுடைய சொந்த சிறு மகனைக் குறித்து நினைத்துப் பார்க்கிறேன்" என்றேன். அவன் வெறுமனே ஒரு சிறுவனாகத் தான் இருந்தான், மாதக் கணக்காக நான் அவனைக் கண்டிருக்கவில்லை. உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக் குமானால், அவனுடைய தாய் மரித்துப் போய் விட்டாள், நான்தான் அவனுக்கு தாயும் தகப்பனுமாக இருந்தேன், ஆகையால் தான் நாங்கள் ஒன்றாக ஆப்த நண்பர்களாக இருக்கிறோம். அவள் மரித்துக்கொண்டிருந்தபோது, நான் ஒருபோதும் பில்லியை விட்டு போக வேண்டாமென்று என்னிடம் கேட்டுக்கொண்டாள், மேலும் நான்... அது முதற்கொண்டு அவன்-அவன் எப்பொழுதும் என்னுடைய ஆப்தசிநே கிதனாக இருக்கிறான். 26. நான்-நான்-நான் அந்தச் சிறு பையனைப் பார்க்க விரும்பவில்லை. அது அப்படியே ... ஏற்படுத்தி யிருக்கும். அப்போது அவனுக்கு ஏறக்குறைய பில்லியின் வயது, ஏறக்குறைய ஒன்பது, பத்து வயது இருந்திருக்கும். அந்தச் சிறு பையன் எப்படி தோற்றமளிப்பான் என்று நான் உங்களிடம் சொன்னது உங்கள் எல்லாருக்கும் நினைவிருக்கும்: அவன் ஒருவிதத்தில் தலையின் ஓரங்களிலும் பின்புறமும் முடியை குட்டையாகவும் தலையின் உச்சியில் நீளமாகவும் வளரும் வகையில் முடிவெட்டிக் கொண்டிருக்கும் (crock haircuts) அந்த முடிதிருத்தப் படுதல்களில் ஒன்றை கொண்டவனாகவும் பழுப்புநிற கண்களை உடையவனாகவும் இருப்பான் என்று. மேலும் அவன் ஒரு சிறிய... அவைகளை அணிந் திருப்பான், என்னுடைய நாட்களில் நாங்கள் வழக்கமாக அதை, "பேன்ட் குட்டையாகவும் பொத்தான்களால் இடுப்புவரை பொருத்தப்பட்டுமிருக்கும் பிள்ளைகள் அணியும் சிறு ஆடை" ("pantywaist") என்று அழைப்பது போன்று அணிந்திருப்பான் என்றும், அதன்பிறகு அவனுடைய -அவனுடைய நீண்ட காலுறை களையும் அணிந்திருப்பான் என்றும், அவனுடைய காலானது அவனுடைய காலுறைகளினூடாக கூழாகிப்போயிருக்கும் என்றும் மேலும் அவனுடைய... அவன் ஒரு விபத்தில் கொல்லப் பட்டிருப்பான் என்றும் (நான் உங்களிடம் சொன்னேன்). நல்லது, நான் அங்கு போகவில்லை, திருமதி. ஐசக்ஸன், "நீர் போவது நல்லது என்று நான் நம்புகிறேன்" என்றாள். 27. அப்போது நான் அந்தச் சிறு பையனை பார்க்கச் சென்றேன், நான் அங்கு போனபோது, அவனுடைய முகத்தின்மேல் அவனது மேற்சட்டையை போட்டிருந்தார்கள். அந்த ஏழையான சிறு பையன் அவ்விதமாக முற்றிலும் கூழாக்கப்பட்டு அங்கு கிடந்ததை நான் கண்டபோது, நான் அப்படியே-அப்படியே அழத்தொடங்கினேன். நான் மறுபக்கம் திரும்பினபோது ஏதோவொன்று என்மேல் தன் கரத்தை வைத்தது. அது சகோதரன் மூர்தானா என்று நான் நினைத்தேன். நான் சுற்றும்முற்றும் பார்த்தபோது, என்னைச் சுற்றிலும் யாருமில்லை, அந்தக் கரமானது இன்னுமாக என் தோளின் மேல் தான் வைக்கப் பட்டிருந்தது. நல்லது, நான், அது வினோதமாக உள்ளதே" என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அந்தக் கரமானது என்னைவிட்டு போனது. 28. நீங்கள் இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை நம்புகிறீர்களா என்றோ, நீங்கள் எல்லாரும் விசுவாசிக்கிறீர்களா அல்லது இல்லையா என்றோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது அப்படியே அதேவிதமாக தான் சம்பவித்தது. தொடர்ந்து நான் மீண்டுமாக போகத் தொடங்கினேன், அப்போது அந்தக் கரமானது மீண்டும் என் தோளின் மேல் திரும்பவும் வைக்கப்பட்டது. நான், நல்லது, இதற்கு என்ன காரணம் என்று வியப்பாயுள்ளதே. ஒருக்கால் நான் இந்தச் சிறு பையனுக்காக ஜெபிக்க வேண்டும்போலும்" என்று நினைத்துக்கொண் டேன். மேலும் நான், "நல்லது..." என்று நினைத்தேன். 29. நான் மீண்டும் திரும்பிப்பார்த்தேன், அவனுடைய சிறு முகத்தை அவர்கள் மூடி மறைத்திருந்தார்கள். அங்கு ஏறக்குறைய 300 பேர் நின்றுகொண்டிருந்தனர். நான் தொடர்ந்து போகத் தொடங்கின போது, அந்தக் கரம் அப்படியே என்னைப் பிடித்தது. நல்லது, நான் சொன்னேன்... மீண்டும் நடந்து அந்தச் சிறு பையனை நோக்கி திரும்பிப் போகத் தொடங்கினபோது, அந்தக் கரம் சரியாக இருந்து, என்னைவிட்டுப் போனது. நல்லது. நான் அவ்வாறு இரண்டு முறை அந்தப் பையனை நோக்கி நடந்துசென்றேன். அப்போது நான், நான் இச்சிறு பையனை மீண்டும் பார்க்கட்டும்' என்றேன். அவர்கள்... மேலே எடுத்தார்கள். திருமதி. ஐசக்ஸன் எனக்காக அதை மொழிபெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தாள், நான் அவனுடைய முகத்தை மீண்டும் பார்க்கும்படி, அவர்கள் எனக்காக அக்காரியத்தை மேலே தூக்கினார்கள். நான் பார்த்தபோது, அது வினோதமாயுள்ளதே. அந்தச் சிறு பையனை நான் பார்த்திருப்பது போல் தோன்றுகிறதே" என்று நினைத்தேன். நல்லது, டாக்டர் மேனினன் அவர்கள், அவர் தான் கெல்சிங்கியிலுள்ள ஊழியர்கள் சங்கத்திற்கு தலைவராக இருந்தார், எனவே நான்... அவர் என்னோடு இருந்தார். அப்போது நான், "டாக்டர். மேனினன் அவர்களே, அந்தச் சிறு பையன் ஜெப வரிசையில் இருந்திருக்கிறானா?" என்று கேட்டேன். 30. அதற்கு அவர், "அவ்வாறு நான் நினைக்கவில்லை. உள்ளூர் பாஸ்டர்கள் சிலரிடம் நான் கேட்டுப்பார்க்கிறேன்" என்றார். அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். இல்லை, அவர்கள் அந்தச் சிறு பையனை ஒருபோதும் கண்டதில்லை, அவனைக்குறித்து அவர்க ளுக்குத் தெரியாதிருந்தது. 31. நான், "இது வினோதமாயுள்ளது; இந்தச் சிறு வனை நான் பார்த்திருப்பது போல் தோன்றுகிறது" என்று சொல்லிவிட்டு, மீண்டுமாக நான் அங்கிருந்து நடந்து போகத் தொடங்கினபோது, அந்தக் கரம் மறுபடியும் என்னுடைய தோளின்மேல் வைக்கப்பட்டது. நான் திரும்பிப்பார்த்து, "ஏதோ பார்த்த மாதிரி உள்ளதே" என்று நினைத்தேன். 32. நான் கவனித்துப்பார்த்தேன்: தலையின் ஓரங் களிலும் பின்புறமும் முடியை குட்டையாகவும் தலையின் உச்சியில் நீளமாகவும் வளரும் வகையில் முடிவெட்டிக் கொண்டிருக்கிறான் (crock haircuts), சிறிய பழுப்புநிற கண்கள் வெளியே தள்ளிக்கொண்டிருக்க, முதுகின்மேல் கிடக்கிறான், சிறு காலானது அவ்விதம் அதனூடாக கூழாகியிருக்கும் அவனுடைய காலுறையினூடே சிறு கால் உள்ளது. ஓ, அவன் பயங்கரமான நிலையில் இருந்தான். அந்தக் காரானது கட்டுப்பாட்டை இழந்தபின், காரும் பின்பக்க சக்கரமும் அப்படியே அந்த விதமாக அவனை நசுக்கி, அது அப்படியே அவனை வேகமாக புரட்டிப் போட்டிருந்தது, அவன் அப்படியே-அப்படியே அந்தவிதமாக காலால் அழுத்தி இயக்கும் முடுக்குப் பொறி (accelerator) மேல் சடுதியாக முற்றிலும் செயலற்றவனாகி, அது அப்படியே அந்த மேட்டின்மேல் ஏறிச்சென்றுவிட்டது. அந்த மனிதனுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை; அவர்கள் அவனை மோசமாக சேதமடைந்த அந்த காரிலிருந்து வெளியே இழுத்து எடுத்த போது, அவன் வேறு யாருடைய உதவியுமின்றி வெளியே வந்தான். அதன்பிறகு நான் மீண்டும் நோக்கிப் பார்த்தபோது, நான்-நான் அந்தக் குன்றை ஏறிட்டுப் பார்த்தேன். அந்த உயரமான பசுமை மாறாத ஊசியிலை மரங்கள் அந்தக் குன்றிலிருந்து விலகியிருந்தன, பாறைகள் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கும் இருந்தது. 33. ஓ, என்னே! கிறிஸ்தவ நண்பர்களே, நான் நம்புகிறேன், ஏதோவொரு நாளில், நாம் இங்கே இல்லாமல், வேறொரு தேசத்தில் இருந்தாலும், உங்களிடம் வரும் அந்த உணர்ச்சியை நீங்கள் அறிந்துகொள்ளும் போது. அந்த உணர்வை எல்லா நேரமும் நான் கொண்டிருக்க விரும்புகிறேன். என்னால்... முடியுமானால். அது ஏதோவொன்றாக உள்ளது. அது ஒரு அன்பாக உள்ளது; அது மிகவும் ஆழமான ஒரு அன்பைப் போன்றுள்ளது. மேலும் நான்... பிசாசு பாதாளத்திலுள்ள தன்னுடைய எல்லா குட்டி பிசாசுகளையும் அனுப்பி, அங்கே அந்த திடல்களில் நின்றாலும், அது... அது அந்த உணர்ச்சியை அசைக்கவே முடியாது. அது சம்பவிக்கப் போகிறது என்று தேவனே சொல்லி, அது சரியாக இங்கே உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதைக் காணும் ஏதோவொன்றாக அது உள்ளது. அது சம்பவிக்கத்தான் போகிறது. 34. எனவே நான், "எனக்கு இந்தப் பையனைத் தெரியும்" என்றேன். அப்போது சகோதரன் மூரும் அவர்களும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். நான், "சகோதரன் லின்ட்சே அவர்களே, உங்கள் வேதாகமத்தின் தொடக்கத்தில் அல்லது கடைசியிலுள்ள வெற்றுத் தாளில் (flyleaf) பாருங்கள்" என்றேன். அப்போது அது போர்ட்லாண்டில் நடந்தது, நான் இங்கு ஊடாக கடந்து வந்தபோது, உங்கள் வேதாகமத்தின் தொடக்கத்தில் அல்லது கடைசியிலுள்ள வெற்றுத் தாளில் எழுதிவைக்கும் படி, ஜனங்களாகிய உங்களிடம் நான் கேட்டுக்கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஃபுளோரிடாவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு ரயில்வண்டியில் நான் அதைக் கண்டேன். அப்போது நான், நான் அதை 'கர்த்தர் உரைக்கிறதாவது, ஒரு சிறுவன்' என்றும், அவன் எவ்விதம் காணப்படுவான் என்று விவரித்து, 'அவன் மரித்தோரிலிருந்து எழுவான்' என்றும் அங்கே எழுதி வைத்தேனே" என்றேன். அப்போது அவர் வேதாகமத்திலுள்ள வெற்றுத் தாளில் பார்த்தபோது, சகோதரன் மூர் அவர்கள், "அது தான் இந்தப் பையன்" என்றார். 35. நான், அது இவன்தான். இப்பொழுது... என் றேன். நான் எல்லா ஜனங்களிடமும் சொல்லி, திருமதி. ஐசக்ஸனிடம், "இப்பொழுது, 'பயபக்தியாயிருங்கள்' என்று அவர்களிடம் சொல். இந்தச் சிறுவன் இப்பொழுதிலிருந்து ஐந்து நிமிடங்களில், ஜீவனோடு தன் காலூன்றி நிற்கவில்லை என்றால், நீங்கள் என்னை பின்லாந்தை விட்டே வெளியேற்றிவிடலாம்; அப்பொழுது நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி" என்றேன். பாருங்கள்? நான், "சரியாக இப்பொழுதே இந்தச் சிறுவன் மரித்தோரிலிருந்து எழும்பப் போகிறான்" என்றேன், அவன் மரித்து ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆகியிருந்தது. 36. இந்நிலையில், அவர்கள் தாய் தகப்பன் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தனர், அவர்கள் வந்து தங்களுடைய சிறு மகன் அவ்விதமாக நசுக்கப்பட்டு சாலையில் கிடப்பதைக் காணும்போது, எப்படி உணர வேண்டும், எப்படி அவர்கள் உணருவார்கள் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். சிறிய நாக்கு அவன் வாயின் பக்கமாக தொங்க, அவனுடைய காதுகளிலிருந்தும் மற்றும் எல்லாவற்றிலுமிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நான் சரியாக அந்தத் தரிசனத்தில் காண்பிக்கப் பட்டவிதமாக முழங்கால்படியிட்டு, அந்தச் சிறு பையன்மேல் கரங்களை வைத்தேன், நான் அவன்மேல் கரங்களை வைத்த உடனே, நான், "பரலோகப் பிதாவே, இரண்டு வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் வைத்து, இந்தப் பிள்ளை மீண்டும் உயிரோடெழும் என்று இந்தப் பிள்ளையின் ஜீவனைக்குறித்து எனக்கு வாக்குப் பண்ணினீர். இப்பொழுது, அந்தத் தரிசனம் உரைக்கப்படும்போது, மரணமானது அதைப் பிடித்துவைத்திருக்க முடியாது" என்று சொன்னேன். நான், "மரணமே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவனுடைய ஜீவனைத் திருப்பிக்கொடு" என்றேன்." அப்பொழுது சிறுவன் சடுதியாக காலூன்றி எழுந்து உரத்த குரலில் கத்தினான்...?... உங்களுக்குத் தெரியும். எந்தப் பிள்ளையும் எப்பொழுதாவது எப்படி இருக்க முடியுமோ அவ்வளவு இயல்பாகவும் நல்ல உடல் நலத்தோடும் அவன் இருந்தான். 37. பின்லாந்திலுள்ள கூப்பியோ பட்டணத்தின் தலைவரால் (chief man) எழுதப்பட்ட அதை இன்று என்னுடைய படிக்கும் அறையில் (study) நான் வைத்திருக்கிறேன். அது சரியே. எழுதப்பட்டும், அதன்பிறகு மறு பக்கத்தில், அது என்னவென்று மொழிபெயர்க்கப் பட்டும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் பின்லாந்தில் ஏழைகளாக இருக் கிறோம். எங்களால் உமக்கு எதையும் தர முடியவில்லை. எங்களிடம் இருக்கும் ஒரே காரியம் காகிதம் தான், எனவே கூப்பியோவைப் பற்றிய புத்தகமும் என்னிடமிருந்து தரும் ஒரு குறிப்புரையும் இங்கே உள்ளது" என்று (அதில்) சொல்லப்பட்டிருந்தது. அவர் தாமே அந்த சாட்சியை எழுதினபோது, அதன்மேல் அந்த விதமாக அவர்களுடைய முத்திரையும் உள்ளது. 38. சமீபத்தில் இங்கே பின்லாந்திலிருந்து யாரோ ஒருவர் எனக்குக் கடிதம் எழுதி, "அது பொய்யானது' என்று சொல்லியிருந்தார். அது பொய்யானது என்று அதன்பேரில் அவர் ஒரு புத்தகத்தையும் எழுதப்போகிறாராம். 39. அதற்கு நான், "அப்படியே நீர் செய்து, அந்த புத்தகத்தை எழுதும். பிறகு அதற்குப் பின்புறத்தில் அந்தப் பட்டணத்தின் மேயருடைய இந்தச் சாட்சியையும் நான் பிரசுரிக்கப்போகிறேன். எனவே இப்பொழுது, நீர் அப்படியே செய்து உமக்கு விருப்பமான எதையும் எழுதும்" என்றேன். 40. ஒரு காரியத்திற்காக நமக்கு ஒன்று அல்லது இரண்டு நிமிட நேரமோ, (அல்லது) அதிக நேரமோ உண்டா? நான் அதை நிறைவு செய்ய விரும்புகிறேன். நாங்கள் பின்லாந்தைவிட்டுப் புறப்பட்ட போது, அந்த இரவிலே, அந்த... நாங்கள் அந்த இடத்திற்குள்ளாகப் போய்க் கொண்டிருந்தோம்; அங்கே மிக அநேகர் இருந்தார்கள்; அவர்கள் தெருவில் காவலாட்களைக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நான் அறைக்குள் போய்க் கொண்டு, அங்கே, நெடுகிலும் நடந்து கொண்டிருந்தேன்; அங்கே என்னைச் சுற்றிலும் ஏறக்குறைய ஆறு அல்லது ஏழு இராணுவ வீரர்கள் இருந்தார்கள். அந்த ஏழையான சிறிய பின்லாந்து நாட்டவர்கள்... இன்னும் சவரம்செய்ய போதுமான வயது ஆகவில்லை, பெரும்பாலும் மற்ற வளர்ந்த மனிதர்கள் எல்லாரும் ரஷ்யர்களால் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருந்தார்கள். இவ்வாறாக, அவர்கள் என்னை உள்ளே அழைத்துச்சென்றார்கள். 41. நீங்கள் ரஷ்யாவில் பிறக்கும்போது, நீங்கள் பிறந்த இடத்திலிருந்து 40 மைல்கள் தூரத்தில் இருந் விசா இருந்தாலும், உங்களுக்கு நுழைவு சீட்டு இருந்தாக வேண்டும். ஆனால் ரஷ்யாவில் எந்தக் கிறிஸ்த வர்களும் கிடையாது என்று யாரும் எப்பொழுதாகிலும் உங்களிடம் சொல்ல அனுமதிக்காதீர்கள்; அங்கே அவர்களில் மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அந்த ரஷ்ய இராணுவ வீரர்களும் அங்கிருந்தார்கள்... நமக்கிருக்கும் ராக்- அன்டு -ரோல் மற்றும் அந்த எல்லா காரியங்கள் போன்ற விஷயங்களை அவர்களால் ஒலிபரப்பு அல்லது ஒளி பரப்பு செய்ய முடியாது, அங்கே... ரேடியோவில் வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான காரியங்களைத் தவிர வேறெதுவுமில்லை. மேலும் இதோ, அது ரஷ்யாவின் எல்லா விடங்களுக்கும் போயிருந்தது. நான்... 42. சமீபத்தில் பரோன் வான் ப்ளாம்பெர்க் அவர்கள் என்னிடம் சொன்னது என்னவென்றால், அவர்கள் இரும்புத் திரைக்கு பின்னாலிருந்து வெளியே கொண்டு வந்த ஒரு சிறு மனிதர், "சகோதரன் பிரன்ஹாமே, உமது ஊழியமானது எவ்வாறு இருக்கிறதோ அதைக் காட்டிலும் நன்றாக அமெரிக்காவில் அறியப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாயுள்ளது" என்று சொன்னாராம். அது இங்கே இருப்பதைக் காட்டிலும், இரும்புத்திரைக்குப் பின்னால் இருந்துவரும் ரஷ்யாவில் நன்கு அறியப்பட்டுள்ளது. அந்தச் சிறுவன் அங்கே மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததை நாங்கள் எல்லாரும் ரேடியோவில் கேட்டோம்" என்றாராம். மேலும் இப்பொழுது, இதுவோ... நான் கடந்துசென்றபோது, அந்த ரஷ்ய இராணுவ வீரர்கள் தெருவில் நின்று, அந்த ரஷ்ய மரியாதையை (salute) செலுத்தினார்கள். மேலும் அவர்கள் சொன்னார்கள்... அவர்கள் கடந்து போய்க் கொண்டி ருக்கையில், அந்த மொழிபெயர்ப்பாளர் என்னிடம், "இதைப்போன்ற ஒரு தேவனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்று அவர்கள் சொன்னார்கள்" என்று கூறினார். நிச்சயமாக. 43. பாருங்கள்? அது என்னவென்றால், சபையின் பலவீனம் தான் கம்யூனிஸத்தை எழுப்பியது; அது அந்தவிதமானதொரு முட்டையி லிருந்துதான் பிறந்தது. ஒரு தேசத்திலுள்ள பணம் எல்லாவற்றையும் சபை டுத்து மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள பொற் பீடங்களை கட்டிக்கொண்டு, ஜனங்களோ தெருவில் பட்டினியால் மரிப்பார் களானால்? அதைப்போன்ற அப்படிப்பட்ட காரியங்கள் ஏன் எழும்புகிறது என்பதை உங்களால் காண முடியும். ஆனால் எந்த மனிதனையாவது தேவனுடைய உண்மையான காரியத்தைக் காண அனுமதியுங்கள், விசுவாசிக்கும் படியாக அவன் தனக்குள் எதையாகிலும் பெற்றிருந்தால், அவன் அதை விசுவாசிப்பான். இவ்வாறாக அவன் அங்கே நின்றுகொண்டு, "மரித்தோரை உயிரோடு எழுப்பக்கூடிய அவ்விதமான ஒரு தேவனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். நாங்கள் அதைக் குறித்து அறிய விரும்புகிறோம்" என்றான். 44. இந்த பொருளின் பேரில் நான் வருகையில், நான் உங்களிடம் சொல்லுவேன், இதை நான் கூறலாம்: அங்கே அந்தக் கட்டிடத்தின் உள்ளேவைத்து, ரஷ்ய இராணுவ வீரர்கள் பின்லாந்துக்காரர்களை அவர்களின் இடுப்பைச் சுற்றிலும் பற்றிக்கொண்டு, ஒருவரை யொருவர் அன்போடு தழுவி தோழமை உணர்வுடன் மென்மையாக தட்டிக்கொடுப்பதைக் கண்டேன், ஸ்காண்டிநேவியன் நாடுகளின் மக்கள் செய்வதுபோன்று, ஒருவரையொருவர் அன்போடு அணைத்துக் கொண்டு தட்டிக்கொடுப்பதை நான் கண்டேன். ஒரு ரஷ்யன் பின்லாந்துக்காரன் ஒருவனைச் சுற்றிலும் தன்னுடைய கரத்தைப் போடுவதையும், ஒரு பின்லாந்துக்காரன் ரஷ்யன் ஒருவனைச் சுற்றிலும் தன் கரத்தைப் போடவும் செய்யும் எதுவும் யுத்தங்களை என்றென்றுமாக தீர்த்துவைத்துவிடும். நமக்கு ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் (U.N.'s) அவசியமில்லை; நமக்கு இயேசு கிறிஸ்து தான் தேவையாயிருக்கிறது. அதுதான் உலகத்திற்கு தேவையாக உள்ளது. பாருங்கள்? 45. அந்த இரவிலே போனபோது, அங்கே ஒரு சிறுமி வெளியே வந்தாள். அந்த சம்பவம் பற்றிய விவரத்தை வாசித்திருக்கிற நீங்கள்; நீங்கள்... சகோதரன் கோர்டன் அவர்கள் (Brother Gordon) அதை ஒருபோதும் முழு விவரமாக எழுதவில்லை; அவர் அப்படியே அதை ஒருவிதத்தில் சொல்லியிருக்கிறார். அவள் பெண்கள் தங்கும் விடுதியிலிருந்து, அதைப் போன்ற அப்படிப்பட்ட இடத்தைவிட்டு வெளியே வந்தாள். நாங்களும் அந்த இராணுவ வீரர்களும், அந்தச் சிறுமியும் வெளியே நடந்து வரத்தொடங்குகையில், அவள் சிறிதுநேரம் அவ்விடத்தைவிட்டு வெளியே வந்தபோது, அவளுக்கு ஒரு கால் மற்ற காலைக் காட்டிலும் ஏறக்குறைய அவ்வளவு அதிக குட்டையாக இருந்தது. அதன்பிறகு அவளைச் சுற்றிலும் ஒரு-ஒரு பெரிய பெல்ட்டையும், அந்த விதமாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட, கீழ்நோக்கியிருந்த ஒரு -ஒரு-ஒரு பற்றிறுக்கியையும் (brace) அவள் உடையவளாயிருந்தாள், அவள் இரண்டு ஊன்றுகோல்களையும் கொண்டிருந்தாள். அவளுடைய தோளின் மேலாக வந்து இங்கேயுள்ள இந்த பெல்ட்டின் பின்பக்கத்தில் திரும்ப மாட்டப்பட்டிருந்த, ஒரு வாரையும் அவளுடைய கால்விரலின் முனையில் உடையவளாயிருந்தாள். அவள் நடக்கத் தொடங்கியபோது, தன்னுடைய பற்றிறுக்கிகளை, அல்லது, ஊன்றுகோல்களை ஊன்றி, அதன்பிறகு அவளுடைய சிறு தோளை எடுத்து அந்தச் சிறு காலை தூக்கி அவ்விதமாக அதை வெளியே வைத்து, பின் தன்னுடைய அடியை எடுத்து வைத்தாள். இந்நிலையில், அவள் என்னைக் கண்டாள். அவர்கள் இவர்களை எச்சரித்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும் 46. பிள்ளைகள் என்றால் எனக்குப் பிரியம், நான் அந்தப் பழமையான பின்லாந்து பணத்தில் கொஞ்சத்தைக் கொண்டு தெருவில் போய் அந்த மிட்டாயில் ஒரு பெருங்குவியல் வாங்கினேன், உங்களுக்குத் தெரியும். சகோதரனே, நான் அதை பிள்ளைகளுக்கு பகிர்ந்தளித்தேன். இங்கிருந்து இரண்டு நகர பிளாக்குகளுக்கு எல்லாவிடங்களிலும் என்னைப் பின்தொடர்ந்து ஒரு கூட்டமே எனக்கிருந்தது, ஏனென்றால் நான்-நான் பிள்ளைகளை நேசிக்கிறேன். 47. எனவே அதன்பிறகு நான் அவளை நோக்கிப் பார்த்தேன், அவள் தன்னுடைய சிறு தலையை அந்தவிதமாக தாழ்த்தியிருந்தாள்; அப்பொழுது அவள் ஏதோ தவறு செய்துவிட்டாளோ என்று பயந்துபோனாள். நான் அந்தப் பிள்ளையை நோக்கிப்பார்த்து நடந்துசெல்லத் தொடங்கினபோது, ஏதோவொன்று, "அந்தப் பிள்ளை யிடம் பேசு; அவள் உன்னிடம் பேச விரும்புகிறாள்" என்றது. 48. நான் நின்றேன். அந்த இராணுவ வீரர்களோ தொடர்ந்து... அவர்களால் ஆங்கிலம் பேச முடியாதிருந்தது, எனவே அவர்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள், விசுவாசிக்க மாத்திரம் செய் (Only Believe) என்று பாடிக்கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிந்தது. எனவே நான் அதில் நிற்கத் தொடங்கினேன், அந்த இராணுவ வீரர்களும் அப்படியே அங்கே நின்றார்கள். நான், "இதோ சற்றுபொறுங்கள்" என்றேன். அந்த மற்ற இராணுவ வீரர்களும் திரும்பிப் பார்த்தார்கள். நான், "சற்று பொறுங்கள்" என்றேன். பாருங்கள்? 49. இவ்வாறாக, அந்தச் சிறுமி, நான் அவளை நோக்கிப்பார்த்து, "தேனே, இங்குவா" என்றேன். அவளுக்குப் புரியவில்லை; அவளுக்கு ஏறக்குறைய ஒன்பது, பத்து வயது இருக்கும் என்று தோன்றியது. நான், "தேனே, வா என்றேன். அப்பொழுது அவள் தன்னுடைய சிறிய தலையைத் தாழ்த்திக்கொண்டாள்; நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்பது அவளுக்கு விளங்கவில்லை. மேலும் நான் - நான்... அவள் குழந்தைத்தனமாக மீண்டும் என்னை ஏறிட்டுப் பார்த்து விட்டு, மிக வேகமாக தன்னுடைய சிறு தலையை தாழ்த்திக் கொண்டாள். நானோ அவ்விதமாக அவளிடம் சைகை மூலமாக, "இங்கு வா என்று கூறினேன். அப்பொழுது அவள் தன்னுடைய சிறு கக்க தண்டங்களை ஊன்றி, அந்தக் காலை தூக்கி இதோ அவள் வருகிறாள். நான் அப்படியே அசையாமல் நின்றுகொண்டிருக்க, அங்கு நின்று கொண்டிருந்த இராணுவ வீரர்களும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அப்படியே கவனித்துக் கொண்டி ருந்தார்கள். 50. அவள் அந்த விதமாக, நான் இருந்த இடத்தில், என் பக்கத்தில் வந்தாள். அவள் அப்படியே நின்று, தன்னுடைய சிறு தலையை கீழே தாழ்த்தி வைத்துக் கொண்டாள், அவளுடைய சிறிய மிகப் பழைய கிழிந்துபோன பாவாடையானது கீழே தொங்கிக் கொண்டிருந்தது, அவளுடைய சிறு பழைய தலைமயிர் அவள் முகத்தின்மேல் கிடந்தது. அவள் யுத்தத்தில் பெற்றோரை இழந்த ஒரு பின்லாந்து தேசத்து சிறுமி என்று நான் பின்னர் அறிந்துகொண்டேன்; அவளுடைய தாயும் தகப்பனும் கொல்லப் பட்டிருந்தார்கள். அவள் ஒரு கூடாரத்தில் வசித்து வந்தாள். நான் பார்த்தபோது, அவளும் அந்த விதமாக என்னை நோக்கிப் பார்த்தாள். அவள் என்னை ஏறிட்டுப்பார்த்தபோது, அவளுடைய சிறு கண்களிலிருந்து மிகப்பெரிய கண்ணீர் துளிகள் பாய்ந்து, அந்த விதமாக அவளுடைய முகத்தில் வழிந்துகொண்டிருந்தது. 51. அவள் வந்து என்னுடைய கோட்டை பற்றிப் பிடித்து, அப்படியே என்னுடைய கோட்டிலுள்ள பாக்கெட்டின் மேல் என்னை முத்தமிட்டாள்; அதன்பிறகு அவள் அந்தச் சிறு பழையதும் கிழிந்ததுமான பாவாடையாகிய, தன்னுடைய சிறு பாவாடையை இந்த விதமாக இழுத்து விட்டவாறு, "கிடோஸ்" என்றாள். அதற்கு "உமக்கு நன்றி" என்று அர்த்தம். நானோ மிகவும் கிளர்ச்சியுற்றவனாக உணர்ந்தேன்; நீங்கள் எப்படி அந்தவிதமாக உணருவீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்; அந்தச் சிறு பிள்ளை. அப்பொழுது நான் இந்த விதமாக வெளியே உற்றுப்பார்த்தபோது, அவள் எந்த ஊன்றுகோல்களோ அல்லது பற்றிறுக்கிகளோ இல்லாமல் அங்கு வெளியே நின்றுகொண்டு, அப்படியே தேவனைத் துதித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். 52. நான் சொன்னேன்... நான் உலகத்திலேயே மிகப்பெரிய மாயக்காரனாக இருந்தாலும், தேவன் அந்தப் பிள்ளையின் விசுவாசத்தை கௌரவித்திருப்பார் என்று நம்புகிறேன். அவர் நிச்சயமாக கௌரவிப்பார்; அவர் அதை கௌரவித்திருப்பார். அப்பொழுது நான், "இனிய இருதயமே, உ, ஓ, என்னால் எப்படி உன்னிடம் சொல்வது?" என்றேன். நான்-நான், "தேனே, நீ சுகமடைந்து விட்டாய். தேவன் உன்னை குணமாக்கிவிட்டார்" என்றேன். "ஜீசஸ்," அவள், "கிடோஸ், ஜீசஸ்" என்றாள். வேறு வார்த்தைகளில் சொன்னால், "உமக்கு நன்றி. இயேசுவே." நான், "உன்னை...ஆக்கிவிட்டார்" என்றேன். வேறு வார்த்தைகளை என்னால் அறிய இயலவில்லை, நீங்கள் பாருங்கள், நான், "உன்னைச் சுகப் படுத்திவிட்டார். கிடோஸ் ஜீசஸ் உன்னைச் சுகப்படுத்தி விட்டார்" என்றேன். அவளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதன்பிறகு அவர்கள்... இதோ சகோதரன் பாக்ஸ்டர் கதவண்டையில் வந்து, "வாரும், வாரும்" என்றார். நான் - நான், "நல்லது, ஏதோவொரு வேளையில், அவள் அறிந்து கொள்ளும்படி தேவன் செய்வார், எனவே நான் அப்படியே உள்ளே போவேன். அவள் சரியாகி விடுவாள்" என்று நினைத்துக்கொண்டேன். 53. எனவே நான் உள்ளே போனேன், ஒரு பெரிய ஜெப வரிசை எங்களுக்கு உண்டாயிருந்தது. அப்பெரிய குவியல் கக்க தண்டங்களையும் மற்றும் காரியங்களையும் அந்தப் புத்தகத்திலுள்ள படத்தில் நீங்கள் கண்டீர்கள், அவை என்னைச் சுற்றிலும் அந்த விதமாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த... உடனே. 54. அந்த இரவிலே என்ன நடந்தது? அங்கு ஏறக்குறைய எட்டு அல்லது பத்து பேர் மேடைக்கு வந்தார்கள். அதன்பிறகு, மாறுகண் பார்வை உடைய ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, லாப்லாந்து வட்டாரத் தைச் சேர்ந்த ஒரு-ஒருவித பெண் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தாள்; அவள் அதை தரையில் கிடத்தியிருந்தாள். பரிசுத்த ஆவியானவர் சுற்றிலும் அசைவாடின போது, என்னால் அவளைப் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. நான், "கர்த்தாவே, என்னால் அந்தப் பெயரை கூற முடியவில்லை; நான் அதை எழுத்துக் கூட்டி சொல்லட்டும்" என்று நினைத்தேன். 55. நான் அவளுடைய பெயரை எழுத்துக்கூட்ட தொடங்கி, அந்த விதமாக, அவள் யாரென்றும், அவளைக் குறித்த எல்லாவற்றையும், மற்றும் அவளுடைய குழந்தைக்கு என்ன தவறுள்ளது என்றும் அவளிடம் கூறினேன். "அந்தப் பிள்ளையைத் தூக்கி அதைப் பார்" என்று அது சொன்னது; இப்பொழுது, அவள் ஒரு... என்று அதை எழுத்துக்கூட்டி சொல்லிக்கொண்டிருந்தேன். அவள் அதை எப்படி புரிந்துகொண்டாளோ என்று எனக்குத் தெரியவில்லை. அவள் அந்தக் குழந்தையை திடீரென்று தூக்கி அதை உற்றுப்பார்த்தாள், அப்பொழுது குழந்தையின் கண்கள் அவைகள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு நேராகிவிட்டன. அவள் ஏறக்குறைய.... அவள் ஏறக்குறைய திடீர் மனக்கிளர்ச்சியின் உணர்வுதாக்கத்தினால், அப்படியே அந்தத் தரையில் மேலும் கீழுமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள், அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள்... 56. அதன்பிறகு எனது சகோதரனாகிய ஹாவர்டு, இப்பொழுது பில்லி செய்வது போன்று, அவன் என்னைப் பக்கவாட்டில் தொட்டபோது... நான் அப்படியே அந்தத் தரிசனத்தின் கீழாக ஏறக்குறைய தன்னுணர்வற்ற நிலையில் இருந்தேன். அவன் என்னை அந்த விதமாக, இது கிளம்பவேண்டிய நேரம்" என்று தட்டினான். நான் அங்கிருந்து போகத் தொடங்கினபோது, ஏதோவொன்று, "சற்றுப்பொறு; இன்னும்கூடுதலாக சிலரை அழை என்றது. நான், "சற்றுப்பொறு, ஹாவர்டு. இப்பொழுது என்னைக் கொண்டு போகாதே" என்றேன். அவன், "ஏன்?" என்று கேட்டான். நான், "இன்னும் ஐந்துபேரை நாம் அழைப்போம்" என்றேன். நான் திருமதி.ஐசக்ஸனிடம் சொல்லி, "எந்த எண்களை நீ அழைக்க வேண்டுமென்று, பின்லாந்து மொழியில் அழைப்புவிடு..." என்றேன். 57. அவள் அடுத்த எண்களை அழைத்தாள். தேவனுடைய கிருபையினால், அறையிலிருந்து, ஜெப அட்டையோடிருந்த அடுத்தவள் அந்தச் சிறுமியாக இருந்தது; தேவன் எப்படியாக தமது இராஜாதி பத்தியத்தில் (sovereignty) கிரியை செய்கிறார். 58. நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்லுவது என்னவென்றால்: என்னுடைய ஜீவியத்தில் நான் எப்பொழுதாவது கண்ட மிகப்பெரிய காரியம் என்ன வெனில், உங்களைத்தானே அப்படியே தேவனுக்கு ஒப்புவித்து, ஆவிக்குள்ளாக நடந்து, அவர் எவ்வாறு உங்களை வழிநடத்தி காரியங்களைச் செய்வார் என்று தொடர்ந்து அனுதினமும் பார்த்துக்கொண்டிருப்பது தான். 59. இந்தச் சிறுமி வருவதை நான் கண்டபோது, "கர்த்தருக்குத் துதி உண்டாவதாக" என்று நினைத்தேன். அவர்கள் அவளை மேலே மேடைக்கு கொண்டுவந்து, அவளுக்கு உதவி செய்தார்கள். வாயில் காப்பதுடன் வருபவரை இட்டுச் சென்று இருக்கைகாட்டும் பணியாளர் களில் இரண்டு அல்லது மூன்று பேர் அவளை மேலே என்னிடம் கொண்டு வந்தார்கள், அவளைச் சுமந்து கொண்டு வந்து, அவளை உட்காரவைத்தார்கள். நான், "இப்பொழுது, திருமதி. ஐசக்ஸன், இதை கவனி. இப்பொழுது, நான் சொல்லும் வார்த்தைகளை அப்படியே சொல்லு" என்றேன். அதற்கு அவள், "நான் சொல்லுகிறேன்" என்றாள். 60. நான், "இனிய இருதயமே, நீ சற்றுநேரத்திற்கு முன்பு, அங்கே வெளியில் வைத்து, என்னுடைய பாக்கெட்டை முத்தம் செய்தபோதே இயேசு கிறிஸ்து உன்னுடைய விசுவாசத்தை கனம் பண்ணிவிட்டார். தேவனுடையது என்று நீ எண்ணின காரியங்களுக்கு மரியாதைகள் செலுத்திக்கொண்டிருந்தாயே. தேவன் உன்னைச் சுகப்படுத்திவிட்டார். இப்பொழுது, நீ அங்கு போய் உட்காரு, அந்தப் பற்றிறுக்கிகளை (braces) உன்னைவிட்டு எடுத்துப்போடும்படி ஊழியக்காரர்களில் சிலரையோ அல்லது ஏதோ சிலரையோ கொண்டிரு. நீ உன்னுடைய கரத்தை இந்த விதமாக உனது இடுப்பின் மேல் பிடித்திரு" என்றேன். அவளை தைரியமாக இருக்கும்படி செய்ய ஏதோவொன்றைச் செய்யும்படி அவளிடம் கூறினேன், உங்களுக்குப் புரிகிறதா? 61. எனவே நான், "நீ வரும்போது... எப்போது நீ... அவர்கள் அந்த பற்றிறுக்கியையும், அந்தப் பெரிய இரும்பு கொக்கியையும் இங்கே உன் காலின் கீழிருந்து எடுத்துவிடும்போது, அவர்கள் அதை எடுத்துவிடும் போது, உன் கால் குட்டையாக இருப்பதற்கு ஏற்ப, அந்தப் பற்றிறுக்கி இருப்பதாக நீ நினைக்கும் அவ்வளவு தூரத்திற்கு நீ உன் கரத்தை கீழே உன்னுடைய காலை மூட்டு நோக்கி நகரும்படிசெய்" என்றேன் 62. இந்நிலையில் நான், "இப்பொழுது, அடுத்த நபரைக் கொண்டு வாருங்கள்" என்றேன். அவர்கள் அடுத்தவரைக் கொண்டு வந்தார்கள். ஊழியக்காரர்கள் அவளை அங்கே கொண்டு சென்றார்கள். திருமதி. ஐசக்ஸன் அதை மொழிபெயர்க்க, அவர்கள் அவளை அங்கே கொண்டு போய், அக்காரியத்தை (வாரை) அவிழ்க்கத் தொடங்கினார்கள். 63. இந்நிலையில், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவள் திடீரென்று கூச்சலிடுவதை நான் கேட்டேன். இரண்டு கால்களும் அவைகள் எவ்வளவு இயல்பாக இருக்க முடியுமோ அவ்வளவு இயல்பாக இருக்க, இதோ அவள் மேடையின் குறுக்காக வந்து, அந்த ஊன்றுகோல்கள் அவளது தலையின் மேலிருக்க, அலறிக்கொண்டும் அவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டும் இருந்தாள். ஓ, என்னே. அது அப்படியே தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றன்பின் ஒன்றாக நடந்துகொண்டேயிருந்தது. 64. நான் அந்த இரவில் வீட்டிற்குச் சென்று, அங்கு பார்த்தபோது, அந்த பின்லாந்துக்காரர்கள் தங்கள் கரங்களை மேலே உயர்த்தியபடி, தேவனைத் துதித்துக் கொண்டு நடந்து போவதைக் கண்டேன். அப்போது தான் தூதனானவர் மற்ற சிறுவனைக் குறித்து தரிசனமானார். அந்தச் சிறுவன் எப்படியாக அங்கே கிடந்து மரித்துக் கொண்டிருந்தான் என்றும், மருத்துவர்கள் அவனைக் கைவிட்டிருந்ததையும், அவன் சுகமடைவான் என்று பரிசுத்த ஆவியானவர் சொன்ன நேரத்தில் அப்படியே துளிகூடப் பிசகாமல் அடுத்த மாலையில் அவன் சுகமடைந்தான் என்ற அதைக்குறித்த கதையை நீங்கள் புத்தகத்தில் வாசித்திருப்பீர்கள். அவன் அங்கிருந்து சென்றான், இயல்பாகவும் நலமாகவும், இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கர்த்தர் அவர்களைச் சுகப்படுத்தினார் என்ற கடிதங்கள் இன்னும் அவர்களிடமிருந்து கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவர் இன்னும் மாறாமல் இயேசு கிறிஸ்துவாகவே இருக்கிறார். 65. இது இனிமையாக உள்ளது: எனது சிறு சகோதரியே, இந்த தசமபாகத்திற்காக (tithing) உனக்கு நன்றி. ஒரு ஊழியக்காரனாக, நான் தசமபாகத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம். எனவே, எனது சிறு பெண்சிநேகிதியே, நான் மிகவும் அன்போடு உனக்கு நன்றி செலுத்துகிறேன். தேவன் எப்பொழுதும் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ குண்டாக இருக்கிறாய் என்று உன்னுடைய அம்மா உன்னிடம் சொல்லவிடாதே. நீ குண்டாக இல்லை. புரிகிறதா? சரி. இங்கே உள்ளே அவள் சொல்லியிருக்கிறாள், நான் அதை வாசிக்காமல் இருந்து விட்டேன்; அவள், "நான் குண்டாக இருக்கிறேன் என்று அம்மா கூறுகிறார்கள், ஆனால் நான் அவ்வாறு இல்லை" என்று சொல்லியிருக்கிறாள். நீ அதேபோல் இருக்கிறாய் என்று நான் நம்பவில்லை. எனவே, நீ அவ்வாறு இருந்தால், அதை உனக்குச் செய்ய தேவனுக்கு ஏற்றதாய் இருக்குமானால், தேனே, உன்னுடைய இருதயத்தின் வாஞ்சையை தேவன் உனக்கு அருளுவாராக என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது 66. இப்பொழுது, சம்பவித்த ஒரு அனுபவத்தை இன்றிரவில் கூறப்போவதாயிருந்தேன் (give). முதலாவது, நான் வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன். இப்பொழுது, நாளை பிற்பகலில்... (ஆராதனைகள் எப்போது துவங்குகிறது, சகோதரனே? 2:30 மணிக்கு.) இப்பொழுது, நாளை 1:30 மணிக்கு, ஜெபிக்கப்படும் படியாக ஜெப வரிசையில் இருக்க.. வர விரும்பும் யாவருக்கும், நாங்கள் ஜெப அட்டைகளை விநியோகித்து, சென்ற இரவில் நாங்கள் கொண்டு வந்தது போன்று முழு கூட்டத்தினரையும் கொண்டு வருவோம். என்னுடைய ஊழியமானது சென்ற இரவிலிருந்து அவ்விதமாகத்தான் துவங்கி தொடர்ந்து போய்க்கொண் டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஜெப அட்டை தேவைப்படுகிற நீங்கள் யாவரும் நாளை பிற்பகல் 1:30 மணிக்கே வந்துவிடுங்கள், அதைக் காட்டிலும்- காட்டிலும் தாமதமாக வந்துவிடாதீர்கள், 2 மணிக்கு அல்லது 2:15 மணியைவிட தாமதமாக இங்கே வராதீர்கள், ஏனென்றால் அந்நேரத்தில் (ஜெப) அட்டைகள் எல்லாம் அநேகமாக விநியோகிக்கப்பட்டு முடிந்திருக்கும் (given out), அப்பொழுது அது கூட்டத்தின் மீதியான பகுதியை குறுக்கிடாது. 67. இப்பொழுது, நான் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்த போதுள்ள அந்தச் செய்திகளில் சிலவற்றை கேட்க வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு இருக்குமானால், இந்த பையன்களான சகோதரன் கோட்டும் (Brother Goad) சகோதரன் மெர்சியரும் இங்கே அவைகளை வைத்திருக்கிறார்கள். ஜீன், அவர்கள் எங்கே? கட்டிடத்தின் பின்னாலுள்ள நிலையத்தில் (stand) இருக்கிறார்கள், அவர்களிடம் இசைத்தட்டுகளும் (records) ஒலிநாடாக்களும் உள்ளன. இந்தப் பையன்கள், இவர்கள்... அவைகள் அவர்களுக்கு உரியதாகும், மேலும் அவர்கள்... நீங்கள் அவைகளைப் பெற்றுக் கொள்ள அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள். அவர்களுடைய விற்பனைகளிலும் இன்ன பிறவற்றிலும் நான் அதை பரிசீலனை செய்து பார்த்திருக்கிறேன். 68. இந்தப் பையன்கள் எவ்வாறு என்னோடு இணைந்து கொண்டார்கள் என்ற கதையை சென்ற இரவில் நான் உங்களிடம் சொன்னேன். சமீபத்தில் ஒரு ஊழியக்காரரிடம் ஒரு ஒலிநாடாவை வாங்கிவரும்படி (ஒருவரை) அனுப்பினேன். அவர் அதற்காக எனக்கு 9 டாலர்கள் விலையாக செலுத்தும்படி கேட்டுக்கொண்டார் (charged). நான் இந்தப் பையன்களிடம் விசாரித்து பார்த்தபோது (checked), அது ஏறக்குறைய இரண்டரை டாலர்களோ, அல்லது, அதைப்போன்ற ஏதோவொன்று என்று நினைக்கிறேன்; இவர்கள் ஒரு ஒலிநாடாவிலிருந்து ஏறக்குறைய 35, 40, ஒருக்கால் 50 காசுகள் தான் (cents) ஈட்டுகிறார்கள், இவர்கள் ஸ்காட்ச் ஒலிநாடா (Scotch Tape) என்ற மிகச்சிறந்த ஒலிநாடாவை வாங்கி, மிகச் சிறந்த முறையில் (அதைச்) செய்கிறார்கள். அவை களுக்கு ஒரு பெரிய விலையை இவர்கள் வைப்பார்கள் என்றால், நான் சரியாக இப்பொழுதே: "இனி ஒலிநாடா விற்பனை கிடையாது!" என்று இவர்களிடம் சொல்லியிருப்பேன். இல்லை, ஐயா. 69. இப்பொழுது, இவர்கள் தங்களை நடத்திக் கொள்ள ஏதோ வொன்றைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது, ஏனென்றால் இவர்கள் ஏராளமான ஒலிநாடாக் களை உடைத்து விடுகிறார்கள் மற்றும் எல்லாமும், அதன்பிறகு இவர்கள்-இவர்கள் ஜீவனமும் பண்ணியாக வேண்டும். இவர்களில் ஒருவன் விவாகமானவன், எனவே நாம்... இவர்கள் ஜீவனம்பண்ணியாக வேண்டும், அவைகளிலிருந்து சிறிது (பணம்) ஈட்டும்படியான உரிமை இவர்களுக்குண்டு. அதன்பிறகு சிலசமயங்களில், இவர்கள் சேதமடைந்து உடைந்து போனவைகளையும் வைத்திருந்து, அவைகளை வெளியே அனுப்பி, அவைகளுக்கான பணத்தைப் பெற்றுக்கொள்வதுமில்லை, அது எவ்வாறு நடைபெறுகிறது என்று உங்களுக்குத் தெரியும். அங்கே பின்னாலிருக்கும் எங்கள் புத்தகங்களைப் போன்று: நான் அவைகளை சுகமளித்தலின் சத்தம் (Voice of Healing), 40 சதவீதம் குறைக்கப்பட்ட (less) விலைக்கு வாங்குகிறேன். அதனோடு கூட, அவைகளை விற்பனை செய்து, கட்டணங்களை சமாளிப்பதற்காக நாங்கள் பணம்செலுத்த வேண்டியிருக்கிறது என்னும்போது.. நான் எப்போதுமே, "யாருக்காவது ஒரு புத்தகம் தேவைப்பட்டால்..." இந்த உத்தரவை எல்லா நேரமும் பையன்களிடம் தெரிவித்து விடுகிறேன்: யாருக்காவது ஒரு புத்தகம் தேவைப்பட்டு, ஒரு ஏழை வயதான மனிதர் நடந்துவந்து, தம்முடைய பாக்கெட்டில் கை போட்டுபார்த்து, "இவை என்ன விலை?" என்று கேட்பாரானால், "நல்லது, இவைகள் 75 காசுகள் (cents)," அல்லது, அவை என்னவாக இருந்தாலும்.... டாலர், அல்லது, அவைகளின் விலைமதிப்பு என்னவாக இருந்தாலும். அதற்கு அவர், "60 காசுகள் தான் (cents) இருக்கிறது" என்று சொல்லுவாரானால். அவரிடம், "தகப்பனாரே, புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய், அதைக்குறித்து மறந்துவிடும்" என்று சொல்லுங்கள் என்று. 70. பாருங்கள்? அது போகட்டும். அவ்விதமாக, புத்தகங்கள் தாமே தாங்குவதும் கிடையாது. அந்த புத்தகங்களை வைத்து சபைதான் எனக்கு உதவிசெய்ய வேண்டியுள்ளது. நாங்கள்... நாங்கள் அவைகளுக்கு பணம்செலுத்தும் நேரத்தில், அவைகள் அச்சிடப்படு கிறது, சேதமடையவும் செய்கிறது, துண்டுகளாக கிழிந்தும் போகிறது, மற்றும் எல்லாமுமாக ஆகிவிடுகிறது, நாங்கள் இலவசமாக கொடுக்க வேண்டியிருப்பதும் மற்றும் காரியங்களும், ஏன், அவைகள்-அவைகள் don't... அவைகள் தாமே பங்-... பங்களிப்பதில்லை. ஆகையால், நாங்கள் பணம் சம்பாதிக்க எங்களுக்கு எதுவுமே கிடையாது. நாங்கள் செய்கிற எல்லாமே... 71. மேலும் நானே: என்னுடைய அன்பின் காணிக்கை மிஷன் ஊழியக்களங்களுக்குத் தான் போகிறது. நான் அதைப் பார்ப்பதில்லை. அது நல்ல காரியத்திற்கே போகிறது. எனது சபையிலிருந்து வாரத் திற்கு 100 டாலர்கள் எனக்குக் கிடைக்கிறது, அமெரிக்காவில் இருந்தாலும், அமெரிக்காவிற்கு வெளியே இருந்தாலும், அது எங்கிருந்தாலும், எனக்கு வருடத்திற்கு 5200 டாலர்கள் கிடைக்கிறது. அதைக்கொண்டுதான் நான் ஜீவனம் பண்ணுகிறேன், எனக்கு இருப்பது போன்ற ஒரு பெரிய குடும்பத்தோடு, நாங்கள் அருகிலேயே ஜீவிக்க வேண்டியுள்ளது. மேலும் நான் சபையின் போதகர் இல்லத்திலேயே வசிக்க வேண்டியுள்ளது. 72. நாங்கள் இங்கே ஒருபோதும் பணத்திற்காக வருவதில்லை; அது எங்கள் உள்நோக்கமல்ல. நாங்கள் அனுமதிக்கும் ஒரே காரணம் என்னவென்றால், புத்தகங்களை விலைக்கு வாங்கி அவைகளை மறுபடியும் விலைக்குக் கொடுக்கிறோம், மேலும் ஒலி நாடாக்களையும் அதையும் விற்கிறோம், காரணம் என்னவென்றால் அது இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக ஊக்கமூட்டுதலைச் செய்யும் என்று நாங்கள் நினைப்பதால் தான். அதில் பணம் என்ற எந்தக் காரணமுமே இல்லை. ஆனால் ஓய்வுநாளில் புத்தகங்களோ அல்லது ஒலி நாடாக்களோ அல்லது வேறு எதுவுமோ விற்பனை செய்ய நான் அனுமதியளிப்பதில்லை. அது நாளைய தினமாயிருக்கிறது. நாங்கள் ஞாயிற்றுக் கிழமையில் அவைகளை விற்பதில்லை; நாங்கள் அதை ஒருபோதும் செய்ததில்லை, நாங்கள் அதைச்செய்ய ஒருபோதும் உத்தேசித்ததுமில்லை. எனவே புத்தகங்களில் சிலதோ, ஒலிநாடாக்கள் அல்லது இசைத்தட்டுகளில் (records) சிலதோ, உங்களுக்குத் தேவைப்படுமானால், இன்றிரவு அவைகள் கட்டிடத்தின் பின்னால் இருக்கும். 73. உங்களுக்கு அது கிடைக்குமானால், --- என்று நினைக்க வேண்டாம். உங்களிடம் பணம் எதுவும் இல்லை என்றாலும், எப்படியும் அது உங்களுடையது தான். நீங்கள் அதை விலைக்கு வாங்கும்போது, அது ஐம்பது காசிற்கோ, அல்லது நீங்கள் அதற்கு செலுத்தின கிரயம் எதற்கும் பெறுமானமுள்ளதாக இல்லை என்றால், அதைச் சரியாக திருப்பி அனுப்பிவிடுங்கள், அல்லது அதை ஒதுக்கிவைத்துவிட்டு எங்களிடம் சொல்லுங்கள், அல்லது அதை வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள். அதை வேறு யாருக்காவது கொடுத்து, அனுப்பிவிட்டு அதற்கு பெறுமான முள்ளதாக அது இல்லை என்று எங்களிடம் சொல்லுங்கள்; அப்பொழுது பணம் உங்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். எனவே எங்களுக்கு... எதுவும் அவசியமில்லை. எந்த செலவினங்களும், அதைப் போன்ற எதுவுமே. ஒன்றுமே தேவையில்லை. 74. ஆனால் அன்பின் காணிக்கை வெளிநாட்டு ஊழியக் களங்களுக்காக. அதை நானே வாங்குவதில்லை; அது என்னுடைய ஊழியக்களத்தின் காரியதரிசி மூலமாகத்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது; ஊழியக்காரர்கள் மூலம் எண்ணி, அவரிடம் கொடுக்கப்பட்டு, வங்கியில் சேமித்து வைக்கப்படுகிறது. நான் வெளிநாடுகளுக்கோ இன்னபிறவற்றுக்கோ போகும்போது, இந்த இதே விடுதலையின் செய்தியை வெளிநாட்டு ஊழியக்களங்களில் வலது கை எதுவென்றும் இடது கை எதுவென்றும் கூட அறியாத ஜனங்களிடம் கொண்டுசெல்ல இது எனக்கு துணைபுரிகிறது (supports). அங்குதான் அது போகிறது. யாராவது என்னிடம் சொன்னாலொழிய எவ்வளவு காணிக்கை என்றும் கூட எனக்குத் தெரியவே தெரியாது. நான் வீட்டிற்குப் போகும்போது, நான் ஒரு மாதத்திற்கு பயணம் போய் விடுவேன், அப்பொழுதுதான் நான் என்னுடைய கடன்கள் மற்றும் காரியங்களை முழுவதுமாக செலுத்தி தீர்க்க வீட்டிற்கு திரும்பி வரும் போது, எனக்கு 400 டாலர்கள் கிடைக்கும். இப்பொழுது, நாங்கள் அவ்விதமாகத்தான் ஜீவனம்பண்ணுகிறோம், ஆகையால் எங்களிடம் எந்த... கிடையாது என்று நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். இல்லை, இல்லை... நாங் கள் பணத்திற்காகவோ, அல்லது அதைப்போன்ற எதற் காகவோ வரவில்லை. எங்களிடத்தில் என்ன இருக்கிறது என்பதை மிகவும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், அப்பொழுது நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். 75. இப்பொழுது, இன்றிரவில் bef-... நான் ஒரு சிறு மூல பாடத்தை (text) எடுக்க விரும்புகிறேன், சற்றுநேரம் அதிலிருந்து பேச, நான் அதை அழைக்க வேண்டுமானால். நாம் அதை அணுகுவதற்கு முன்பாக, ஜெபத் திற்காக சற்றுநேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 76. பரலோகப் பிதாவே, எங்கள் இருதயத்தின் மிக ஆழத்திலிருந்து நாங்கள் உமக்கு நன்றிசெலுத்துகிறோம். கர்த்தாவே, எங்கள் சகோதரன் ராபர்ட்ஸ், டாமி ஆஸ் பார்ன் மற்றும் அவர்களைப் போன்று ஊழியக்களத்தி லிருக்கிற அந்த மகத்தான மனிதர்களை குறிப்பிடாமலே, எப்படிப்பட்ட அனுபவங்களை நீர் என்னுடைய சிறு கூட்டங்களில் செய்வதை நான் கண்டிருக்கிறேன். என்னுடைய சொந்த ஆராதனைகளிலும், மகத்தான காரியங்களைக் குறித்தும், மரித்தோரை உயிரோடெழுப்புவதைக் குறித்தும், அநேக வேதாகமங்களை எழுதப் போதுமானதாக நீர் செய்வதை நான் கண்டிருக்கிறேன். மருத்துவர்கள் அதற்கான வாக்குமூலத்தில் கையொப்பமிடும்படி செய்தீர். குருடரையும், செவிடரையும், ஊமையரையும் சுகமாக்கி வருகிறீர். நீர் முன்னறிவித்து, சொல்லுவது, ஒவ்வொரு முறையும் துளிகூடப் பிசகாமல், முற்றிலும் சரியாக சம்பவிப்பதைக் கவனிக்கிறோம். நீர் தேவனாயிருக்கிறீர், நீர் தேவனாயிருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். 77. பிதாவே, இன்றிரவில் விசுவாசியாத ஒருவர் எங்கள் மத்தியில் இருப்பாரானால், தயவுகூர்ந்து அவரோ அல்லது அவளோ தங்கள் அவிசுவாசத்தை உம்மிடம் ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியாகிய தேவனிடமிருந்து வரும் மிகவும் தீரமான விசுவாசத்தின் ஆவியை பெறும்படியான ஏதோவொன்று இன்றிரவில் செய்யப்படுவதாக அல்லது சொல்லப்படுவதாக. இதை அருளும், கர்த்தாவே. அவர்களுடைய பொல்லாங்கை எடுத்துப்போட்டுவிட்டு, அவர்களுக்கு நன்மையானவைகளைத் தர நீர் ஆயத்தமாயிருக்கிறீர். ஓ, பிதாவே, நீர் மிகவும் நல்லவராயிருக்கிறீர்; அதற்காக நாங்கள் உம்மை நேசிக்கிறோம். 78. எங்குமுள்ள உமது ஊழியக்காரர்களுக்கு நீர் தெய்வீக ஏவுதலைக் (inspire) கொடுத்தருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கூடுமானால், பெய ரளவிலான நாகரீகமானது தேவனுடைய உண்மையான ஒளியை மூடி அணைக்கிறதை நாங்கள் காண்கையில், நாங்கள் ஜீவித்துக்கொண்டிருக்கும் இந்த இருண்ட மணிவேளையில் அவர்கள் தாமே எரிகிற தீவட்டிகளாக மாறுவார்களாக. ஆயினும், இயேசு வரும் வரையில், அந்தத் தீவட்டியானது ஜனங்களுடைய இருதயங்களில் கொழுந்துவிட்டு எரிந்து, இன்றிரவு இந்தப் படையின் அணிவகுப்புகளோடு இன்னும் அதிகமாய் கூட்டப்பட வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், பிதாவே. எல்லா வியாதிப்பட்டவர்களையும், துன்பப்படுகிற எல்லாரையும் சுகப்படுத்தியருளும், உம்முடைய கிருபையும் இரக்கமும் இவர்கள்மேல் தங்கவேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். வரப்போகிற உலகத்தில் இவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தருளும், இவ்வுலகத்திலும் இவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தருளும். "நீ எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்ந்து, சுகமாயிருக்கும் படி விரும்புகிறேன்" என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. 79. உலகத்தை வீசியடித்துச் சென்றுள்ள இந்த மகத்தான, பரிசுத்த ஆவியின் எழுப்புதலில் பிரதிநிதித் துவமளிக்கும் இப்பள்ளத்தாக்கு முழுவதும் மற்றும் எங்குமுள்ள சபைகளுக்கு தெய்வீக ஏவுதலைத் தந்தருளும் (Inspire). பிதாவே, நீர் இதை ஒரு மகத்தான விதத்தில் மறுபடியுமாக எழுப்புதல் அடையச்செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இங்கே ஒரே கானில், ஒவ்வொரு சபையிலும் ஒரு மகத்தான எழுப் புதல் மீண்டும் துவங்குவதாக. 80. ஓய்வுநாளாகிய நாளைய தினத்தில், சபைகள் நிரம்பி, ஊழியர்கள் கொழுந்துவிட்டு எரிந்து, ஆத்துமாக்கள் உள்ளே கொண்டுவரப்பட்டு, அநேகர் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு தண்ணீர் ஞானஸ்நானம் அவசியமாயிருப்பதாக. இதை அருளும், பிதாவே. அன்றொரு இரவில் நாங்கள் அதைப் போதித்தது போன்று, உம்முடைய மருந்துச்சீட்டை பின்தொடர்ந்து வருகிற, பரிசுத்த ஆவியால் நீர் தாமே ஒவ்வொருவரையும் நிரப்புவீராக. பிதாவே, வாக்குத்தத்தமானது ஒவ்வொரு தலைமுறையினருக்கும், "விருப்பமுள்ள எவருக்கும்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைப்பவர்களுக்கும்" உண்டாயிருக்கிறது என்பதை இவர்கள் அறிந்துகொள்ளும்படி நீர் செய்தருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அதைத்தான் உம்முடைய மருந்துச்சீட்டு கூறியுள்ளது; அதன் ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். பிதாவே, நீர் இதை ஒவ்வொருவருக்கும் அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். எங்களுடைய பாவத்தை எங்களுக்கு மன்னித்தரு ளும். ஆராதனையை உமது கரங்களுக்குள் எடுத்து உமக்கே மகிமையைப் பெற்றுக் கொள்ளும், இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 81. இப்பொழுது, பரிசுத்த மத்தேயு 4-வது அதிகாரம் 17-ம் வசனத்திலிருந்து வெறுமனே ஒரு வரியை மட்டும் வாசிக்க விரும்புகிறேன்: அதுமுதல் (From that time) இயேசு: ராஜ்யம்.... மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். 82. இப்பொழுது, அந்த முதல் மூன்று வார்த்தை (களான) அந்த நேரம் முதற்கொண்டு (From That Time) என்ற, பொருளை எடுக்க விரும்புகிறேன். இப்பொழுது இன்ன இன்ன நேரத்தில் என்று நினைவுகூரக்கூடிய எல்லாமே இங்கேயுள்ளது. "அந்த நேரம் முதற்கொண்டு" என்று நாம் கூறுகிறோம். அந்தச் சிறு பையனையும், சிறு பெண்ணையும் போன்று, நாம் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்தோம் என்றும், அதைப்போன்றதொரு காரியம் நேரிட்டது என்றும் நம்மால் கூற முடியும், அந்த நேரம் முதற்கொண்டு" காரியங்கள் நமக்கு மாறி விட்டன. 83. இன்றிரவு நாம் இங்கே இந்தப் பட்டணத்திற்குள் சென்று, இங்கே இந்தப் பள்ளத்தாக்கிலுள்ள, உங்களுடைய அழகான சிறு பட்டணத்தின் வீதிகளில் நடந்து திரியும் மிகவும் இழிவானதும் ஒழுக்கக்கேடானதுமான பெண்களைக் காண முடியும். நான் அவள் பக்கத்தில் அமர்ந்து, நான், "பெண்மணியே, உன்னுடைய கதையை நீ என்னிடம் கூற விரும்புகிறேன்" என்று சொல்லுவீர்கள்ளானால். 84. அப்பொழுது அவள் கூறத் தொடங்குவாள்; அவள் இவ்விதமான ஏதோவொன்றைக் கூறலாம்: "சகோதரன் பிரான்ஹாமே, நான் ஒரு லீலி புஷ்பத்தைப் போன்று அவ்வளவு பரிசுத்தமாக ஒரு நாளில் இருந் தேன். புகழ்வாய்ந்த அந்தஸ்துடைய ஜனங்கள் மத்தியில் நான் என்னுடைய தலை நிமிர்ந்தவாறு இருக்க முடிந்தது; நான் சபைக்குச் சென்று, அப்படியே அருமையாக உணர முடிந்தது. ஆனால் ஒரு இரவிலே நான் ஒரு குறிப்பிட்ட வாலிபனோடு வெளியில் இருந்ததொரு நேரம் வந்தது, அவன் இன்ப உணர்ச்சியைத் தூண்டுவதும் பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடக் கூடியதுமான ஆபத்தான வெறி மயக்கப் பொருள் வகையோடு (Coke) மதுபானத்தையும் எனக்கு கலந்துகொடுத்தான், அந்த நேரம் முதற் கொண்டு..." என்று. 85. அல்லது அவளோடு சென்று அவளை தூரமாயிருந்த ஒரு குறிப்பிட்ட நடனத்திற்கு வற்புறுத்தி (இணங்கவைத்த) விசுவாசியல்லாத வேறொரு பெண் சிநேகிதியாக அது இருக்கலாம். அப்பொழுது அவள் ஏதோவொரு வாலிபனுடைய கைகளைப் பற்றிப்பிடித்த போது, அந்த நேரம் முதற்கொண்டு. அது எப்போதுமே ஒரு நேரம் முதற் கொண்டுதான் சுட்டிக்காட்டப்படுகிறது. 86. அல்லது நான் இன்றிரவில் இங்கே உங்களுடைய பட்டணத்திற்குள் போய், உங்களிடம் இருப்பதிலேயே மிக மோசமான குடிகாரனைக் கண்டுபிடிக்கலாம். வாலிபமாகவோ அல்லது வயோதிபமாகவோ இருக்கும் அந்த மனிதனுடைய பக்கத்தில் நான் உட்கார்ந்து, அவனிடம், "நண்பா, நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன்: நீ இங்கே இந்தப் பட்டணத்தில் ஒரு-ஒரு பெரிய தொழிலாளியாக இருந்திருக்க முடியும் என்னும்போது. நீ ஏதோவொரு சபையில் பணியாள னாகவோ, அல்லது ஏதோவொரு பெண்ணிற்கு ஒரு உண்மையான கணவனாகவோ, சில பிள்ளைகளுக்கு ஒரு தகப்பனாகவோ இருந்திருக்க முடியும் என்னும் போது, நீ உன்னுடைய வாழ்க்கையை இவ்விதமாக துஷ்பிரயோகம் செய்தது ஏன்? உன்னைக் குடிக்கும்படி செய்து நீ செய்கிறவிதமாக உன்னை செய்ய வைத்தது எது?" என்று கேட்டிருந்தால்; அல்லது, சில பிள்ளைகளுக்கு ஒரு-ஒரு உண்மையான தாயாகவோ, ஏதோ வொரு கணவனுக்கு ஒரு இனிமையான, பாசமுள்ள மனைவியாகவோ இருந்திருக்கக் கூடுமான, குடிபோதை யிலுள்ள ஏதோவொரு பெண்ணிடம் கேட்டிருந்தால். 87. அவர்கள் இவ்விதம் (சொல்லத்) தொடங்கி, "நல்லது,... முதற்கொண்டு. நான் ஒருகாலத்தில் மதுவிலக் கிற்கு ஆதரவளிக்கும் ஒரு நபராகத்தான் இருந்தேன். மது அருந்துவதற்கு எதிராக கற்றுதந்த பாசமுள்ள ஒரு தாயும் தகப்பனும் எனக்கிருந்தார்கள். ஒரு சமயம் வாலிப பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு குறிப்பட்ட பையனோடு ஐக்கியம் வைத்துக் கொண்டேன், நான் -நான் - நானும் பிரபலமாயிருக்க விரும்பினேன், எனவே அவனுடைய உயர்படி நிலையோடு நானும் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். அப்பொழுது நான் என்னுடைய தாய் தகப்பனின் அறிவுரைகளுக்கு விரோதமாக போய்விட்டேன். அவன், "இன்றிரவில் நீ ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருக்க விரும்பினால், நீ கொஞ்சம் மதுபானம் (spirits) குடிக்க வேண்டும்' என்று என்னை இணங்கச் செய்தபோது, நான் என்னுடைய முதலாவது மதுவை அருந்தினேன், அந்த நேரம் முதற்கொண்டு.." 88. அந்தவிதமாகத்தான் அது ஆரம்பிக்கிறது. இங்கே சமீபத்தில், நியூயார்க்கிலே, பழமையான பெந் தெகோஸ்தே ஸ்தாபனத்தில் ஒன்றும், உலகத்திலேயே மிகப்பழமையானவைகளில் ஒன்றுமான நியூயார்க்கிலுள்ள பெத்தானி கூடாரமாகிய, சிஸ்டர் பிரவுன் கூடாரத்தில் (Sister Brown tabernacle), இப்பொழுது ஒரு மேய்ப்பராயிருக்கிற டாக்டர் பெர்க் அவர்கள்; நம்முடைய சகோதரர்களுக்கு அவர்களை நன்கு தெரியும் என்று ஊகிக்கிறேன். 89. அவ்விடத்திலே, நான் அங்கே இருக்கையில், with her சென்று பௌரி தெருவில் (bowery பௌரி என்பது நாடோடிகளும் குடிகாரர்களும் வீடில்லாமல் கைவிடப்பட்ட நிலையிலுள்ள வர்களும் வழக்கமாக செல்கிற (வசிக்கிற) மலிவான ஓட்டல்களும், மது அருந்தும் இடங்களும் உடைய நியூயார்க் பட்டணத்திலுள்ள ஒரு தெருவாகும். வேலைபார்த்த, சலவைத்தொழில் செய்பவளும், சுவீடன் நாட்டுப் பெண்மணியுமாகிய சோபியா அவர்களை நான் சந்திக்க வேண்டியிருந்தது. மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு தடுப்பூசி (yellow fever shot) போடும்படி நான் இரண்டு நாட்கள் தாமதம் செய்ய வேண்டியிருந்தது; அதை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாமலே நான் ஆப்பிரிக்காவுக்கு போய் விடலாம் என்று நினைத்தேன், ஆனால் நான் கடந்து செல்லவோ, அல்லது அந்தப் பெரிய விமானத்திற்குள் போகவும் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள இராணுவ கப்பல் கட்டும் தளங்களுக்குப் (Navy yards) போக இரண்டு நாட்கள் நான் காத்திருக்க வேண்டியிருந்தது. சகோதரன் பெர்க் அவர்கள் (Brother Berg), "நீர் என்ன செய்ய விரும்புகிறீர்?" என்று கேட்டார். நான், "பௌரி தெருவைப் (bowery) போய்ப் பார்க்க விரும்புகிறேன்" என்றேன். "சரி, நாம் போகலாம். எனக்கு அங்கே அநேக மிஷன் ஊழியங்கள் உண்டு" என்றார். 90. நாங்கள் சென்றோம், நான்... எந்த மனிதனும் தன்னுடைய மகனை பௌரி தெருவிற்கு அழைத்துச் சென்று, அவனுக்குக் காண்பிப்பது ஒரு நல்ல காரியமாயிருக்கும் என்று நான் எண்ணுகிறேன். நீங்கள் எப்பொழுதாவது பிரான்சில் இருந்தால், உங்களுடைய மகளை பிகாலிற்கு (Pigalle) அழைத்துசென்று, மனித வாழ்க்கையானது எவ்வளவு சீரழியக்கூடும் என்பதை அவள் காணும்படி செய்யலாம் என்று நான் எண்ணுகிறேன். அவ்வண்ணமாக நான் பௌரி தெரு பக்கமாகப் போனபோது, மனிதர்கள் ஆதரவற்றவர்களாகப் படுத்துக் கிடக்க, வாந்தியினால் அவர்கள் முகத்தை ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன, மேலும் ஓ, போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர்களும், மட்டு மீறிய குடிக்கு ஆட்பட்டவர்களும் (இருந்தார்கள்). 91. நான், ஓ, சகோதரன் பெர்க் அவர்களே, அநேகமாய் இங்கேயிருக்கும் இம்மனிதர்கள் தாங்கள் செய்கிறதைக் குறித்து கவலையேபடாத வீடுகளில் வளர்க்கப்பட்டு, இவர்கள் அப்படியே கட்டுப்பாடற்றவர் களாக தெருவில் போகவிடப்பட்டிருப்பார்கள்" என்றேன். 92. அவர் தன்னுடைய கரத்தை என் தோளின் குறுக்கே வைத்து, "உமக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும்" என்றார். அவர், "சரியாக இங்கே இந்த மிஷன் ஊழியத்தில், நாங்கள் போகிறோம், சென்ற வருடத்தில் அங்கே மரித்துப்போன 180 பேரை வெளியேற்றினோம். வீதிகளிலிருந்து வெளியே எடுத்து அவர்களுக்கு உணவு கொடுக்கவும் இன்னபிறவற்றையும் செய்த போதிலும் இறுதியாக அவர்கள் மரித்துப்போனார்கள்; கிறிஸ்துவுக்குப் புறம்பே இவர்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது" என்றார். மேலும் அதன்பிறகு, இவர்களைக் குணமாக்குவது என்பது, இவர்கள் அதற்கு மிகவும் தூரமாக இருக்கிறார்கள். அவர், "இதோ, இம்மனிதன் இங்கேயிருக்கிறான். இவனை எனக்குத் தெரியும். இவனை எழுப்புங்கள்" என்றார். நான் அவனிடம் சென்று, "ஐயா, நான் உம்மிடம் பேசலாமா?" என்று கேட்டேன். அவர், "நல்லது, இவனால் பேச முடியாமல் இருக்கலாம்" என்றார். 93. ஓ, அந்த மனிதன் இருந்த நிலையை என்னால் கூற இயலாது. அவனுடைய துணிகள் அவன் இடுப்பிலிருந்து கீழேயிருக்க ஒரு பயங்கரமான நிலையில் இருந்தான், அவன் (அவ்விதமான) ஒரு நிலையை அடைந்தவனாய், மேலெல்லாம் ஈரமாகவும் இருந்தது. அவன் அப்படியே மிக மோசமான ஒரு-ஒரு கோலத்தில், நாற்றமடித்தவனாயிருந்தான். நான், "ஐயா, நான் உம்மிடம் பேசலாமா?" என்றேன். 94. சகோதரன் பெர்க் அவனை அசைத்துப்பார்த்தார். நான்... அவன் எழுந்தான். அவர், "நான் சகோதரன் பெர்க்" என்றார். நல்லது, அவனுக்கு சகோதரன் பெர்க்கைப் பற்றி எதுவும் தெரியாதிருந்தது. அவன் அப்பொழுதும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தான். நான், "நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்" என்றேன். "நீ எவ்விதமான வீட்டில் வளர்க்கப்பட்டாய்?" என்று கேட்டேன். அவன், "மது அருந்த போதிய பணம் எனக்கு தருவீர்களா?" என்று கேட்டான். 95. அதற்கு நான், "நான் சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரன். நான் கர்த்தருடைய பணத்தை மது அருந்த ஒரு மனிதனுக்குக் கொடுக்க மாட்டேன். நான்.. என்னிடம் இருக்கும் பணம் தேவனுடைய பிள்ளைகளிடமிருந்து வருகிறது, அது தேவனுடைய இராஜ்யத் திற்காகவே செலவழிக்கப்படுகிறது. நான் என்ன செய்வேன் என்று உனக்கு சொல்லுகிறேன்: நான் உனக்கு ஒரு சான்ட்விச் வாங்கித்தருகிறேன்; நான் உன்னுடைய இரவு சாப்பாட்டை உனக்கு வாங்கித்தருகிறேன் அல்லது... நீ என்னோடு வருவாயானால். ஆனால் நான் ஒரு ஊழியக்காரனாக, உன்னிடம் கேட்க விரும்புகிறேன்' என்றேன். அவனோ, "ரெவரண்ட் அவர்களே, மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றான். அதற்கு நான், "நல்லது, நீ எப்படி இவ்வித நிலையை அடைந்தாய்?" என்று கேட்டேன். அவன், "ஐயா, நீர் என்னுடைய கதையை நம்புவீரா என்று எனக்கு சந்தேகமாயிருக்கிறது" என்றான். "நல்லது," நான், "நான் உன்னை ஒரு மரியாதைக்குரிய மனிதனாகவே ஏற்றுக்கொள்கிறேன். நான்-நான் உன்னுடைய கதையை நம்புவேன், நீ என்னிடம் சொல்; உன்னுடைய இருதயத்திலிருந்து என்னிடம் சொல்' என்றேன். அதற்கு அவன், ஐயா, நான் ஒரு ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன்" என்றான். அதற்கு நான், "அப்படியானால் இந்த நிலைக்கு வந்திருக்கிறாயே" என்றேன். 96. அவன், "ஆம், ஐயா. எனக்கு மிகவும் அன்பான குடும்பம் இருந்தது: மூன்று பிள்ளைகள், இரண்டு மகன்களும் ஒரு பெண் பிள்ளையும், எப்பொழுதும் வாழ்ந்ததிலேயே மிகவும் இனிமையான மனைவியும் எனக்கு இருந்தார்கள்" என்றான். அப்பொழுது அவனுடைய பெரிய கண்ணீர்கள் அவனது வயதான, நரைத்த தாடி வழியாக ஓடத் தொடங்கியது. அவன், "நான் இங்கே ஒரு குறிப்பிட்ட மூலையிலுள்ள இந்த வங்கியின் தலைமை அதிகாரியாக இருந்தேன்" என்றான். அதற்கு நான், "அப்படியா?" என்றேன். அவன், "அந்த வங்கிக்குப் போய் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்" என்றான். மேலும் அவன்... நான், "நல்லது, நீ இதைச் செய்ய காரணமாயிருந்தது எது?" என்று கேட்டேன். 97. அவன், "ஐயா, ரெவரண்ட் ஐயா, ஒரு மாலையில் நான் வீட்டிற்கு வந்தபோது, அங்கே 'அன்புள்ள ஜான்' என்று ஒரு கடிதம் மேஜையின்மேல் இருந்தது. என்னுடைய மனைவி என்னைவிட்டுப் போய்விட்டாள். நான் ஒருபோதும் மது அருந்தியதில்லை, ஆனால் நான், "நான் ஏதாயினும் ஒன்றைச் செய்தாக வேண்டும். அல்லது நான் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து என்னுடைய மூளையை வெடித்து சிதறும்படி செய்து விடுவேன்" என்று எண்ணி, நான் குடிக்க ஆரம்பித்தேன், இதோ நான் இருக்கிறேன்" என்றான். "தேவன் இரக்கமாயிருப்பாராக" என்று எண்ணி னேன். பாருங்கள்? On... "அந்த நேரம் முதற்கொண்டு..." அதுதான் அதை ஆரம்பித்து வைத்தது. நாம் எப்போதுமே ஒரு நேரம் முதற்கொண்டு என்பதை சிந்தித்துப்பார்க்க முடியும். 98. அதன்பிறகு விவாகம் பண்ணுகிற வாலிப தம்பதிகளைப் போன்று. ஓ, அவர்கள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு அன்பானவர்களாக இருக்கிறார்கள். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, தன்னுடைய குடும்பத்தை விட்டுபோன இந்தப் பெண்ணிடம் நான் போய், "பெண்மணியே, நீ உன்னுடைய குடும்பத்தை விட்டுப் போகும்படி செய்தது என்ன? உனக்கு ஒரு அருமையான கணவன் இருந்தானே" என்று கேட்பேன் என்றால். 99. ஓ, அவள் என்னிடம் கூறுவாள், அவள், "சகோதரன் பிரான்ஹாமே, நான்-நான்-நான் வானத்தி லிருந்து விழும் பனித்துளியைப் போன்று அவ்வளவு கள்ளங்கபடமில் லாதவளாகத்தான் இருந்தேன். நான் என் னுடைய புருஷனை விவாகம் செய்து, குணசாலியான பெண்ணாகத்தான் அவரிடம் வந்தேன். அவரும் ஒரு அருமையான மனிதராகத்தான் இருந்தார்; அவர் வேலை செய்து வியர்வை சிந்தி என்னைக் கவனித்துக் கொண்டார். பிள்ளைகளோ, என்னுடைய சிறு குட்டையான குண்டு பையன், அவன் பிறந்தபோது, கணவனார் அந்தச் சிறு மகனைத் தம்முடைய முதுகின்மேல் வைத்து தரையில் மேலும் கீழுமாக தோள்களின்மேல் சுமந்தபடி ஊர்ந்துசெல்வதை என்னால் இப்பொழுதும் காண முடிகிறது. ஓ, என்னால் மாத்திரம் அந்த முந்தையை நிலைக்கு மறுபடியும் திரும்பிச்செல்ல முடியுமானால்" என்று கூறியிருப்பாள். நான், "நல்லது, என்ன நடந்தது?" என்று கேட்கும் போது. 100. அவள் இவ்விதமான ஏதோவொன்றைச் சொல்லியிருப்பாள்: "நல்லது, அதெல்லாம் சரியாகவே நடந்துகொண்டிருந்தது. ஒரு நாள், அழகான, சுருள்முடியும், பெரிய பழுப்புநிற கண்களும் உடைய பொருட்களை விற்பனை செய்யும் ஒருவன் (a salesman) கதவைத் தட்டினான், அந்த நேரம் முதற்கொண்டு..." என்று. பாருங்கள்? அவ்விதமாகத்தான் அது ஆரம்பிக்கிறது; முக்கியமாக நிகழ்ந்த ஒரு நேரத்தை நினைவு படுத்துகிறது. சரியாக அதுதான் அதன் துவக்கமாக இருக்கிறது. 101. பாவமானது எப்போதும் தெருவிலுள்ள சாக்கடையில் தான் கிடக்கிறது என்று ஒருக்காலும் நினைக்கவே நினைத்து விடாதீர்கள்; பாவமானது மிக அருமையாக உடையுடுத்திக் கொண்டு அழகாயுள்ளது. நிச்சயமாக அவ்வாறு தான் உள்ளது. நான் எப்போதுமே, "சாத்தான் ஒரு டக்சிடோ சூட்டையும் (tuxedo suit), உயரமான பட்டிழை தொப்பியையும் அணிந்துகொண்டு, தன்னுடைய கையில் ஒரு கைத்தடியையும் வைத்திருக்கிறான்" என்று சொல்வதுண்டு. மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லும் கும்பலைச் சேர்ந்த நீளமான தலைமயிர் கொண்ட அந்த பேச்சு நயமுடைய (வெளியே நேர்மை யாகத் தோன்றுகிற) வாலிபனைக் குறித்து விழிப்புடன் இருங்கள். அது சரியாக உள்ளது. சாத்தான் முட்டாள் அல்ல என்று உங்களுக்குத் தெரியும். எப்படி பொருத்தமான உடையணிந்து அதை கவர்ச்சிப்பது (வசீகரிப்பது, மயக்கு வது, மனதை இழுப்பது மொழிபெயர்ப்பாளர்) என்று அவனுக்கு அவனுக்கு -அவனுக்குத் தெரியும், புரிகிறதா? 102. அது தன்னுடைய தொப்பியை கீழ்நோக்கி இழுத்தவண்ணமாக அங்கேயிருக்கும் பழங்கால சார்லி பார்லிகார்னாக எப்போதும் இருப்பது கிடையாது; சிலசமயங்களில் அது மிகவும் நேர்மையான ஒரு இருதயமாக இருக்கிறது. நெடுகிலுமாக தனக்கு உதவி புரியும் ஒரு-ஒரு நல்ல துவக்கத்தை அல்லது ஏதோவொன்றை அவன் கொண்டிருந்தால், அவன் சரியாகவே போய்க்கொண்டிருப்பான்; ஆனால் எப்போதுமே அவ் வாறு இருப்பதில்லை. நான் அநேக நேரங்களில் (இதைக்) கண்டிருக்கிறேன், தங்களால் எவ்வளவு குறைகூற முடியுமோ அவ்வளவு குறைகூறும் ஜனங்களிடம் நான் நடந்து சென்றிருக்கிறேன்; நான் அவர்களை நோக்கிப் பார்ப்பேன், யார் என்னை நேசிக்கிறவர் என்றும் யார் நேசிப்பதில்லை என்றும் அறிந்துகொள்ள தேவன் மூல மாக நான் ஒரு வழியை உடையவனாயிருக்கிறேன். உங்களுக்கு அது தெரியும். 103. இந்நிலையில், முழுவதும் அழுக்காகவும் மற்றும் எல்லாமாகவும் இருக்கும் ஒரு மனிதனைப் பார்க்கும்போது, ஒருக்கால் தங்களுடைய கழுத்துப்பட் டையை திருப்பி, ஆடம்பரமாய் உடையுடுத்திக்கொண்டு, என்னுடைய முதுகில் தட்டிக்கொடுத்து, "ஓ, சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் உம் பட்சத்தில் இருக்கிறோம்" என்று கூறிக்கொள்ளும் யாரோ ஒருவனைக் காட்டிலும் நான் இவனையே அநேக சமயங்களில் என்னோடு வைத்துக்கொள்ள அதிகம் விரும்புவேன். அவன் பொய் சொல்லுகிறான் என்று சரியாக அப்பொழுதே அறிந்து கொள்வேன். பாருங்கள், புரிகிறதா? அதுதான் அது. ஒரு பொய்யனால் எனக்கு எந்த பயனுமில்லை (I've got no use for a liar). என்னே, நீங்கள் ஒரு திருடனிடமிருந்து மறைந்துகொள்ள முடியும், ஆனால் உங்களால் ஒரு பொய்யனிடமிருந்து மறைந்துகொள்ள முடியாது. எனவே, அது-அது சரியே. 104. ஆனால் "அந்த நேரம் முதற்கொண்டு... என்னும் அவ்விடங்களை நாம் அடையும்போது. அதன் பிறகு புதுவருடம் வரும்போது. நீங்களெல்லாரும் வெளியே சென்று "மனைவியே, நான் இன்றிரவு உனக்கு வாக்குக்கொடுக்கிறேன். நான் ஒரு புதிய பக்கத்தைத் திருப்புகிறேன், நான்-நான் இனிமேல் ஒருபோதும் குடிக்கவே மாட்டேன்" என்று ஒரு தீர்மானத்தை எழுதிக் கொள்கிறீர்கள். 105. பெண்ணானவள் தன்னுடைய குழந்தைக்கு இனியும் பாலூட்ட முடியாத அளவுக்கு மிக அநேக சிகரெட்டுகளைப் புகைக்கிறாள், (அவள் அவ்வாறு பாலூட்டினால்), அவள் குழந்தைக்கு நிகோடின் விஷத் தைக் கொடுத்து கொன்றுபோடுவாள்; அவள் புத்தாண்டு அன்று புகைப்பிடிப்பதை நிறுத்திவிடப்போகிறாளாம். குடிகாரனும் புத்தாண்டு அன்று குடிப்பதை நிறுத்தப் போகிறானாம்; ஒழுக்கக் கேடான நபர்களும் புத்தாண்டு அன்று தங்கள் ஒழுக்கக்கேட்டை நிறுத்தப்போகிறார்களாம்; அதைப் போன்ற இன்னபிற நபர்களும் அவ்வாறு செய்யப் போகிறார்களாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அடுத்த நாளில் மீண்டும் அதற்கே திரும்பிச்செல்லும் படியாக வெறுமனே ஒரு புதிய பக்கத்தைத் திருப்புகிறீர்கள். பாருங்கள்? நீங்கள்.... அது... நீங்கள் சரியாகத் துவங்குவதில்லை. இந்த எல்லா காரியங்களும் அருமையானவை தான்; அவைகளுக்கு விரோதமாக எனக்கு எதுவுமில்லை. ஆனால் அங்கே... 106. அந்த யுத்தத்தில் (நடந்தது) போன்று... முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு, நடுத்தர வயதுடைய மற்றும் ஏறக்குறைய என்னுடைய வயதுடைய மனிதர்களாகிய உங்களில் அநேகர், அந்த யுத்தம் முடியும்போது, எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயது என்று நினைக்கிறேன். அவர்கள் யுத்தத்தை அறிவித்தபோது: 1914-ம் ஆண்டில், நான் ஒரு சிறு ஆண் குழந்தையாக குதிரை போன்ற விலங்குகளால் இழுத்துச்செல்லப்படும் ஒரு நான்கு சக்கர வண்டியில் (spring wagon) உட்கார்ந்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய தகப்பனாரிடம் ஒரு சாக்கு (கோணிப்பை) பீன்ஸ்கள் இருந்தன; அதைக் கொண்டு, பீன்ஸ்கள் மற்றும் சோள ரொட்டியைக் கொண்டுதான் நாங்கள் ஜீவனம் பண்ணினோம்: இன்னும் அது (எனக்குப்) பிடிக்கும். எனவே, அவர்கள்... (அப்போது) அப்பா போரைக்குறித்து பேசிக் கொண்டிருந்தார், அவரும் போருக்கு போக வேண்டியிருந்திருக்கலாம். நான், "அம்மனிதர் உமக்குப் பின்னால் வருவார்க ளானால், நான் பீன்ஸ்கள் கொண்ட இந்த கோணிப் பையை எடுத்து இதைக்கொண்டு அவர்களை அடித்துப் போடுவேன்" என்றேன். அவ்வண்ணமாக, இப்பொழுது அது எப்பொழுது என்றால் நான் மிகவும் சிறுவனாக இருந்தபொழுது. 107. மேலும் அதன்பிறகு, அவர் என்னுடைய முத லாவது ஜோடி காலணிகளை (pair of shoes) வாங்கிக் கொடுத்தபோது, அவைகளை தெரிந்தெடுக்கும்படியாக அவர், அவரும் அம்மாவும் போயிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நானோ காலணி அணியாமல் வெறுங்காலோடு இருந்தேன். நான் வளர்ந்த இடமாகிய அந்த மலைகளிலுள்ள அந்தச் சிறு பையன்கள், அவர்கள் சிறு பையன்களாக இருந்தபோது, நீங்கள் பழங்கால ஹிக்கரி என்று அழைப்பதை அவர்கள் உடையவர்களாயிருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், (அது) உடுப்பு அழுக்காகாமல் இருக்க முன்புறத்தில் அணியப்படும் ஒரு சிறு மேல் ஆடை போன்றோ, அல்லது, ஒரு சிறு மேற் சட்டையாகவோ இருக்கும். எனக்கு ஏறக்குறைய ஆறு வயதாயிருக்கும் வரையில், நான் அதை அணிந்திருந்தேன் என்று ஊகிக்கிறேன். என்னுடைய முதலாவது ஜோடி காலணிகள் (pair of shoes), அவைகளின் குறுக்காக மேல் உறையை (cap) உடையவைகளாயிருந்தன, அவைகளில் அந்தச் சிறு துவாரங்கள் இருந்தன. 108. நான் எப்போதுமே, என்னுடைய கையில் ஒரு மெல்லிய கூர்மையான சிறு துண்டை (சில்லை) வைத்திருக்கும்போது, நான் அம்மாவிடம் ஓடிப்போவேன், அவர்கள் (she) அந்த விதமாகத்தான் அதை தேர்ந் தெடுத்திருந்தார்கள். அவர்கள் (they) தையல் ஊசியை எடுத்து என்னுடைய காலணிகளிலுள்ள அந்தச் சிறு துவாரங்களில் தான் ஏதோவொரு இடத்திலிருந்து அவைகளில் துவாரமி டுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன், ஏனென்றால் அம்மா, தாங்கள் தான் போய், ஒரு ஜோடி காலணிகளை "எனக்காக தெரிவுசெய்ய" வேண்டியிருந்ததாக சொன்னார்கள். அவர்கள் அதை ஒரு ஊசியைக் கொண்டு தான் செய்தார்கள் என்று நான் நினைத்தேன். எனவே... 109. ஆனால் உலக யுத்தத்திற்குப் பிற்பாடு: "நமக்கு இனி ஒருபோதும் யுத்தமே இருக்காது. யுத்தம் முடிந்து விட்டது" என்ற செய்தி வெளிவந்தது எனக்கு நினை விருக்கிறது. அது நல்ல நோக்கமாகத்தான் இருந்தது; அவர்கள் அதைத்தான் சொல்ல விரும்பினார்கள். மேலும் அப்போது, அவர்கள் உலக நாடுகள் சங்கம் (the League of Nations) என்பதாக நாம் அறிந்துள்ளதை நிறுவி, ஒவ்வொரு தேசத்திலுமிருந்து அதிக எண்ணிக்கையான மனிதர்களையும், இராணுவ வீரர்களையும் எடுத்து, அவர்கள் முழு பூமியிலும் ஒழுங்கை நிலை நாட்டினார்கள். அது நல்ல திட்டமாகத்தான் இருந்தது, ஆனால் அது கிரியை செய்யவில்லை, ஏனென்றால் அது தேவனுடைய செயல் திட்டமல்ல. இப்பொழுது, ஐக்கிய நாடுகள் சங்கம் (U.N.) என்னப்படுவதையும் அது என்னவாயிருக்கிறதோ அதையும் நாம் பெற்றிருக்கிறோம்: ஏறக்குறைய துப்பாக்கிகளை ஒருவர் மேல் மற்றவர் வைத்துக்கொண்டே ஐக்கிய நாடுகள் சங்கத்தில் (U.N.) இருக்கிறார்கள். அது ஒருபோதும் கிரியை செய்யாது. 110.ஆனால் அங்கே ஏதோவொன்றுள்ளது. ஒருவிசை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யாரோ ஒருவரை சந்திக்கக்கூடும். அப்பொழுது எல்லாமே மாறிப்போய்விடும். நீங்கள் அப்போது தேவனைச் சந்திக்கிறீர்கள், "அந்த நேரம் முதற்கொண்டு" நீங்கள் மாற்றப்பட்ட நபராயிருக்கிறீர்கள். ஒரு மனிதன் தேவ னைச் சந்தித்து, "அந்த நேரம் முதற்கொண்டு" என்று அவனால் கூற முடியும். நீங்கள் இயேசு கிறிஸ்துவை சந்தித்த பிறகு அதேவிதமாக ஒருபோதும் இருக்கவே மாட்டீர்கள். நான் அதை உங்களுக்கு உறுதிப்படக் கூறட்டும்: நீங்கள் இயேசுவைச் சந்தித்த பிறகு ஒருபோதும், ஒருபோதும் அதேவிதமாக இருக்கவே இருக்க மாட்டீர்கள். அதன்பிறகு எப்போதுமே, "அந்த நேரம் முதற்கொண்டு..." என்று முன்நிகழ்ந்ததைப் பற்றி உங்க ளால் விவரமாக எடுத்துரைக்க முடியும். 111. தேவனைச் சந்தித்த சிலரை நாம் இன்றிரவில் பேட்டி காண்போம். தகப்பனாகிய ஆபிரகாமைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். அவன் வெறுமனே ஒரு சாதா ரண மனிதனாகத்தான் இருந்தான். அவன் தன்னுடைய தகப்பனோடு கூட பாபிலோனிலிருந்து வந்து, கல் தேயர்களின் தேசமாகிய ஊர் என்ற பட்டணத்திலுள்ள, சிநெயார் பள்ளத்தாக்கிலே வாசம் பண்ணினான். அவன் விசேஷமான எதுவாகவும் இருக்கவில்லை; அவன் எந்த பரிசுத்தமான நபராகவும் இருக்கவில்லை. அவன் உங்களையோ அல்லது என்னையோ போன்று வெறுமனே ஒரு சாதாரண மனிதனாகத்தான் இருந்தான். 112. அநேகமாக அவன் ஒரு விவசாயியாக இருந் திருப்பான், ஒரு நாள், வெளியிலே வயலில் உழுது பயிரிட்டுக்கொண்டிருந்தபோது, அவன்... அல்லது ஏதோ வொன்றைச் செய்து கொண்டிருக்கும்போது, ஒருநாள், அவன் தேவனைச் சந்தித்தான். அவனுக்கு ஒருபோதும் வேறெந்த மனிதனைக் காட்டிலும் அதிகமான விசுவாசம் இல்லாதிருந்தது, ஆனாலும் அவன் 75 வயதில் தேவனைச் சந்தித்தபோது, அது அவனுடைய முழு இயல்பையுமே மாற்றிப்போட்டு விட்டது; ஏனென்றால் அவன் தேவனைச் சந்தித்தான். தேவன் அவனிடம் பேசின போது, அவனுக்கு 75 வயதாயிருந்தது. அவன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரியாகிய சாராயை விவாகம் பண்ணியிருந்தான்; அந்நேரத்தில், அவளுக்கு 65 வயதாயிருந்தது. அவன் சாராய் மூலம் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போவதாக தேவன் ஆபிரகாமிடம் சொன்னார். 113. இப்பொழுது, அது... (ஆக) இருந்திருக்கும். யாரோ ஒருவர், அவனுடைய தோழர்களில் யாரோ ஒருவர் நடந்து வந்து, அவனிடம், "ஆபிராமே, நீ சாராய் மூலம் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாய், அவள் உனக்கு ஒரு பிள்ளையைப் பெறப்போகிறாள்" என்று சொல்லியிருந்தால். 114. ஆபிரகாம் நகைத்து, தன்னுடைய சரீரத்தின் இரு புறங்களையும் பிடித்தபடி, மிகவும் உணர்ச்சிபெருக் கோடு உரக்க சிரித்துக்கொண்டே (held his sides), "என்னுடைய மனைவிக்கு இறுதி மாதவிடாய் கடந்து போய் ஏறக்குறைய 30 வருடங்களோ, அல்லது, 20 வருடங்களோ ஆகியிருக்க, எனக்கா, என்னைப்போன்ற ஒரு கிழவனுக்கா? அவளுக்கு 17 வயதாக இருந்தது முதற்கொண்டே நான் அவளோடு வாழ்ந்து வருகிறேன்; அவள் மலடியா யிருக்கிறாள், நானும் மலடாக இருக்கி றேன். எனக்கு 75 வயதும் அவளுக்கு 65 வயதும் இருக்க, நாங்கள் என்றாவது எப்படி ஒரு குழந்தையைக் கொண்டிருக்க முடியும்?" என்று சொல்லி யிருப்பான். அவன் தன்னுடைய நண்பனின் முன்னிலையில் சிரித்திருப்பான். ஆனால் அவன் தேவனைச் சந்தித்தான். அந்த நேரம் முதற்கொண்டு, அவன் இல்லாதவைகளையும் இருக்கிறவைகள் போல் அழைத்தான். ஆமென். அவன் தேவனைச் சந்தித்திருந்தான். 115. வியாதிப்பட்டுள்ள நபரால் எப்பொழுதாகிலும் தேவனைச் சந்திக்கக் கூடுமானால், நீங்கள் தொடர்ந்து எவ்வளவு ஊனமுற்றவர்களாக இருந்தாலும், தொடர்ந்து எவ்வளவு வியாதிப்பட்டிருந்தாலும், எவ்வளவு குருடாயிருந்தாலும் அது ஒரு பொருட்டேயல்ல, நீங்கள் தேவனைச் சந்திக்கும்போது, உங்களுக்குள் ஏதோ வொன்று ஊடுருவிச்சென்று, இனிமேல் இந்த சூழ்நிலை களைப் பார்க்கவே மாட்டீர்கள். தேவன் கூறுவதையே நீங்கள் நோக்கிப்பார்ப்பீர்கள். தேவன் எப்பொழுதாவது.... என்று கூற முடியுமானால், உங்கள் இருதயத்திற்குள்ளிருக்கும் வாழ்க்கையைக் குறித்த கவலைகளினூடாக செல்ல முடிந்து, அங்கே விசுவாசத்தை சிறிது சிறிதாகச் செலுத்த முடியுமானால், அதிலிருந்து உங்களை எப்பொழுதாவது அசைக்கும்படியான எதுவுமே உலகத்தில் கிடையாது. ஒரு மனிதன் தேவனைச் சந்திக்கும்போது, அந்த நேரம் முதற்கொண்டு, அவன் ஒரு மாற்றப்பட்ட நபராயிருக்கிறான். 116. ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான், அவன் அப்பொழுதும் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைத்துக் கொண்டிருந்தான். அறிகுறியானது அதிக அதிகமாக அவனுக்கு எதிராக குவிக்கப்பட்டிருந்தது (piled up); சாராளுக்கு 90 வயதும் அவனுக்கு 100 வயதுமாயிருந்தது. அவன் அப்பொழுதும் தேவனுக்கு துதிசெலுத்தி, திடமாயிருந்து, அவிசுவாசத் தினால் தடுமாறிக் கொண்டிராமல், அவன் அந்தக் குழந்தையைக் கொண்டிருப்பான் என்று அனுதினமும் தேவனுக்கு துதி செலுத்திக்கொண்டிருந்தான். ஏன்? தேவன் அவனைச் சந்தித்திருந்தார்; தேவன் தயவுள்ளவராக இருந்தார். தேவன் அந்த உடன்படிக்கையை அவனுக்கு உறுதிப்படுத்தினார். 117. ஆதியாகமம் 16-ம் அதிகாரத்திலுள்ள, அந்த உறுதிப் படுத்துதலை எடுக்க நமக்கு நேரமுண்டா? அல்லது 17-ம் அதிகாரத்தைக் குறித்தும் கூட நம்மால் எடுக்கக் கூடுமா? அவர் சர்வவல்லமையுள்ள தேவன் என்ற நாமத்தில் அவனைச் சந்தித்தபோது, அதற்கு எல்ஷடாய் என்று அர்த்தமாகும், அந்த எபிரெய வார்த் தைக்கு, "ஒரு பெண்ணின் மார்பகம்" என்று அர்த்தம், 100 வயதான ஒரு வயோதிபனை தேவன் சந்தித்து, "நான் எல்ஷடாய்" என்று கூறினபோது, எல்ஷடாய். பொருந்திய ஒருவர், திருப்திபடுத்துகிறவர், தொடர்ந்து நடத்துகிறவர்." 118. இப்பொழுது, ஷாட் என்பதற்கு "பெண்ணின் மார்பகம்" என்று அர்த்தம், ஆனால் பன்மை சொல் லாகிய ஷடாய் என்பதற்கு "மார்பகங்களை உடையவர் (breasted)" என்று அர்த்தமாகும். இப்பொழுது, தேவ னாகிய அவர் ஒரு "மார்பகம்" மாத்திரமல்ல, ஆனால் அவர் "மார்பகங்கள் கொண்ட" ஒரு தேவனா யிருக்கிறார்: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப் பட்டார்; அவருடைய தழும்புகளால் குணமானோம்." உங்களுக்கு இரட்சிப்பு தேவையென்றால், கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவருடைய வார்த்தை, அவருடைய வாக்குத்தத்தமாகிய அந்த தேவனுடைய மார்பகத்திலிருந்து பாலுண்ணுங்கள் (nurse). (அப்பொழுது) நீங்கள் வந்து அந்த பாவ படுகுழிகளிலிருந்தும் ஒழுக்கக்கேடான நடத்தையிலிருந்தும் தேவபக்தியுள்ள, பரிசுத்தமான நபர் என்பதற்கு உங்களைக் கொண்டுவருவீர்கள். நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், அவருடைய தழும்புகளால் குணமானோம்." அப்படியே தேவனுடைய மற்ற வாக்குத் தத்தத்தையும் பிடித்துக்கொண்டு பாலுண்ணுங்கள். 119. குழந்தையானது என்ன செய்ய வேண்டியிருக் கிறது? குழந்தையானது... நாம் தேவனுடைய குழந்தை யாயிருக்கிறோம். நீங்கள் தான், சகோதரியே, அங்கிருக்கும் நீங்கள் யாவருமே இதைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். நாம் தேவனுடைய குழந்தை களாயிருக்கிறோம். குழந்தையானது வியாதிப்பட்டு நச்சரிக்கும் போது அது என்ன செய்கிறது? அது மிகவும் எரிச்ச லூட்டுவதாகவும் வியாதிப்பட்டும் இருக்கிறது. இப்பொ ழுது, அது செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், அதை அமைதிப்படுத்துகிற ஒரே காரியம் யாதெனில், தாய் அதை தூக்கி எடுத்து, அதை தனது மார்போடு வைத்திருந்து, அதற்கு பாலூட்டுவது தான். இப்பொழுது, அந்த தாய் என்ன செய்கிறாள்? தாய்ப் பாலை உற்பத்தி செய்கிறாள், குழந்தையோ (அவள்) குழந்தைக்கு பாலூட்டுகிறாள்), தாயிடமிருந்து குழந் தைக்கு பலமானது (சக்தியானது) ஊட்டப்படுகிறது (nurses). அப்பொழுது குழந்தையானது தாயினுடைய சக்தியின் மூலமாக பலமடைகிறது. நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நமது இருதயத்தினுள் பற்றிப்பிடிக்கும்போது, நாம் தேவனுடைய பலத்தை குடித்துக் கொண்டிருக்கிறோம் (nursing), (அவர் தான்) அந்த பலம் பொருந்தியவர். நாமோ தொடர்ந்து குடித்துக் கொண்டேயிருக்கிறோம் (nursing). 120. தாயின் மேல், அதனுடைய தாயின் மார்பில் இருக்கிற ஒரு சிறு குழந்தையைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், அது... அது எரிச்ச லுண்டாக்குவதை நிறுத்தி விடுகிறது. அது தன்னுடைய தாயின் மார்பகத்தைப் பற்றிப்பிடித்த உடனேயே அது நச்சரிப்பதை நிறுத்தி விடுகிறது. அதற்குமேலும் அது நச்சரிக்காது; அது திருப்தியடைந்து விடுகிறது. அது தொந்தரவு செய்வதை நிறுத்திவிடுகிறது. அப்படியானால் நாம் தேவனுடைய வாக்குத் தத்தத்தை பற்றிப் பிடித்துக்கொள்ளும்போது, தேவன் அதை: உன்னுடைய சகல வியாதிகளையும் சுகமாக்குகிற கர்த்தர் நானே. விருப்பமுள்ள எவனும் வரக்கடவன்" என்பதை நமக்கு வெளிப்படுத்தும் போது. நான் அவர் மேல் தான் நம்பிக்கை வைத்திருக்கிறேன், அப்படியானால் சக்தி தரும், சர்வவல்லமையுள்ள தேவனாகிய, யேகோவாவிடமிருந்து நான் என்னுடைய ஆற்றலை திரும்ப மறுபடியும் குடித்துக் கொண்டிருக்கையில், நான் திருப்தியடைந்து விடுகிறேன். 121. ஏறக்குறைய மரித்துப்போயிருந்த, நூறு வய துடைய ஒரு வயதான மனிதனுக்கு என்னவொரு உற்சாகப்படுத்தும் ஒன்று, மேலும் சாராள் பிறப்பிலேயே மலடியாய் பிறந்தபோது, ஏற்கனவே அவளுடைய கர்ப்பம் அடைபட்டிருந்தது. அப்பொழுது, "நானே உனக்கு ஆற்றல் அளிப்பவர்; நான் எல் ஷடாயாக இருக்கிறேன். உனக்கு 100 வயதாகிறது, ஆனால் நீயோ எனக்கு வெறும் ஒரு குழந்தைதான். இங்கே என்னுடைய கரங்களுக்குள் அடங்கியிருந்து, என்னுடைய வாக்குத்தத்தத்தை பற்றிக்கொண்டிரு; இந்த வாக்குத்தத்தத்தைத் தவிர வேறு எதையும் பார்க்காதே. அப்படியானால் உன்னால் என்ன செய்யக்கூடும்? மீசையானது வயதாகி, தலைமயிர் நரைக்கையில், நீ இன்னுமாக பால்குடித்து, நான் என்னுடைய வார்த்தையை காத்துக்கொள்வேன் என்று திருப்தியோடிருக்க முடியும்" என்பது என்ன ஒரு- ஒரு செய்தி. 122. மருத்துவர், "நீங்கள் மேலும் மோசமாகி மோசமாகிக் கொண்டே போகிறீர்கள்" என்று கூறலாம். அது உங்களை ஒரு கவலையுமே அடையச் செய்யாது. நீங்கள் அப்பொழுதும் எல்ஷடாயின் மார்பகத்திலிருந்து பால் குடித்துக் கொண்டே யிருப்பீர்கள். "தேவனே, நீர் என்னுடைய இருதயத்திற்குள் பேசிவிட்டீர்; நீர் எனக்கு வாக்குத்தத்தம் தந்திருக்கிறீர். பாதாளத்திலுள்ள எல்லா பிசாசுகளாலும் அதை என்னிடமிருந்து அகற்றிப் போடவே முடியாது. நான் குணமாகிவிடுவேன் என்று திருப்தியோடிருக்கிறேன். நான் எல் ஷடாயிடமிருந்து பால் குடித்துக்கொண்டேயிருக்கிறேன்." ஆமென். சகோதரனே, நீ தேவனைப் பற்றிப்பிடித்துக்கொள் ளும் போது, அது கோழி எலும்பை (குருத்தெலும்பை) (wishbone என்பது வீட்டில் வளர்க்கப்படும் கோழியின் பிளவுபட்ட எலும்பு வெளியே எடுத்துப்போட்டுவிட்டு, முதுகெலும்பை (backbone) அங்கே உள்ளே வைக்குமென்று உனக்கு சொல்லுகிறேன், நிச்சயமாக அதைச் செய்யும். 123. ஆபிரகாம், அவர் அந்த ஆணையை உறுதிப் படுத்திக் கொண்டிருந்த போது, அவர், "ஒரு shee-..ஐ ஒரு ra-...ஐ ஒரு ஆட்டை, ஒரு ஆட்டுக்கடாவை என்னிடத்தில் கொண்டு வா; எனக்கு ஒரு ஆட்டுக் கடாவையும், அதோடு கூட மூன்று வயதுள்ள கன்று ஈனாத இளம்பசுவையும் தரு(வாயாக). மேலும் ...இவைகளைக் கொண்டு வா" என்று சொன்னதைக் கவனியுங்கள். அவன் அவைகளை பாதியாக துண்டித்து, அவைகளை ஒரு பக்கமாக வைத்தான். அவர், "ஒரு காட்டுப் புறாவையும் ஒரு புறாக்குஞ்சையும் (young pigeon) என்னிடம் கொண்டு வா" என்றார். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா...? அதற்குள் போக நமக்கு நேரம் இருந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் அந்தக் கடிகாரத்தையே கவனித்துக் கொண்டிருக்கிறேன். நான், என்னுடைய பொருளிலிருந்து அகன்றுசெல்ல விரும்பவில்லை, ஆனால் ஆபிரகாம்... கொண்டுவந்தான். "இரண்டு, அல்லது, ஒரு காட்டுப்புறாவையும் ஒரு மாடப்புறாவையும் (pigeon) கொண்டு வா" என்றார். 124. இப்பொழுது, காட்டுப்புறாவானது எப்போதுமே - சித்தரித்துக் காட்டுகிறது, (அது) வியாதிக்கான ஒரு பரிகாரமாயிருந்தது. பாருங்கள், புறாக்கள் துண்டிக்கப் படவில்லை; மற்றவைகள் தான் துண்டிக்கப்பட்டன. ஏனென்றால் சுவிசேஷத்தோடுள்ள உடன்படிக் கையானது நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு மாற்றப்பட் டிருந்தது, ஆனால் தெய்வீக சுகமளித்தலானது எப்போதுமே அதேவிதமாகவே மாறாதிருந்தது. குஷ்டரோக மானது குணமடையும் போது, அவர்கள் ஒரு மாடப்புறாவையோ, அல்லது, ஒரு வெண்புறாவையோ கொண்டு வந்து, அதனுடைய தலையை துண்டித்துப் போட்டு விட்டு, இரத்தத்தை மற்ற ஒன்றின்மேல் சொரிவார்கள், அப்பொழுது, அது குஷ்டரோகத்தின் சுத்திகரிப் பிற்காக புறப்பட்டுச் சென்று, சிறுதுளிகளாய் தெளித்துக் கொண்டே, "பரிசுத்தம்" என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும். 125. இப்பொழுது, இதில் புறாக்கள் துண்டிக்கப்பட வில்லை என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, இந்த அடையாளச் சின்னத்தை கவனித்துப்பாருங்கள். ஓ, என்னே. உங்களுக்கு இது விளங்குகிறது என்று நம்பு கிறேன். On... அது... அடைந்தபோது. அது... சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கும் வரைக்கும், ஆபிரகாம் அதற்கு அப்பாலிருந்த பறவைகள் எல்லாவற்றையும், வானத்தின் பறவைகளையும் கவனித்துக்கொண்டிருந்தான். சூரியன் அஸ்தமித்தபோது, இனி காலம் செல்லாது என்பதுதான் அதற்கு அர்த்தமாகும். அப்பொழுது, பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் வருவதுபோல், ஆபிரகாமுக்கும் அயர்ந்த நித்திரை அயர்ந்த நித்திரை வந்தது: நாம் மரணமாகிய நித்திரைக்குள் போகிறோம். நீங்கள் மரிப்பதில்லை; நீங்கள் வெறுமனே போகிறீர்கள், நீங்கள் வெறுமனே உங்கள் வாசஸ்தலங்களை மட்டுமே மாற்றிக்கொள் கிறீர்கள். 126. இப்பொழுது, ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது, அவன் நோக்கிப்பார்த்தபோது, அவனுக்கு முன்பாக ஓர்-ஓர் புகைகிற சூளை கடந்துபோயிற்று. மரிக்கிற ஒவ்வொரு பாவியும், இவ்வுலகத்தில் பிறந்து, பாலுறவு பிறப்பின் வழியாக வருகிற, ஒவ்வொரு மனிதனும், மரணத்திற்கு உட்பட்டவனாயிருக்கிறான். நாமெல்லாரும் பாவம் செய்து, தேவ மகிமையற்ற வர்களாயிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகத்தில் ஒரு பாவியாகத் தான் பிறக்கிறான். உங்களுடைய பெற்றோர்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, ஒரு பாவியோ அல்லது வேறு யாரும் வருகிற அதேவிதமாகவே நீங்கள் இவ்வுலகத்தில் வருகிறீர்கள். நாம்... நீங்கள் பாவம்செய்பவர்களாகத்தான் இருக்கிறீர்கள். "நாம் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவர்களாகவே உலகத்தில் வருகிறோம்" என்று வார்த்தை உரைக்கிறது. நீங்கள் - நீங்கள்-நீங்கள் துவக்கமுதலே முழுமையாக தோற்கடிக் கப்பட்டவர்கள் தான். 127. மேலும் பிறகு, மரிக்கிற ஒவ்வொரு மனித னுக்கும், அவனுடைய இளைப்பாறும் இடம் பாதாளம் தான். அவனுக்குக் கிடைக்கும் இளைப்பாறுதல் எல்லாம் அவ்வளவு தான்; அதுதான் ஆபிரகாமுக்கு முன்பாக வந்தது. கவனியுங்கள், அதன்பிறகு அதற்கும் அப்பால், மரணத்திற்குப் பிறகு பாதாளம் வருகிறது, ஆனால் பாதாளத்திற்கும் அப்பால் சிறியதொரு வெண்ணிற ஒளி வருகிறது. ஓ, என்னே. கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். அந்தச் சிறு வெண்ணிற ஒளியானது அந்த பலிகளுக்கிடையே மேலும் கீழுமாக கடந்து சென்றது. அவர், ஆபிரகாமே, நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நீ காண்கிறாயா?" என்றார். அவர் ஆபிரகாமோடுள்ள உடன்படிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். இப்பொழுது, ஒருக்கால் நான் அதை துரிதமாக விளக்கிக்கூறுகிறேன். 128. இப்பொழுது, அமெரிக்கர்களாகிய நாம், இன்று ஒரு உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்போது, எவ்வாறு (அதைச்) செய்கிறோம்? நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்யப் போவதாயிருந்தால், முதலாவது காரியம் உங்க ளுக்குத் தெரியுமா, நான் கை நீட்டி அந்த மனிதரின் கரத்தை பற்றிக்கொண்டே, "இதற்கு சம்மதம் தெரிவிக்கிறீர் என்று கரங்களைக் குலுக்கிக்கொள்ளுங்கள்" என்று கூறுவேன். நாம் அவ்விதம் தான் ஒரு உடன்படிக்கையை செய்கிறோம்: 'குலுக்கிக்கொள்ளுங்கள். கரங்களைக் குலுக்கிக் கொள்ளுங்கள். நாம் இதை உறுதிசெய்து விட்டோம்; அது சரிதான்; நாம் இதற்கு உடன்படுவோம்.' அதுவே ஒரு உடன்படிக்கையாக உள்ளது 129. இப்பொழுது, ஜப்பானில், அவர்கள் அங்கே எவ்வாறு உடன்படிக்கை செய்துகொள்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அவை எல்லாவற் றையும் கலந்துரையாடிவிட்டு, அதன்பிறகு ஒரு சிறு தட்டு நிறைய உப்பை எடுத்து, ஒருவர் மற்றவர்மேல் உப்பை எறிந்துகொள்கிறார்கள். ஜப்பானில் அதுதான் ஒரு உடன்படிக்கை. 130. ஆனால் ஆபிரகாமின் நாட்களில், கிழக்கத்திய நாடுகளில், அவர்கள் உடன்படிக்கை செய்துகொள்ளும் விதம் என்னவென்றால், ஒரு ஆடு அல்லது ஏதோவொன்றைப் போன்ற ஒரு மிருகத்தை எடுத்து, அதைக் கொன்று, அதைத் துண்டித்து; அம்மிருகத்தின் இந்த இரு துண்டங்களுக்கிடையே ஒவ்வொரு நபரும் செல்வார்கள். இப்பொழுது, அந்தச் சிறு வெண்ணிற ஒளி என்ன செய்து கொண்டிருந்தது என்பது புரிகிறதா? "இன்ன- இன்ன, மற்றும் இன்ன-இன்ன காரியங்களைச் செய்ய நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று இந்த உடன்படிக்கையை அவர்கள் எழுதிக்கொண்டார்கள். 131. இப்பொழுது, அவர்கள் தங்களுக்கிடையே இந்த உடன்படிக் கையைக் கொண்டிருக்கும்போது, அவர்கள், "நாம் இந்த உடன்படிக்கையை முறித்துப்போட்டால் நாம் இந்த உடன்படிக்கையை முறித்துப்போட்டால், நம்முடைய சரீரங்களும் நாம் எடுத்து (take it over) மரித்துப்போன இந்த மிருகத்தைப் போன்று ஆகக்கடவது" என்று கூறுவார்கள். அப்பொழுது அவர்கள் அவ்வுடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு, அந்த விதமாக அதைத் துண்டுகளாகப் பிளந்து; ஒரு துண்டை ஒருவரும், மறுதுண்டை வேறொருவருமாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களால் ஒருபோதும் (அதை) நகலெடுக்க முடியாது (They could never be duplicated). 132. நீங்கள் என்ன செய்தாலும் ஒருபொருட்டல்ல, அந்தக் காகிதத் துண்டிற்கு ஒத்து இருக்கின்ற வேறொன்றை உங்களால் ஒருபோதும் பிரதிஎடுக்க முடியாது. அது சரியாகத் திரும்பிவந்து இடையே கிழிக்கப்பட்ட தஸ்தாவேஜின் துண்டுகளுக்கு (the pieces of letter) துல்லியமாக ஒத்திருக்க வேண்டும். உங்களால் ஒருபோதுமே அதைச் செய்ய இயலாது. ஒன்றை ஒருவரும், மற்றதை மற்றவரும் கொண்டு செல்வார்கள். இந்த உடன்படிக்கையானது உறுதிப்படுத்தப்பட்டு உடன் கொண்டு செல்லப்படும் போது, ஆணையானது உறுதிப் படுத்தப் பட்டுவிடும், அதன்பிறகு அவர்கள் இந்த இரு துண்டுகளையும் திரும்ப ஒருசேர கொண்டுவரும்போது, அவர்கள் இரு துண்டுகளும் பொருந்துகிறதா என்று பார்ப்பார்கள். 133. இப்பொழுது, தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத் துக்கொண்டிருந்த அந்த கிழக்கத்திய உடன்படிக்கை என்னவாக இருந்தது? ஸ்தோத்தரிக்கப்பட்டவராகிய கர்த்தராகிய இயேசு ஆபிரகாமின் வித்தின் மூலமாகவே வருவார் என்பதுதான். தேவன் அவரை மேலே கல்வாரிக்குக் கொண்டுசென்று, அவரைத் துண்டுகளாக கிழித்து, அவரின் ஆத்துமாவை அவருடைய சரீரத்திலிருந்து வேறுபிரித்தார். அதன்பிறகு அவருடைய சரீரத்தையோ, தேவன் மூன்றாம் நாளில் உயிரோடெழுப்பி, மேலே எடுத்து தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்தார். அதன்பிறகு பெந்தெகோஸ்தே நாளில், இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த அந்த ஆவியை அவர் கீழே அனுப்பினார். சபையோடு (செய்துகொண்ட} உடன்படிக்கை (the Covenant with the Church). 134. சபையானது உயிர்த்தெழுதலில் ஒன்றாக வரும்போது. இயேசு கிறிஸ்துவை விட்டு கிழித்தெடுக்கப்பட்ட, அவருக்குள்ளிருந்த அதே ஆவியானது, சபைக்குள்ளும் இருந்தாக வேண்டியிருக்கும். அதைப் போன்ற எதையும் உங்களால் போலியாக உருவாக்க (copy) முடியாது; அதிலிருந்து வித்தியாசமான எதையும் உங்களால் உண்டாக்கிக் கொள்ள முடியாது. அது கிறிஸ்துவுக்குள் வாசம்செய்த அதே பரிசுத்த ஆவியாக இருந்தாக வேண்டும். எடுத்துக்கொள்ளப்படுதல் வரும் போது, அந்த சரீரமானது வரும்போது, அவரிடமிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அவருடைய மணவாட்டி, அல்லது பரிசுத்த ஆவியானவர் அந்த மணவாட்டியை சரியாக இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் அப்படியே துளிகூட பிசகாமல் ஒன்றாகப் பொருந்தியதாய் (dovetail) கொண்டு வருவார். 135. லூத்தரின் நாட்களிலிருந்து, வெஸ்லியின் நாட்களுக்கும், பெந்தெகோஸ்தேயின் நாட்களுக்கும், இப்பொழுது கடைசி காலத்திலும், அந்த ஆவியானது எவ்வாறு விருத்தியாகி வந்துள்ளது என்பதை உங்களால் காண முடிகிறதா? அவர் பூமியில் செய்த அதே அடையாளங்களும் அற்புதங்களும் இன்றும் சபையில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது தேவன் ஆபிரகாமோடு செய்துகொண்ட அந்த உடன்படிக்கையாக உள்ளது, நாம் ஆபிரகாமின் பிள்ளைகளா யிருக்கிறோம். "நாம் கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் சந்ததியாகி, வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறோம்." அந்த நேரம் முதற்கொண்டு, சபையானது ஒரு உடன்படிக்கையைக் கொண்டிருந்தது. ஆம், அது வித்தியாசமாயிருந்தது. 136. இப்பொழுது, வனாந்தரத்தின் பின்புறத்தின் பின்னால் தப்பி யோடிப்போன ஒரு தீர்க்கதரிசியாகிய மோசே... அம்மனிதன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும்படி பிறந்திருந்தான். மேலும் அவன் ஒரு மகத்தான மனிதனாக இருந்தான்; அவன் இராணுவத்திலே கற்று முடித்தவனாயிருந்தான். ஆனால் அவன் தன்னுடைய அறிவாற் றல்கள் எல்லாவற்றைக் கொண்டும் அதை செயல்படுத்த முயன்றான். ஏன், அவன் மிகவும் புத்திசாலியாக இருந்தான், அந்த எகிப்திய ஆசிரியர்களுக்கும் அவனால் கற்றுக்கொடுக்க முடிந்தது. அவன் ஒரு புத்திசாலியான மனிதனாக இருந்தான். இப்பொழுது, அந்த வனாந்தரத்தின் பின்புறத்தின் பின்னால், அவன், "நான் தோற்றுப் போய்விட்டேன், இந்நிலையில் எனது ஜனங்களோ இன்னும் அடிமைத்தனத்தில் தான் இருக்கிறார்கள். ஒருக்கால் நான் எனது கணிதத்திலோ, அல்லது இராணுவ யுத்த தந்திரத்தைக் குறித்த எனது யுக்தியிலோ, அல்லது வேறு ஏதோவொன்றிலோ சற்று எல்லாவற்றையும் கற்றுக்கொள்வது மேலானதாயிருக்கும். நான் சென்று, இன்னும் கூடுதலாக இரண்டு வருடம் கல்விச்சாலையில் படிப்பேன், அப்பொழுது ஒருக்கால் நான் என்னுடைய ஜனங்களை விடுவிக்க இயலும்" என்று கூறியிருந்தால் என்னவாகியிருக்கும். 137. ஒரு பிரசங்கியாயிருக்கும்படி கற்றுக்கொள்ள ஒரு மனிதனை அனுப்புவதைப் போன்றே, அவன் அதைச் செய்வது அதிக அறிவாற்றல் உடையதாய் இருக்கிறது. தனக்கு காரா மணிகளுக்கும் (beans) காப்பிக் கொட்டைகளுக்கும் (split coffee) (வித்தியாசம்) தெரியாதிருந்தாலும், (அப்படிப்பட்ட) மனிதர்களை தேவன் அழைக்கத்தான் செய்கிறார். அது என்ன வித்தியாசத்தை உண்டாக்குகிறது? அவன் கிறிஸ்துவை அறிந்திருக்கும் வரையில், அவன் எப்பொழுதாவது அவரைச் சந்தித்திருந்தால், அதுவே பிரதான காரியமாகும். 138. மேற்கத்திய வட அமெரிக்காவின் வறண்ட பகுதியில் வளரும் புதர்செடி உள்ள ஒரு-ஒரு வயல் நிலத்தில், ஒரு பழைய அடிக் கட்டையின் பக்கத்தில் கீழே ஏதோவொரு இடத்திலே, தன்னுடைய ABC-கள் கூட தெரியாமல் இருந்தாலும், அல்லது வலது கை எதுவென்றோ இடது கை எதுவென்றோ தெரியாமல் இருந்தாலும், அவனுக்கு இயேசு கிறிஸ்துவைத் தெரியும் என்றால், அதோ அங்கே வெளியிலிருக்கும் என்னுடைய பிள்ளைகளில் ஒருவரோடு, (அப்படிப்பட்ட) யாரோ ஒருவனையே வைத்திருக்க அதிகம் விரும்புவேன், நிறைய வேதசாஸ்திரத்தை அறிந்திருந்தும், ஆழமான பனியில் நடக்க உதவும் பனிக்காலணிகளைக் (snowshoes) குறித்து ஒரு முயல் அறிந்திருப்பதைக் காட்டிலும் தேவனைக் குறித்து அதிகம் அறிந்திராத எந்த பேராசிரியரையும் (வைத்திருக்கும்) முன்பாக எனது பிள்ளையின் பக்கத்தில் அவனை வைத்திருக்கவே விரும்பியிருப்பேன். நான்... விரும்பியிருப்பேன். 139. சகோதரனே, இன்று நமக்கு தேவையாயிருப்பது என்னவென்றால், வேதாகமத்திற்குத் திரும்புவதும் பழமை நாகரீகம் வாய்ந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை சபைக்குள்ளாக திரும்பவும் (கொண்டு வருவதும்), இந்த அதிகமான மற்ற காரியங்களை அகற்றி விடுவதும் தான் என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். 140. நான் அறியாமையை ஆதரிக்க முயலவில்லை. நீங்கள் அதனோடு கூட இந்த கல்வியை பெறுவீர்களா என்று தான் நான் கருதுகிறேன், ஆமென். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் கல்வி சம்பந்தமான உடன்படிக்கை விழுந்துபோய்விடும், ஆனால் தேவனோடுள்ள உடன்படிக்கையோ என்றென்றும் நிலைத்திருக்கும். அது நித்தியத்திற்குள் யுகா யுகங்களாக தொடர்ந்து இருக்கும். 141. இப்பொழுது, மோசே, அவன் எதன்பேரிலும் மெருகேற்ற வேண்டியிருக்கவில்லை; அவன் செய்த ஒரே காரியம் என்னவென்றால் தேவனைச் சந்தித்தது தான். ஒரு நாள், தேவன் இறங்கி வந்து அங்கே வெளியிலிருந்த ஒரு புதரில் வந்து, "இங்கே வா, மோசே. நான் உன்னிடம் பேச விரும்புகிறேன்" என்றார். அதைக் குறித்து ஏதோ வினோதமான காரியம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும், "அந்த நேரம் முதற்கொண்டு, ஏதோவொன்று சம்பவித்தது" என்று மோசேயினால் கூற முடிந்தது. 142. அவனை நோக்கிப்பாருங்கள். அந்த மலைக்கு பின்னால், அந்த மலையின் கீழே அடிப்புறத்திலே அவன் தங்கிவிட்டான். அவன் அவ்வாறு தங்கியபோது, ஒரு அழகான எத்தியோப்பிய பெண்ணை விவாகம் பண்ணினான், அவள் அழகாயிருந்தாள்; அவனுக்கு கெர்சோம் என்னப்பட்ட ஒரு சிறு மகன் இருந்தான். ஓ, அவன் அப்படியே நன்றாக புசித்து குடித்து நலமாக இருந்தான். அவன் ஒரு ஆசாரியனாகிய - மீதியானிய ஆசாரியனாகிய எத்திரோவின் மகளாகிய சிப்போராளை விவாகம் பண்ணியிருந்தான், அவர்கள் அருமையாக முன்னேறிப்போய்க் கொண்டிருந்தார்கள், அவன் அன்பான ஒரு சிறு குடும்பத்தை உடையவனாயிருந்து, மிகுதியான ஆடுகளைக் கொண்டிருந்தான். அவன் அப்படியே அருமையாக நடத்திச்சென்று கொண்டிருந் தான், இந்நிலையில் அவனோ ஜனங்கள் போகட்டும் என்று விட்டுவிட்டான். ஆனால் தேவன் அவனைச் சந்தித்தபோது, அவர் அவனை மாற்றினார். அதோ அவனை, அங்கே பின்னாலிருந்த இம்மகத்தான ஆடு மேய்ப்பவனைப் பாருங்கள், ஆனால் அந்தக் காலை வேளையில்... 143. உங்களுக்குத் தெரியும், சில காரியங்கள்... அதைக்குறித்த ஒரு காரியம் என்னவென்றால், ஒரு மனிதன் தேவனைச் சந்திக்கும் போது, நீங்கள் எப்போதுமே அதைக் கூற முடியும். (அப்போது) அவன் வழக்கமாகச் செய்வதற்கு மிகவும் முட்டாள் தனமான காரியங்களைச் செய்வான். மோசேயைக் கவனித்துப் பாருங்கள். இப்பொழுது, மோசே, அவன் இந்த எரிகிற முட்செடியில் தேவனைச் சந்தித்து, அவன் எகிப்திற்குப் போகும்படி தேவன் அவனிடம் சொன்ன பிறகு அடுத்த நாள் காலையில்... அவன், முதலாவது, உமது மகிமையை எனக்குக் காண்பியும்" என்றான். அவர் தெய்வீக சுகமளித்தலை, குஷ்டரோகம் பிடித்த அவனுடைய கரத்தை அவரால் எவ்வாறு சுகமாக்க முடியும் என்பதை அவனுக்குக் காண்பித்தார். 144. அதன்பிறகு அவன் எகிப்திற்குப் போனான். இப்பொழுது கவனியுங்கள், அடுத்தநாள் காலையில், இதோ அவன் தன்னுடைய பாதையில் இருக்கிறான். இப்பொழுது, அவனுக்கு 80 வயதாயிருந்தது. வேதசாஸ் திரத்தை அவனுக்குள்ளாக கற்பிக்க அவனுக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டது; அதை அவனைவிட்டு வெளியேற்ற தேவனுக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டது. அது சரியே, உலகமானது அவனுக்குள் வைத்திருந்ததை அவனைவிட்டு வெளியே எடுக்க, தேவ னுக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் அதைச் செய்யும்படி நீங்கள் மாத்திரம் அவரை அனுமதிப்பீர்களானால், 40 நொடிகளில் தேவனால் அதை உங்களுக்குச் செய்ய முடியும். ஆனால் அதன்பிறகு... 145. இப்பொழுது, இதோ அவன் அடுத்த நாள் காலையில் இருக்கிறான். ஒரு நாளில் எகிப்தியரின் சகல ஞானத்திலும், மெருகேற்றப்பட்ட தனித்திறமை பெற்றவனாகவும் (இருந்தான்), அடுத்தநாள் காலையில், இந்த கைதேர்ந்த நிபுணனைப் (scholar) பாருங்கள். அவன் தன்னுடைய மனைவியை ஒரு கோவேறு கழுதையின்(மேல்), கால்களை இரண்டு பக்கங்களிலும் அகலப் பரப்பியவண்ணமாக இருத்தி, பிள்ளையை அவளுடைய இடுப்பில் வைத்துவிட்டு, இதோ அவன் இந்த விதமாக ஒரு பெரிய, நீளமான தாடி (set of beard) இருக்க, அவனுடைய வழுக்கை தலை பிரகாசிக்க, தன்னுடைய கரத்தில் ஒரு கோலோடு, போய்க்கொண்டே, "மகிமை, மகிமை" என்று நெடுக குதித்து குதித்து நடந்துகொண்டே யிருந்தான். "மோசே, நீர் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்?" "நீங்கள் என்ன சொன்னீர்கள்? ஊ?" "நீர் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்?" 146. "எகிப்தைக் கைப்பற்ற எகிப்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்": ஒரு மனிதனின் படையெடுப்பு ஆனால் அவன் அதைச் செய்து முடித்தான். அவன் அதைச் செய்தான். ஏன்? அவன் தேவனைச் சந்தித்தான். தொல்லைகள் கடினமாகி மற்றும்... எல்லாமே தவறாகப் போய்க்கொண்டிருந்தாலும், அவன் அந்த எரிகிற முட்செடியில் தேவனைச் சந்தித்திருந்தான் என்பதை நினைவு கூர்ந்தான். அது அவனுடைய இருதயத்திற்குள் கொழுந்து விட்டு எரிந்தது, எகிப்தியர்கள் எவ்வளவு தான் மோசமாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு தான் (இஸ்ரவேல்) புத்திரர்களை போக விடாமல் இருந்தாலும், அவர்கள் வனாந்தரத்தில் எத்தனை தடவைகள் கூச்ச லிட்டு, "தேவன் எங்களுக்கு...(செய்ய) வேண்டும்" என்று சொல்லி, அவனைக் கல்லெறிய விரும்பினாலும், "எகிப்தி லுள்ள இறைச்சி பானைகள் எங்களுக்கு வேண்டும்" என்றாலும் அது ஒரு பொருட்டேயல்ல. அது அவனைச் சிறிதளவும் தொல்லை உண்டாக்கவில்லை. அவன் ஒரு எரிகிற முட்செடியில் தேவனைச் சந்தித்திருந்த காரணத்தினால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி அசையாமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றுகொண் டிருந்தான். ஆம்,ஐயா. 147. சிறு கன்னிகையான மரியாள், இதைக்காட்டிலும் இழிவான ஒரு பட்டணத்திலுள்ள ஒரு சிறு சாதாரணமான பெண்ணாக இருந்தாள். ஆயினும் அவள் புகைப்பிடிக்கவோ அல்லது மது அருந்தவோ இல்லை; அவள் ஒரு கன்னிகையாயிருந்தாள். ஒருநாள், அநேகமாக தினசரி தண்ணீர் வழங்கீட்டின்படி, அவள் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவர-கொண்டுவரும்படி, தன்னுடைய கையின் கீழ் ஒரு சிறு பக்கெட்டை வைத்துக்கொண்டு பொது கிணற்றை நோக்கிய தன்னுடைய பாதையில், போய்க் கொண்டிருந்தாள். 148. அவள் பாதை ஓரமாக நெடுக போய்க்கொண்டிருப்பதை, பேசிக்கொண்டோ, அல்லது, ஒருக்கால் 'கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறார்; அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்" என்ற ஏதோவொரு நல்ல கீர்த்தனை பாடலை அவளாகவே பாடிக்கொண்டோ நெடுக நடந்து சென்று கொண்டிருப்ப தாக கற்பனை செய்துகொள்வோம். 149. [ஒலிநாடாவில் காலியிடம்] ஒரு பக்கெட்டிற்குப் பதிலாக அந்நாட்களில் ஒரு குடம் இருந்தது. சடுதியாக ஒரு பெரிய அக்கினிஸ்தம்பம் அவளுக்கு முன்பாக கீழிறங்கிவந்தது. அந்த அக்கினியி லிருந்து பிரதான தூதனாகிய காபிரியேல் நடந்து வந்து, "வாழ்க, மரியாளே" என்றான். (அதற்கு, "நில்; சற்று பொறு" என்று அர்த்தமாகும்.) "நில், மரியாளே. ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப் பட்டவள். நீ தேவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய், நீ எந்த மனிதனையும் அறியாமலேயே ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாய்" என்றான். "இது எப்படியாகும்?" என்று கேட்டாள். "பரிசுத்த ஆவியானவர் உன்னை நிழலிடுவார். உன்னிடத்தில் பிறக்கும் அந்தப் பரிசுத்த காரியமானது தேவனுடைய குமாரன் என்னப்படும்' என்றான். ஆமென். 150. அந்த நேரம் முதற்கொண்டு, மரியாள் ஒரு வித்தியாசமான பெண்ணாக இருந்தாள். அந்தச் சிறு கூச்ச சுபாவமுள்ள கன்னிகை சுற்றிலும் எல்லாவிடங் களுக்கும் போய், "எந்த மனிதனையும் அறியாமலேயே நான் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறேன்" என்று சாட்சிபகர்ந்து கொண்டிருந்தாள். 151. அவள் உறுதிப்பாடு கொள்வது வரையில் காத்திருக்கவில்லை; அவள் ஜீவனை உணருவது வரை யில் அவள் காத்திருக்கவில்லை; அவள் எந்த உறுதிப்பாட்டுக்கும் காத்திருக்கவில்லை. தூதனின் வார்த்தையே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அவள் தேவ னைச் சந்தித்திருந்தாள். இப்பொழுது, அந்... இப்பொ ழுது, உங்களால் அதைச் செய்யக் கூடுமானால், நாம் இங்கே இன்றிரவில் இன்னும் அதிகமான மரியாள்களைக் கொண்டிருந்திருப்போமானால், "நான் எதையும் கூறுவ தற்கு முன்பாக, நான் சற்றே நலமாக இருக்கிறேனா என்று காண்பது வரை காத்திருங்கள்" என்று கூறாத மரியாள்களைக் கொண்டிருந்தால். அவள் எதையும், வேறு ஏதாவதை உணரும் முன்பாகவே, அவள் அப்படியே தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்து, அதற்காக அவருக்கு துதிசெலுத்தத் துவங்கினாள். ஓ என்னே. நாம் ஒரு சில நிமிடங்கள் அவளை பின் தொடரலாம். நாம் மிகத் துரிதமாக அவளைப் பார்த்து விடலாம். அவளுக்கு எலிசபெத் என்னப்பட்ட ஒரு-ஒரு உறவின் முறையாள் (cousin) இருந்தாள். மேலும் எலிசெபெத்... தூதன் அவளிடம், "உன் இனத்தாளாயிருக்கிற (cousin) எலிசபெத்து தன் முதிர்(வயதிலே..." என்று சொல்லியிருந்தான். 152. சகரியா ஒரு ஆசாரியனாயிருந்தான், தூதன் அவனை ஆலயத்தில் சந்தித்து, பலிபீடத்தின் வலது பக்கம் நின்று, அவன் எலிசபெத் மூலமாக ஒரு மகனைக் கொண்டிருக்கப்போகிறான் என்று அவனிடம் கூறினான். அவன் அங்கே ஆலயத்தில் அவனுடைய ஊழியத்தின் நாட்களுக்குப் பிற்பாடு அவள் கர்ப்பந்தரிக்கப் போவதாயிருந்தாள். மேலும் அவள்... 153. ஏன், அவன் சந்தேகப்பட்டான். அந்த... அப்படியானால் சற்றே (அதைச்) சிந்தித்துப்பாருங்கள், அந்த வயதான ஆசாரியனுக்கு நிறைய திருஷ்டாந்தங்கள் இருந்தன: ஆலயத்திலிருந்த அன்னாள்; மேலும்- மேலும் சாராள், நாம் இப்பொழுதுதான் (அதைக்) குறித்துப் பேசி னோம்; (அவர்கள்) வயதுமுதிர்ந்தவர்களாக இருந்தும் குழந்தைகளைக் கொண்டிருந்தார்களே. (அவன்), "ஓ, இது சம்பவிக்க முடியாது. என்னுடைய மனைவி மிகவும் வயது முதிர்ந்தவள்" என்றான். அவனோ (தூதனோ), "நான் தேவனிடமிருந்து வந்த காபிரியேல். குழந்தை பிறக்கும் நாள் வரைக்கும் நீ ஊமையாக இருப்பாய். நீ அவனை 'யோவான்' என்ற பெயரால் அழைப்பாய்" என்றான். 154. அதன்பிறகு அவன் ஊமையனாயிருந்து, தன்னுடைய மனைவியிடம் சென்றான். அவள் கர்ப்பவதியாகி, அவள்... அது அவளிடம் ஆறு மாதங்கள் இருந்தும், அந்தக் குழந்தைக்குள் எந்த ஜீவனும் இல்லாதிருந்ததால், அவள் மிகவும் கவலையடைந்தாள். இந்நிலையில் மரியாள் இதைக்குறித்து கேள்விப்பட் டிருந்தாள். அவ்வண்ணமாக சிவப்பான அவளுடைய சிறு கன்னங்களை நான் காண்கிறேன்; அவள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு சந்தோஷமாக தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள்; இன்னும் எந்த உணர்ச்சியும் இல்லா திருந்தது. இயேசு ஒருபோதும், "நீ அதை உணர்ந்தாயா?" என்று கேட்கவில்லை. அவர், "நீ அதை விசுவாசித்தாயா?" என்று தான் கேட்டார். நீங்கள் விசுவாசிக்க (வேண்டிய) நேரத்தில், அதை விசுவாசிக்கவே விரும் புங்கள். 155. நான் முதலாவது உணர்ந்துகொண்ட வேளையில், அந்தக் கிருபையானது எவ்வளவு விலையேறப் பெற்றதாக தோன்றியது" என்பது சரியாக தொனிக்கவில்லையே, அப்படித்தானே? "நான் முதலாவது விசுவாசித்த வேளையில்; நான் தேவனை விசுவாசித்த போது." அவ்வாறு தான், அது விலையேறப்பெற்றதாக தோன் றியது. ஓ, தேவன் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் கூட்டங்களில் பிரத்தியட்சமாகி, மகத்தான அடையாளங்களையும் அற்புதங் களையும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்; ஓ, அது அப்படியே நம்முடைய இருதயங்களை தூண்டி எழுப்ப வேண்டும். நிச்சயமாக. "நான் விசுவாசித்த வேளையிலே, அந்த விசுவாசம், கிருபை எவ்வளவு விலையேறப்பெற்றதாகத் தோன்றியது." 156. இதோ மரியாள் போகிறாள், அவளுடைய சிறு கன்னங்கள் அவ்வளவாக ரோஜா மலர் போலவும், அவளுடைய சிறு கண்கள் மின்னிக் கொண்டு, பிரகாசமாகவும் இருக்க, அவள் ஆயத்தமாகி (girded her little self up), மேலே யூதேயாவின் மலைகளிலே, தன்னுடைய தன்னுடைய இனத்தாள் (cousin) வசித்துவந்த இடத்திற்குப் போகிறாள். என்னால் சாராளைக் காண முடிகிறது... 157. நான் வெளியே தெருவில் பெண்களைக் காண்கிறேன்... இன்று பகல் உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, நான்-நான்... நான் என்னுடைய முதுகைத் திருப்பாமல் இருந்திருந்தால், அவர்கள் என்னை அந்த உணவகத்தைவிட்டு துரத்தியிருப்பார்கள். அங்கே இந்தக் கொஞ்சமான பழைய குட்டை உடைகளை அணிந்து கொண்டு, ஒரு பெண் உள்ளே வந்தாள் (எந்த நேரத்திலும் தாயாகப் போகிறவள்) ஒரு மகத்தான பெரிய பழைய காரியம், ஓ, (அவள்) ஒரு சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருந்தாள்; மிகவும் மரணத்தை உண்டாக்குகிற காரியங்களில் அதுவும் ஒன்று என்று மருத்துவர் கூறுகிறார். கவனியுங்கள், சகோதரனே, அது ஒரு நாசம் விளைவிப்பதாக உள்ளது. நிச்சயமாக, அது அவ்வாறு தான் உள்ளது. அது தொண்டை மற்றும் நுரையீரல்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்; அதைப் புகைப்பது அங்கே கீழே உள்ளேயிருக்கும் அந்தக் குழந்தை வரைக்கும் (பாதிக்கிறது. ஆனால் அங்கே... 158. ஆனால் அந்நாட்களிலோ பெண்கள் வித்தி யாசமாக இருந்தார்கள். அவள் உள்ளே போய் தன்னை மறைத்துக்கொண்டு, மனிதர்கள் பார்க்காதபடி தவிர்த்தாள், அவள் உள்ளே சென்று தன்னை மறைத்துக்கொண்டாள். அவள் ஆறு மாதங்களாக அங்கே உள்ளேயே இருந்தாள்; சிறு யோவான் ஒருக்காலும் அசையவேயில்லை; அவன் தன்னுடைய தாயின் கர்ப்பத்தில் (womb) உருவாகியிருந்தான்; அது மொத்தமாக இயல்பைவிட கீழான நிலை தான் என்று நமக்குத் தெரியும். 159. இந்நிலையில் அவள் ஜன்னலை, திரைச் சீலையை உயர்த்தி இந்த விதமாக வெளியே உற்றுப் பார்த்திருப்பாள், அப்பொழுது ஏறக்குறைய 18 வயதான ஒரு அழகான பெண் வந்து கொண்டிருப்பதை கண்டாள். அவள் மறுபடியும் நோக்கிப்பார்த்தாள். ஓ, அவள், "அது மரியாள்; ஓ, என்னே" என்று சொல்லிவிட்டு, அவள் தன்னுடைய சிறு சால்வையை எடுத்து, தன்னைச் சுற்றிலும் போட்டுகொண்டு, அதிவேக மாக அங்கே வெளியில் ஓடினாள். 160. அவளுடைய புருஷன் அந்நேரத்தில் ஊமை யாக இருந்தான்; அவனால் பேச முடியாதிருந்தது. (அவள்) வெளியே ஓடி இந்த... எடுத்து, இந்தச் சிறு சால்வையை எடுத்து தன்னைச் சுற்றிலும் போர்த்திக் கொண்டு, வெளியே ஓடிப்போனாள். அவள் அங்கே பின்னால் உட்கார்ந்து, குழந்தை அணியும் சிறு மிருதுவான காலணிகளையும் மற்றும் காரியங்களையும் தைத்துக் கொண்டிருந்தாள், உங்களுக்குத் தெரியும். (அவள்) சிறு கம்பளத்தையும் (துப்பட்டியையும்), சிறு கைப்பின்னலையும் ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தாள், உங்களுக்குத் தெரியும். அவ்வண்ணமாக அவள் வெளியே ஓடிச்சென்று, "ஓ, மரியாளே" என்றாள். அந்நாட்களில், அவர்கள் ஒருவர் மற்றவரை அன் போடு தழுவிக் கொள்வார்கள் என்று உங்களுக்குத் தெரியும்; அவர்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருந்தார்கள். இந்நாட்களில், இனியும் அது உங்களுக்குக் கிடைக்காது. பாருங்கள்? 161. நான் நகரின் உட்பகுதியில் இருந்தேன். (என்னுடைய மனைவி இன்றிரவு இங்கேயில்லை. நான் அதைச் சொன்னேனே, அவள் இங்கு தான் இருக்கிறாள்.) நல்லது, நான் இங்கே சமீபத்தில் நகரின் உட்பகுதியில் போய்க்கொண்டிருந்தேன், அப்பொழுது ஏதோ வொரு சகோதரி, "ஹலோ, சகோதரி பிரான்ஹாம்" என்றாள். நான், "நீ அவளிடம் பேசவில்லையே" என்றேன். அவள், "ஆமாம், நான் பேசினேன்" என்றாள். "நல்லது," நான், "நீ அங்கே தெருவில் இருந்த போது, அவளுக்கு அது எப்படி கேட்டிருக்கும், நான் சரியாக உன் பக்கத்தில் இருந்தும் (எனக்கே) கேட்கவில்லையே?" என்றேன். ஓ," அவள், "நான் சிரித்தேன்" என்றாள். நான், "ஒரு சிறு அற்பத்தனமான அசட்டுச் சிரிப்பு, அது ஒன்றுமில்லை. ஆச்சரியமாயுள்ளது (My goodness), நீ ஏன் அந்த சகோதரியிடம் பேசவில்லை?" என்றேன். 162. அந்தக் காரியத்தைக் காண நான் வெறுக்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஃபுளோரிடாவில் இருந்தபோது, அங்கே ஒரு-ஒரு... அங்கே ஒரு அரச குல சீமாட்டிக்குச் சொந்தமான ஏதோவொருவித திடலில் வைத்து ஒரு கூட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவர்கள் சொன்னார்கள்... மேலாளர்களில் ஒருவர், மேலே வந்து, அந்த அரச குல சீமாட்டி உங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்" என்றார். "நல்லது," நான், "யார் அவர்கள்?" என்று கேட்டேன். அதற்கு (அவர்), "ஏன், அவர்கள்-அவர்கள் இங்கே ஒரு மகத்தான பெண்மணியாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு அரச குல சீமாட்டி" என்றார். நான், "நல்லது, அவர்கள் வெறுமனே ஒரு பெண் தான், இல்லையா?" என்றேன். 'ஆமாம்" என்றார். 163. நல்லது, நான், "நல்லது இப்பொழுது, அவர் களிடம் பேச நீர் எனக்கு நேரம் தரப் போகிறீர் என்றால், இங்கே வெளியில் மிக மோசமான நிலையில் வியா திப்பட்டவர்களாயிருக்கும் இந்த ஏழை ஜனங்களில் சிலருக்கு நேரம் தேவைப்படுவதைக் குறித்து என்ன?" என்றேன். புரிகிறதா? மேலும் நான், "அவர்களில் சிலருக்கு நேரம் தேவையாயிருப்பதைக்) குறித்து என்ன?" என்றேன். பாருங்கள்? ஆனால் அவர்கள்-அவர்கள்... நான் அவர்களை மேடையின் பின்புறத்தில் வருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றேன். 164. நான் அங்கு நடந்து சென்றேன். அவள் ஒரு ஜோடி மூக்கு கண்ணாடியை அங்கே ஒரு குச்சியிலே வைத்து தன்னுடைய கையில் பிடித்து அந்த விதமாக (கையை) நீட்டியபடி நின்றுகொண்டிருந்தாள். இப்பொழுது மூக்கு கண்ணாடியை அந்த விதமாக கையில் பிடித்துக் கொண்டு கையை நீட்டுவதை உங்களால் காண முடியாது என்று விவேகமுள்ள எவரும் அறிவார்கள், பாருங்கள். ஒரு மிஷனரியை உலகத்தைச் சுற்றிலும் ஐந்து முறை அனுப்ப போதுமான ஆபரணங்களை (நகைகளை) தன்னுடைய மணிக்கட்டில் அணிந்திருந்த மகத்தான பெரிய ஸ்திரீயாக (அவள் இருந்தாள்.) ஆம், ஐயா. பிடித்துக் கொண்டு... அவள், "நீர்தான் டாக்டர் பிரான்ஹாமா?" என்று கேட்டாள். நானோ, 'இல்லை, பெருமாட்டியே; இல்லை. நான் சகோதரன் பிரான்ஹாம்" என்றேன். ஓ, அவள், "எனக்கு ரொம்ப சந்தோஷமாயுள்ளது' என்றாள். அப்பொழுது அவள் அந்தப் பெரிய கரத்தை இந்த விதமாக மேலே உயர்த்தினாள். 165. இப்பொழுது, நான் கரத்தை மேலே நீட்டி, அவளுடைய பெரிய தடித்த கரத்தைப் பிடித்து அதை கீழே இழுக்க விரும்பினேன். நான், "உங்களை அறிந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. அதை (கையை) இங்கே கீழே போடுங்கள், அப்பொழுது அடுத்தமுறை நான் உங்களை காண்பேனா என்பதை அறிந்துகொள்வேன்" என்றேன். பாருங்கள்? 166. அது சரியே. ஒரு நல்ல, பழம்பாணியிலான கைகுலுக்குதலையே நான் விரும்புகிறேன். ஜனங்கள் தாங்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அவ்வாறு இருப்பதையே நான்-நான்-நான் விரும்புகிறேன். இந்த "அமெரிக்க நாய்" என்று நாம் அழைக்கிறபடி, மிகைப்படியான அளவிலே போலியாக நடிப்பதை நிறுத்தி விடுங்கள். நாம் கிறிஸ்தவர்களாயிருக்கிறோம். நாம் கிறிஸ்தவர்களைப் போன்று ஜீவித்து, மனிதர்களாகவும் ஸ்திரீகளாகவும், சிலுவையின் போர் வீரர்களாகவும் இருப்போம். இங்கேயுள்ள இவை யாவும் அபத்தமான வையாகவும்; அற்ப அசட்டுச் சிரிப்பாகவும் தான் உள்ளன. ஊ, நீங்கள் அதை உள்ளத்தில் உணரும் பழமையான அந்த நல்ல கைக்குலுக்குதலைத்தான் நான் விரும்புகிறேன். 167. பால் ரேடர் ஒருமுறை (இதைக்) கூறினார், அவருடைய மனைவி மேஜை அருகில் அமர்ந்திருக்கையில், அவர் அவளை விட்டு வந்தாராம், அவர் அவளை அழைத்துச் செல்ல விரும்பின ஏதோவொரு இடத்தைக் குறித்து ஒரு சிறு தகராறு அவர்களுக்கு இருந்ததாம். மகத்தான பால் ரேடர், உங்களுக்குத் தெரியும், அவர் என்னுடைய நல்ல நண்பர், அவர்-அவர் ஒருவிதத்தில் கோபப்பட்டதாக சொன்னார், அவ்வண்ணமாக அவர்-அவர் கதவண்டையில் சென்றார், அவருடைய மனைவி எப்போதுமே அங்கே காத்திருந்து அவரை முத்தமிட்டு வழியனுப்பி வைப்பாள். அவர் தொடர்ந்து வெளியே படிக்கட்டுகளில் சென்று, வெளி யில் ...ன் முடிவு வரைக்குமாக போய், திரும்ப அந்த விதமாக அவளைப் பார்த்து கை அசைத்துவிட்டு, வேலைக்குப் போய்விட்டார். 168. அவர்களுக்கு ஏதோவொன்றைக் குறித்து மேஜையருகில் ஒரு சிறு சச்சரவு (spat) உண்டாயிருந்ததாகச் சொன்னார். அவள் கதவருகில் நின்றுகொண் டிருந்தபோது, அவர், "போய்வருகிறேன்" என்றார். அவளும், "போய் வாருங்கள்" என்றாள். (அவர்) தொடர்ந்து தொடர்ந்து வெளியே போய், அங்கு வெளியே போனபோது, வாசலை நோக்கி திரும்பிப் பார்த்து, திரும்ப கை அசைத்த போது, அவள் கதவருகில் நின்று, அழுது கொண்டிருந்ததாகச் சொன்னார். அவர், "போய் வருகிறேன்" என்றார். அவளும், "போய் வாருங்கள்" என்றாள். 169. (அவர்) தொடர்ந்து தெருவிலே போய்க்கொண்டிருக்கையில், அது அவருடைய இருதயத்தில் கிரியை செய்யத் துவங்கினது என்றும், பரிசுத்த ஆவியானவர் அவரைப் பற்றிப்பிடித்து, உங்களுக்குத் தெரியும், அவருடைய இருதயத்தில் கிரியை செய்யத் தொடங்கினார். அப்பொழுது அவர், "ஓ, நான் போகும்போது, அவள் மரித்துப்போனால் என்னவாகும்? அவள் எதிர்பாராமல் மரித்துப்போனால், என்னவாகும்? நான் மரித்தால் என்னவாகும்? நான் திரும்பி வருவதற்கு முன்பாகவே, இங்கே ஃபோர்ட் வெய்ன்-ல் உள்ள வீதியிலேயே இடிக்கப்பட்டு போனால் என்னவாகும்? நான் என்ன செய்யக்கூடும்?" என்று சொன்னார். அதைப்போன்று, அவ்விதமாய் அதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார். ஓ, என்னே. அவர் சொன்னார், ஓ, நான் மிகவும் கண்டிக்கப்பட்டேன்; என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் திரும்பி மிக வேமாக ஓடிச்சென்று, வெளிவாயிற்கதவை சட்டென திறந்து, உள்ளே ஓடிச் சென்று, கதவை ஒரு தள்ளு தள்ளி திறந்து... என்று சொல்லி, சுற்றுமுற்றும் பார்த்து, 'ஹெலன், எங்கேயிருக்கிறாய்? நீ எங்கேயிருக்கிறாய்?' என்று கேட்டேன்" என்றார். 170. "அழுவதால் மூச்சை உறிஞ்சி உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் சத்தத்தை ('sniff, sniff) நான் கேட்டேன். அவள் கதவின் பின்னால் நின்று கொண்டிருந்தாள். நான் அவ்விதமாக அவளை உற்றுப்பார்த்து, ஒரு வார்த்தையும் சொல்லவேயில்லை. நான் வெறுமனே சென்று என் னுடைய கரங்(களால்) பற்றிக்கொண்டு, அவளை முத்தமிட்டு, போய்வருகிறேன்' என்றேன். அவளும் 'போய்வாருங்கள்' என்றாள்" என்று சொன்னார். 171. அவ்வண்ணமாக அவர் தொடர்ந்து வெளியே முன்வாசலுக்கு விரைந்துசென்று, திரும்பி, பார்த்தபோது, 'அவள் உள்ளே கதவருகில் நின்றுகொண்டிருந்தாள், அப்போது நான், 'போய் வருகிறேன்' என்று கூற அவளும், "போய் வாருங்கள்" என்று கூறி, முதல்தடவை கை அசைத்தது போன்றே கை அசைத்தாள், ஆனால் இரண்டாம் முறை அவள் அவ்வாறு செய்தபோது), அதில் அவள் ஒரு உணர்ச்சியைக் கொண்டிருந்தாள்" என்றார். எனவே அவ்வாறு தான்... 172. கர்த்தரைச் சேவிக்கும் விதமும் ஏறக்குறைய (அவ்வாறு) தான் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதில் உங்கள் இருதயத்தை வைக்க வேண்டும்; நீங்கள் உத்தமமாக இருந்தாக வேண்டும். நீங்கள் தேவனைச் சந்தித்தாக வேண்டும், சபைக்குச் சென்று சிறிது குளிர்ந்து போன, கண்ணீர் அற்ற அறிக்கையைச் செய்வது அல்ல; அங்கே சென்று அங்கேயே தரித்திருக்க வேண்டும். 173. நான் ஒரு பாப்டிஸ்டு சபையில் வளர்க்கப் பட்டேன்; உங்களுக்கு அது தெரியும். மேலே நடந்து சென்று, கரங்களைக் குலுக்கி, ஐக்கியத்தின் வலது கரத்தைப் பிடித்துக்கொண்டு, உங்கள் பெயரை ஒரு புத்தகத்தில் எழுதி, ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்களாய், இங்கேயிருக்கும் பாப்டிஸ்டுகளாகிய உங்கள் எல்லாரையும் போன்ற பாப்டிஸ்டுகளாய் நாங்கள் இருக்கவில்லை. நாங்கள் பீடத்தண்டை சென்று, தெளிவாகும் வரைக்குமாக ஒருவர் மற்றவரின் முதுகில் தட்டிக் கொண்டிருப்போம்; (அப்பொழுது) நாங்கள் ஏதோவொன்றைப் பெற்றுக்கொண்டோம், சகோதரனே. உங்களுக்கு இன்னும் அதிகமான... அவசியமாயிருக்கிறது என்று தான் நான் சொல்ல வருகிறேன். இங்கே வெளியிலிருக்கும் சிலகென்டக்கி பாப்டிஸ் டுகளும், பழமையான மிஷனரி பாப்டிஸ்டுகளும் தான் உங்களுக்கு தேவையாயிருக்கிறது. அவர்கள்... என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களுக்கும் பெந்தெகோஸ்தே ஜனங்களுக்கும் இடையே நான் கண்ட ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர் கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை ஏற்றுக்கொள்ளவில்லை; எனக்குத் தெரிந்தது எல்லாம் அவ்வளவு தான். அவர்கள்... 174. நாங்கள் தேவையானதைச் செய்தோம்; நாங்கள் அங்கே பீடத்தண்டையில் தரித்திருந்தோம், வயோதிப தாய்மார்கள் எங்களைச் சுற்றிலும் இருந்து அழுது கொண்டும் ஜெபித்துக் கொண்டும், ஏதோவொன்று சம்பவிக்கும் வரைக்குமாக எங்களை முதுகில் தட்டிக்கொண் டேயிருப்பார்கள். நாங்கள் மரித்து, மறுபடியும் பிறந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாகும் வரைக்குமாக அங்கேயே தரித்திருப்போம். ஆம், ஐயா. நாம் (அதிலிருந்து) தூரமாகப் போய்விட்டது மிகவும் மோசமாயுள்ளது. நாம் தேவனைச் சந்தித்தாக வேண்டும். மனிதன் தேவனைச் சந்திக்கும்போது, அது வித்தியாசமாக உள்ளது. அது முதற்கொண்டு அவன் ஒரு அவன் ஒரு வித்தியாசமான நபராயிருக்கிறான். 175. ஒருமுறை முழுவதும் குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குஷ்டரோகி இருந்தான். அவன் தேவனைச் சந்தித்தபோது, அந்த நேரம் முதற்கொண்டு, அவனுக்கு எந்த குஷ்டரோகமும் இல்லை. ஒருமுறை ஒரு ஒழுக்கக்கேடான பெண் கொஞ்சம் தண்ணீர் எடுக்க கிணற்றண்டை வந்தாள், அப்பொழுது ஒரு-ஒரு யூதர் மறுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அந்தக் குடத்தை கீழே வைத்துவிட்டாள்; அவள் மிகவும் ஒழுக்கங் கெட்டவளாக இருந்தாள், ஒழுக்கமான பெண்களோடு அவளால் வெளியே வர முடியாதிருந்தது. அப்பொழுது அவர்கள் இவர்களை ஒதுக்கிவைத்திருந்தார்கள்; இப்பொ ழுது அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவ்வண்ணமாக அவர்கள் அப்படியே... அது சமுதாயமாக உள்ளது. எனவே அவர்கள் கிணற்றில் வாளியை இறக்கி அந்த விதமாக அதை மேலே கொண்டுவரத் தொடங்குவார்கள். 176. அவள் அவ்வாறு செய்துகொண்டிருந்தபோது, யாரோ ஒருவர், "எனக்குத் தண்ணீர் கொண்டு வா, ஸ்திரீயே," அல்லது, "ஸ்திரீயே, எனக்குத் தண்ணீர் கொண்டு வா" என்று கூறுவதைக் கேட்டாள். அவ்விதமாகத்தான் அவர் சொன்னார், ஏனென்றால் அத்தேசத்தில் எப்போதுமே வினையுரிச்சொல்லுக்கு முன்பாகத் தான் வினைச்சொல் இருக்கும். ஆனால் அவர், "எனக்குத் தண்ணீர் கொண்டுவா" என்றார். எனவே, அவள், "யூதர்களாகிய நீங்கள் சமாரியர்களிடம் இவ்வாறு கேட்பது வழக்கமில்லையே. நாம் ஒருவருக்கொருவர் பழக்க வழக்கங்கள் வைத்துக்கொள்வதில்லையே" என்றாள். அவர், "ஆனால் நீ யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே என்னிடம் குடிக்கக் கேட்டிருப்பாய். நீ இங்கே (தண்ணீர்) கோர (draw) வராதபடி நானே உனக்கு தண்ணீர் கொடுத் திருப்பேன்" என்றார். 'ஏன்," அவள், "கிணறு ஆழமாயிருக்கிறதே, எப்படி நீர்... எப்படியாவது நீர் எங்ஙனம் (தண்ணீர்) கோரப் போகிறீர்?" என்று கேட்டாள். அவர், "நான் கொடுக்கும் தண்ணீரோ ஆத்துமாவில் பொங்கி வருகிற (bubbling up) ஜீவனாய், நித்திய ஜீவனாயிருக்கிறது" என்றார். "ஏன்," அவள், "எங்கள்-எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டார்கள், நீங்களோ... எருசலேமில் என்று சொல்லுகிறீர்கள்" என்றாள். 177. அவர் அவளுடைய ஆவியைப் பிடிக்கும் மட்டுமாக தொடர்ந்து உரையாடிக்கொண்டேயிருந்தார். அவர் அவளுடைய ஆவியைப் பிடித்தபோது, "நல்லது, நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா" என்றார். அவள், அவள் ஒரு ஒழுக்கக்கேடான ஸ்திரீ என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இந்நிலையில், "போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா' என்றார். "ஏன்," அவள், "எனக்கு புருஷர் யாரும் கிடை யாது என்றாள். அவரோ, "நீ உண்மையைச் சொன்னாய். ஏனென்றால் உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள், இப்பொழுது உன்னோடு வாழ்பவனும் உன் புருஷனல்ல. ஆகையால் நீ சொன்னது சரிதான் (In that thou saidst well)" என்றார். 178. அந்த ஸ்திரீயைக் கவனித்துப் பாருங்கள். துரித மாக, ஏதோவொன்றை, நீங்கள் ஒவ்வொரு இரவும் சந்திக்கிற அதே ஒருவரை அவளும் சந்தித்திருந்தாள். அது அவளை மாற்றியது போன்று உங்களையும் அது மாற்றியிருக்குமா? அவள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்" என்றாள். அவர் பெயல்செபூல் என்று சொன்ன அந்த ஆசாரியனைப் (பார்க்கும்போது,) அது என்ன வித்தியாசமாக இருந்தது. அவள் அந்த பிரசங்கிமார்களில் பாதிபேரைக் காட்டிலும் நன்றாக கற்றிருந்தாள்; இருப்பினும் (அவள்) ஒரு விபச்சாரியாக (prostitute) இருந்தாள். 179. "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன் இப்பொழுது, சமாரியர்களாகிய நாங்கள் ஒரு மேசியா வருவார் என்று எதிர்நோக்கியிருக்கிறோம் என்பதை அறிவோம்; அவர் ஒரு தேவன்-தீர்க்கதரிசியாக இருப் பார். அவரே மேசியாவாக இருப்பார், ஆனால் அவர் இக்காரியங்களை எங்களுக்குத் தெரிவிப்பார். அவர் வரும்போது, இந்த இதே மாதிரியான கிரியைகளைச் செய்வார்" என்றாள். அது மேசியாவின் அடையாளம் தானா? அது அப்போது (அவ்வாறுதான்) இருந்தது. பாருங்கள்? "நாங்கள் அறிவோம்... நீர் ஒரு தீர்க்கதரிசி என்று அறிகிறேன்; நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது, இவைகளை எங்களிடம் கூறுவார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் நீர் யார்?" என்றாள். இயேசு, "உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நானே அவர்" என்றார். 180. இப்பொழுது, இயேசு... என்று சொன்னார் என அந்த நாஸ்திகன் ஒருவிசை என்னிடம் கூற நான் விரும்புகிறேன். அநேக நாஸ்திகர்கள், "இயேசு தேவனுடைய குமாரன் என்று ஒருபோதும் உரிமைகோரவே யில்லை" என்று உங்களிடம் கூறலாம். அவர் அங்கே அவ்வாறு உரிமைகோரினாரே; ஆமாம். அவர். "உன்னிடம் பேசுகிற நானே அவர்" என்று சொன்னார். 181. சீக்கிரமாக, அவள் அந்த வாளியை (அங்கேயே) விட்டுவிட்டு, அந்த நேரம் முதற்கொண்டு, அந்த நேரத்திலிருந்து, மேசியா பூமியின்மேல் இருந்தார் என்பதை அறிந்துகொண்டாள். ஓ, என்னே. நாம் மாத்திரம் இன்றிரவும் அதே காரியத்தைச் செய்யக் கூடுமானால். அவர் மரித்தவராயில்லை என்றும், அவர் என்றென்றுமாக ஜீவிக்கிறார் என்றும், அவர் பரிந்து பேசும்படி ஜீவிக்கிறார் என்றும் நம்மால் உணர முடியுமானால். "நான் பிழைக்கிறபடியால், நீங்களும் பிழைக்கி றீர்கள்." அவருடைய ஆவி நமக்குள் இருக்கிறது; அவருடைய ஆவி நம் மத்தியில் உள்ளது. 182. அந்த ஸ்திரீயுடைய சாட்சியின் நிமித்தமாக, அந்த நேரம் முதற்கொண்டு, அப்பட்டணத்தின் மனுஷர்கள் தேவன்மேல் விசுவாசம் வைத்தார்கள். இயேசு ஒருபோதும் அங்கே மறுபடியும் அதைச் செய்யவில்லை; அவர் வெறுமனே சென்று, ஒருமுறை அதைச் செய்த போது, முழு சமாரியர்களும் (all Samaria) அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள். அவர் ஒருபோதும் ஒரு சுகமளிக்கிற ஆராதனையையும் கொண்டிருக்கவில்லை; அதை பிலிப்பிற்காக ஒதுக்கி வைத்துவிட்டார் (saving). ஆனால் அந்த நேரம் முதற்கொண்டு, அந்த ஸ்திரீ மாற்றப்பட்டுவிட்டாள்; அந்தப் பட்டணமும் மாற்றப்பட்டு விட்டது. 183. ஒருமுறை தன்னைச் சுற்றிலும் ஒரு பழைய வழவழப்பான மேல் வஸ்திரத்தை (greasy apron) அணிந்திருந்த ஒரு வயதான மீனவனை, அவன் சகோதரனாகிய அந்திரேயா, இயேசுவுக்கு முன்பாக கொண்டு வந்தான். அவன் இயேசுவுக்கு முன்பாக வந்த உடனே, இயேசு, 'உன்னுடைய பெயர் சீமோன்; நீ யோனாவின் குமாரன்" என்றார். அந்த நேரம் முதற் கொண்டு, அந்த நேரத்திலிருந்து, அது ஒரு வித்தியாச மான மனிதனாயிருந்தது. 184. பிலிப்பு போய் நாத்தான்வேலைக் கண்டு அவனை அவரிடம் அழைத்துவந்தபோது, அவர், "இதோ கபடற்ற இஸ்ரவேலன்" என்றார். அவனோ, "ரபீ, நீர் என்னை எப்போது அறிந்தீர்?" என்று கேட்டான். 185. அவர், "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்பே, நீ அந்த மரத்தின் கீழ் இருந்தபோதே, உன் னைக் கண்டேன்" என்றார். அந்த நேரம் முதற்கொண்டு, அந்த நேரத்திலிருந்து, அவன் ஒரு மாற்றப்பட்ட மனிதனாயிருந்தான். தேவனோடு எப்பொழுதாவது தொடர்பு கொள்ளும் எந்த நபரும் மாறிவிடுகிறார்கள். 186. அங்கே ஒரு சிறு வளைந்த மூக்கை உடைய ஒரு யூதன் இருந்தான். திறவுகோல்களை சபையானது அறியாமையால் ஒரு மிகப்பெரும் தவறைச் செய்திருந்தது. அவர்கள் இங்குமங்கும் போய், "இப்பொ ழுது, நாமெல்லாரும் ஒன்றுகூடுவோம்" என்றார்கள். (திறவுகோல்கள் என்ன நன்மையைச் செய்தன என்று பார்ப்போம்.) இங்குமங்கும் சென்று, "நாமெல்லாரும் ஒன்றுகூடி, யூதாசின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள, ஆரம்பம் முதற்கொண்டே நம் மத்தியில் சஞ்சரித்த ஒரு மனிதனை தேர்ந்தெடுப்போம், ஏனென்றால், 'அவனுடைய ஸ்தலம் பாழாகக் கடவது, அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன்' என்று வேதவாக்கியத்தில் எழுதப்பட்டுள்ளது" என்றனர். 187. தாங்கள் சீட்டுப்போடலாம் என்று கூற, அது மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அவன் ஒருக்காலும் ஒரு காரியத்தையும் செய்யவேயில்லை. அது மனிதனுடைய தெரிந்துகொள்ளுதலாக இருந்தது. தேவனோ இறங்கிவந்து, அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள பட்டணத்திலேயே மிகவும் கீழ்த்தரமான சிறு மனிதனை, ஒரு சிறு யூதனை கொணர்ந்தார். அவர், அவன் எனக்காக என்ன செய்வான் என்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்" என்றார். 188. ஸ்தேவான் மரித்தபோது, இவன் அவனைக் கவனித்தான், அது ஒருவிதத்தில் இவனைப் பற்றிக் கொண்டது. அதன்பிறகு அடுத்த காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவன் தன்னுடைய பாதையில் இருந்தான். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ஒரு நிருபத்தை வைத்திருந்து, "அந்த பரிசுத்த உருளையர்கள் எல்லாரையும் நான் பிடித்துவருவேன். பிரதான ஆசாரிய ரிடமிருந்து கிடைத்த நிருபம் சரியாக இதோ என்னிடம் உள்ளது. நான் தமஸ்குவிற்குப் போய், அவர்களை சிறைச்சாலையில் போடுவேன்; என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்வேன். அந்த கூச்சலையும், சத்தத்தையும், நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும், அந்நிய பாஷைகளில் பேசுவதையும், மற்றும் காரியங்களையும் நான் நிறுத்திப்போடுவேன். நான் கட்டளை பெற்றிருக்கிறேன்; நான் அதைச் செய்வேன்" என்றான். அந்தச் சிறு மூக்கானது அந்த விதமாய் கீழ்நோக்கியிருந்தது (hanging down). தேவனோ, "நான் பாதையில் அவனைச் சந்தித்து அவனை மாற்றிவிடுவேன்" என்றார். 189. ஏறக்குறைய மத்தியான வேளையில், அவன் சாலையின் நடுவில் நெடுக போய்க்கொண்டிருந்தான், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அந்த அக்கினி ஸ்தம்பம் அவனுக்கு முன்பாக தோன்றி, "சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?" என்றார். அவன் தரையில் விழுந்தான். அவன், "ஆண்டவரே, நான் துன்பப்படுத்துகிற நீர் யார்? உமது பெயர் என்ன?" என்று கேட்டான். அவர், "நான் இயேசு, முள்ளுகளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்" என்றார். அந்த நேரம் முதற்கொண்டு, அவன் தன்னுடைய நிருபத்தை தூர எறிந்துவிட்டு அவர்களில் ஒருவனாக ஆகிவிட்டான்; அந்த நேரம் முதற்கொண்டு. ஆம், அது அவனை மாற்றினது. 190. அனனியா தான் கண்ட ஒரு தரிசனத்தின் மூலமாக அவன்மேல் கரங்களை வைத்தபோது, அவன் தன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொண்டான், அவனை தமஸ்கு நதிக்கு அழைத்துச்சென்று அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அவன்... புறஜாதி சபைக்கு ஒரு பரிசுத்தவானாக ஆனான். தேவன்... 191. இப்பொழுது, இங்கே பாருங்கள். எவ்வாறு... பவுல் மனமாற்றமடைந்தபோது, அநேகமாக சபையார், 'ஓ, நாம் இப்பொழுது எதைப் பெற்றிருக்கிறோம் என்று பாருங்கள். இம்மகத்தான பெரிய பவுலை நாம் பெற் றிருக்கிறோம். அம்மனிதன் கமாலியேலின் கீழிருந்தான் என்பதை நாம் அறிவோம்; அவர் தேசத்திலுள்ள மிக மகத்தான போதகர்களில் ஒருவர். மேலும் அவன் ஒரு பரிசேயன்; அவன்... ஓ, அவன் ஒரு மகத்தான மனிதன். நாம் அவனை எருசலேமில் உயர்த்தி, அவனை அங்கே சபைக்கு தலைவனாக ஆக்கிவிடுவோம். திறவுகோல்களை பெற்றிருக்கிற பேதுருவை நாம் எடுத்து விடுவோம்; அவன் படிக்காதவன், அவனால்... முடியாது என்று அவர்கள் சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும். அவன் (பேதுரு) படிக்காதவனும் கல்லாதவனுமாயிருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது. "அவன் திறவுகோல்களைப் பெற்றிருக்கிறான், எனவே நாம் அவனை வெளியிலுள்ள பரிதாபத்திற்குரிய, புத்தியில்லாத புறஜாதிகளிடமே அனுப்பிவிடுவோம். நாம் அவனை அவர்(களிடம்) கூட அனுப்புவோம். ஏனென்றால் அவன் ஏராளமான அற்புதங்களைச் செய்கிறவன், ஆனால் இந்த மகத்தான அறிவுத்திறம் வாய்ந்தவனை; நாம் இங்கே அறிவாற்றலுள்ள கூட்டத்தாரிடம் உயர்த்தி வைப்போம்." 192. ஊ, பரிசுத்த ஆவியானவரோ பவுலை வெளியி லுள்ள புத்தியில்லாதவர்களிடம் அனுப்பி, அதுவரை அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் அவன் மறந்து விடும்படி செய்து, மதிநுட்பமற்ற பேதுருவையோ எடுத்து, அவனை (கல்விகற்ற) கற்று தேர்ந்தவர்களிடம் அனுப்பினார். என்ன விஷயம்? அவர்கள் தேவனைச் சந்தித்தனர், அந்த நேரம் முதற்கொண்டு அறிவாற்றல் உடையவர்கள் மதிப்பிடப் படவில்லை, சரிதான். அந்த நேரம் முதற்கொண்டு, மிக உயர்ந்த சாதனைகள் மாற்றப்பட்டுவிட்டன. தேவன் எவ்வாறு மனிதன் சிந்திப்பதற்கு அப்படியே முரணாக காரியங்களைச் செய்கிறார். ஓ, என்னே. அது... அவர் மிகவும்... அவர் காரியங்களை மிகவும் எளிமையாகச் செய்கிறார். ஆம், பவுல் ஒரு மாற்றப்பட்ட மனிதனாக இருந்தான் (Paul was a changed man). 193. அங்கே ஒரு குருடன் இருந்தான், அன்றொரு இரவில் (அதன்) பேரில் பிரசங்கம் பண்ணினோம், (அவன்) வாசலண்டையில் இருந்து, ஆகாரம் அல்லது காசிற்காக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் தேவனைச் சந்தித்தபோது, அந்த நேரம் முதற்கொண்டு, அவனால் பார்க்க முடிந்தது. கதாராவில் தன் வஸ்திரங்களையும் தன்னைவிட்டு கிழித்துப்போட்டு, கல்லறை மயானத்திலேயே (graveyard) வாழ விரும்பின ஒரு பைத்தியம் பிடித்தவன் இருந்தான். பிசாசுகளுக்கு அது ஒரு நல்ல இடமாகும். அவ்வண்ணமாக அவன் அங்கே வெளியில் கிடந்தான், அவர்கள் அவனைச் சுற்றிலும் சங்கிலிகளினால் கட்டினார்கள் (put). அவன் மிகவும் பலமுள்ளவனாயிருந்தான்....ஒரு மனிதனை பாருங்கள். 194. நீங்கள் எப்பொழுதாகிலும் பைத்தியம்பிடித்த ஒரு நபரைக் கண்டதுண்டா? ஏன், அவனுக்கு tw-... அவனது பலத்தைப் (போன்று) மூன்று, அல்லது நான்கு மடங்கு (பலம் இருக்கும்). எனவே பிசாசுக்கு ஒப்புவிப்பது உங்களுக்கு உங்கள் பலத்தைப்போன்று நான்கு மடங்கு பலத்தைக் கொடுக்குமானால், நீங்கள் உங்களைத்தானே பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புவிக்கும்போது, என்னவாயிருக்கும்? (அப்பொழுது) எத்தனை ஆயிரம் மடங்கு உங்கள் பலம் இருக்கும்? பயப்படாதீர்கள். ஏன்? நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நடக்கிறீர்கள்; அதுதான் அந்த அபிஷேகம். தேவனைச் சந்தித்து என்ன சம்பவிக்கிறது என்று காணுங்கள். 195. இந்த வெறிபிடித்தவன் அங்கே வெளியில் ஓடுகிறான். பிசாசு, அவருடைய தோள்கள் வளைந்திருக்க, அங்கு மேலே வருகிற மிக ஒல்லியாக தோற்ற மளிக்கும் அந்தச் சிறு மனிதரை போய் பிடி" என்று சொன்னான். "அங்கே கீழேயிருக்கும் அந்தச் சிறு மனி தரை போய் பிடி. அவரைச் சுற்றிலும் நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஜனங்கள் எல்லாரையும் பார். கீழே இறங்கிச் சென்று அவரைப் பிடி" என்றான். 196. இதோ அவன் விரைந்து ஓடிச்சென்றான், அவ்வாறு அவன் சென்றபோது, அவன் தேவனைச் சந்தித்தான். அந்த நேரம் முதற்கொண்டு, அவன் தன்னுடைய வஸ்திரங்களை உடுத்தி, தன் சரியான மன நிலையில் இருந்தான். என்ன? அவன் தேவனைச் சந்தித்தபோது! நண்பர்களே, நீங்கள் தேவனைச் சந்திக்கும் நேரங்கள் உண்டு. அது ஒவ்வொரு மனி தனையும் மாற்றிவிடுகிறது. 197. நான் இப்பொழுது சற்றுநேரம், ஒரு காரியத் தைக் கூறப் போகிறேன். நீங்கள் இதற்கு கவனம்செலுத்த விரும்புகிறேன். நான் 31 வருடங்கள் ஒரு ஊழியக் காரனாக இருந்து வருகிறேன். இந்த சாட்சிக்குப் பிறகு நான் முடித்துவிடுகிறேன். நான் ஒரு கிறிஸ்தவனாய் ஆன முதற்கொண்டு ஒருக்காலும் மரணத்திற்கு பயப்படவில்லை. ஆனால் என்னை பயப்படுத்தினது, அல்லது, கவலைப்படுத்தினது என்னவென்றால், நான் இயேசு வருவதற்கு முன்பு மரித்துப்போனால், ஒரு-ஒரு ஆவியாக இருக்க எனக்கு விருப்பமில்லை என்பது தான், அந்த நேரத்திற்கு தான். நான்-நான் எப்போதுமே ஒரு ஆவியைப் போன்று காணப்படும் எதற்கும் பயப்படுவேன்; நான்-நான்-நான் அதைக்குறித்து பயப்பட்டேன். எனவே, நான்-நான்-நான் நினைத்தது (என்னவென்றால்), இந்த சரீரமானது... என்பதை நான்-நான்-நான் அறியும் போது. நான் கர்த்தரோடு இருக்கும்படி போய், ஒருக்கால் என்னுடைய சகோதரர்களில் ஒருவரை நான் காண்பேன் என்றால், அவர்கள் அங்கே ஒரு சிறு வெண் மேகத்தைப் போன்று, ஒரு ஆவியாக, அந்த நபருடைய ஆத்துமா போகும் என்று எண்ணியிருந்தேன். 198. நான், "ஓ, அதோ-அங்கே என்னுடைய சகோ தரன் இருக்கிறார். ஓ, என்னால் அப்படியே அவருடைய கரத்தைக் குலுக்க முடியுமானால். அவருக்கு கரம் எதுவும் இருக்காதே; அது கல்லறையில் அழுகிப்போய் விட்டதே. என்னால், 'ஹலோ' என்று கூற முடியுமானால், ஆனால் அவரிடம்... இல்லையே. எனக்கு... இருக்க முடி யாதே. எனக்கு எந்த நாவுமே இருக்காதே; என்னுடைய நாவு கல்லறையில் அழுகிப்போய் விட்டதே. என்னால் அவரை தழுவிக்கொள்ள முடியுமானால், ஆனால் எனக்கு... இருக்காதே. நான்-நான் ஒரு ஆவியாக தானே இருப்பேன்" என்று கூறிக்கொள்வேன். 199. ஓ, அது என்னை மிகவும் பயமுறுத்தியது. நான்-நான் அதை விரும்பவேயில்லை. நான்-நான்-நான் ஒரு கல்வி அறிவற்ற நபர், என்னால்-என்னால் வாசிக்க முடிவதே கஷ்டம் தான், 7-ம் வகுப்பு வரை தான் நான் படித்திருக்கிறேன். எனவே அதன்பிறகு நான், "நல்லது, என்னே, என்னால் மாத்திரம்... முடியுமானால். கர்த்தர் வருவது வரை நான் உயிர்வாழ்வேன் என்று நம்பு கிறேன்" என்று நினைத்தேன். 200. இப்பொழுது, அவர் திரும்பிவரும்போது, என்னுடைய சரீரம் உயிர்த்தெழும் என்பதை நான் அறிந்திருந்தேன். நான் ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பேன் என்றும், எல்லா முதுமையும் மறைந்துபோய்விடும் என்றும் அறிந்திருந்தேன். நீங்கள் அங்கே ஒருபோதும் வயதானவர்களாக இருக்கவே மாட்டீர்கள். இல்லை, ஐயா. பாவத்தின் ஒவ்வொரு அடையாளமும் அகற்றப்படும், முதுமை என்பது பாவத்தின் அடையாளம் தான். எனவே, பாவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாவுமே அகற்றப் படும், (அது) சாபத்திலிருந்து வந்த காரணத்தினால் தான். நீங்கள் பாவம் செய்ததால் அல்ல, ஆனால் நீங்கள் ஆதாமுடைய வழிமரபில் (வந்த) ஒருவராயிருக்கிறீர்கள், நீங்கள்-நீங்கள் திரும்ப புழுதிக்கே திரும்புகிறீர்கள். மேலும் நான், "இயேசு வருவதைக் காண என்னால் உயிர்வாழ முடியுமானால்" என்று நினைத்தேன். 201. இங்கேயிருக்கும் சகோதரன் ஜீன் அவர்களிட மும், சகோதரன் லியோ மற்றும் அவர்களிடமும், சகோதரன் ஃபிரட்டிடமும், என்னுடைய நண்பர்களில் அநேகரிடமும், நான் (இதைச்) சொல்லியிருக்கிறேன், நான், "ஓ, இயேசு வருவதைக் காண நான் உயிர்வாழ்வேன் என்று நம்புகிறேன், ஏனென்றால் அவர் வரும் போது, நான் மறுரூபமடைந்துவிடுவேன் (changed), அப்பொழுது நான் அந்த ஆவியாக இருக்க வேண்டி யிருக்காதே. நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை. இல்லை, ஐயா" என்று சொல்லுவேன். நான்-நான், "நான் (அவ்வாறு) இருந்தால், அதெல்லாம் சரிதான் என்று யூகிக்கிறேன், ஆனால் நான்-நான் கரங்களைக் குலுக்க விரும்புகிறேன். நான் மானிடர்களை நேசிக்கிறேன். மானிடர்களைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது, எனவே நான்-நான் அவ்வாறு இருக்கவே விரும்பு கிறேன்" என்றேன். 202. ஏறக்குறைய ஐந்து வாரங்களுக்கு முன்பு, அன்றொரு நாள் காலையில், வெளியே ஒரு கூட்டத்தில் இருந்துவிட்டு வந்திருந்த நான் களைப்பாயிருந்தேன், ஏறக்குறைய 7 மணிக்கு அறையில் தூக்கத்தை விட்டு விழித்த நான், என் மனைவியைப் பார்த்து, "இக்காலை யிலே, அல்லது காலையில் நாம் கூடாரத்திற்குப் போகலாம்" என்றேன். அவளோ இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள், நான் ஒருவிதத்தில் எழுந்து, படுக் கையின் தலைமாட்டில், என் கைகளை இந்த விதமாக பின்னால் வைத்தபடி, நான் அப்படியே அங்கு படுத்துக்கொண்டே, சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான், "ஏய், எனக்கு 50 வயதாகிறது. நான் கர்த்தருக்காக இன்னும் எதையும் செய்யவேயில்லையே. நான் அதிவிரைவாக எதையாகிலும் செய்தாக வேண்டும். நான்... ஆகிவிட்டேன். சற்று கழிந்து எனக்கு-எனக்கு வயதாகிவிடும். நான்-நான் துரிதமாக எதையாகிலும் செய்தாக வேண்டும்; நான் கர்த்தருக்காக எதையும் செய்யவில்லை" என்றேன். 203. 'ஆனால், நான் நிச்சயமாக... வெறுக்கிறேன் என்று உனக்குத் தெரியும், அவர் வருவதற்கு முன்பே மரித்துப் போவதைக் குறித்த எண்ணத்தையே நான் வெறுக்கிறேன். அவர் வருவாரானால்... அவர் (வருவதற்கு) இன்னும் ஒரு சில வருடங்கள் தாமதிப்பாரானால், நான் போக வேண்டியிருக்கும் என்ற அந்த எண்ணமே எனக்கு -எனக்கு பயமாயிருக்கிறது, நான் ஒருக்கால் அதைக் காண ஜீவிக்காமல் இருக்கலாம், அப்பொழுது நான் மரித்து ஒரு ஆவியாக ஆக வேண்டியிருக்கும்" என்றேன். ம்ம்ம், அது எனக்கு விருப்பமேயில்லா திருந்தது. 204. நான் அங்கே படுத்துக்கொண்டே, அவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கையில், நான் சென்ற இரவில் உங்களிடம் கூறியது போன்று, என்னுடைய சத்தத்தை நீங்கள் கேட்பது போல் அவ்வளவு தெளிவாக, ஏதோவொன்று, "அசையாமல் தொடர்ந்து முன்னோக்கி சென்றுகொண்டேயிரு (Keep pressing on)" என்று கூறுவதைக் கேட்டேன். 205. நல்லது, நான்-நான்... முதலாவது நான்... அது அவ்விதமாகத்தான் (in such a way) வருகிறது, இங்கே (வரும்) இந்த தரிசனங்களைப் போன்று: நீங்கள் அதைக் கூறினாலும், நீங்கள் கூறுவது (என்னவென்று) உங்களுக்குத் தெரியாது. நீங்கள் பேசிக்கொண்டும், சொல்லிக் கொண்டும் இருக்கிறீர்கள்; நீங்கள் (என்ன) பேசிக்கொண் டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. நான் யாராவது ஒருவருக்கு முன்பாக ஒரு தரிசனத்தைக் காணும்போது, நான் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரியாது. அதை அறிந்துகொள்ள எனக்குத் தெரிந்த ஒரே வழி என்னவென்றால், இங்கே ஒலிநாடாவுக்குத் திரும்பிச்சென்று அதைக் கண்டுகொள்வதுதான். பாருங்கள்? நான் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரியாது, ஏனென்றால் நீங்கள் வேறொரு ஸ்லத்திலுள்ள வேறு ஏதோவொரு இடத்தில் இருக்கிறீர்கள், ஒருக்கால் யாரோ ஒருவருடைய ஜீவியத்தில் நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு பின்போ, அல்லது அதோ அங்கே யாரோ ஒருவருடைய ஜீவியத்தில் (நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு) முன்போ நீங்கள் இருக்கலாம். பாருங்கள்? உங்களுக்குத் தெரியாது; நீங்கள் அதைக் கூறுவது உங்களுக்கே தெரியாது. அதற்கு நான்-நான், "தொடர்ந்து முன்னோக்கி போய்க் கொண்டேயிருக்கிறேன் (pressing on)" என்றேன். "தொடர்ந்து முன்னோக்கி போய்க்கொண்டேயிரு; தொடர்ந்து முன்னோக்கி சென்றுகொண்டேயிரு. பாதையின் முடிவில் பெரிய பலன் இருக்கிறது" என்றது. 206. இப்பொழுது, நான் கூட்டத்தலைவர்களிடமும் (chairmen) மற்றவர்களிடமும் இதைக் கூற அனுமதி கேட்டுக்கொண்டேன். அது ஒரு தரிசனம் என்று தான் நம்புகிறேன், ஆனால் அது அவ்வாறு இருக்குமானால், அதைப்போன்ற எதையும் நான் ஒருக்காலும் கண்ட தில்லை. எனக்கு ஏறக்குறைய மூன்று வயதாக இருந்தது முதற்கொண்டோ, ஒருக்கால் அதைக் காட்டிலும் சின்ன வயதிலேயே தரிசனங்களைக் கண்டுவருகிறேன். இதைப் போன்ற எதையும் நான் ஒருபோதும் கண்டதேயில்லை, அத்தகைய ஒரு அனுபவம் ஒருக்காலும் எனக்கு நேர்ந்ததே கிடையாது. அதைப்போன்ற ஒரு அனுபவம் உண்டாயிருந்த வேறு யாரோ ஒருவரைக் குறித்து, இங்கேயிருக்கும் மேய்ப்பர் எனக்குக் கொடுத்த, ஒரு புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் அதை வாசித்துக்கொண்டிருக்கிறேன், சகோதரன் (அது யார்? விக்கிள்ஸ்வொர்த் அவர்களா? அல்லது...) பிறைஸ், சகோதரன் பிறைஸ் அவர்கள் (Brother Price) அதைப் போன்ற ஏதோவொரு அனுபவத்தை உடையவராயிருந்தார் என்று அதில் கூறப்பட்டிருந்ததாம்; நான் அவருடைய புத்தகத்தை வாங்கி, அது என்னவென்று காண விரும்பினேன். நான் (அதைக்) கண்டு கொள்ள விரும்புகிறேன். 207. அது மறுரூபமாகுதலைப் போன்று காணப்படுவதின் நிமித்தமாக, நான் (அதை) மறுரூபமாகுதல் (translation) என்று கூற விரும்பவில்லை, நீங்கள் அவ்வாறு கூற விரும்பினால், அது பரிசுத்த பவுலைப் போன்றே செய்ய முயல்வதாக இருந்திருக்குமே. இல்லை, நான் எவ்வாறு இருக்கிறேனோ அவ்வாறே இருக்க விரும்புகிறேன் - விரும்புகிறேன். பாருங்கள்? அப்படியே... என்னால் பரிசுத்த பவுலாக இருக்க முடியாது, ஆனால் அவன் சேவித்த அதே தேவனையே நானும் சேவிக்கிறேன். மேலும் எனவே... நான் சொன்னேன்... அது, "தொடர்ந்து முன் னோக்கிப் போய்க்கொண்டேயிரு (Press on)" என்று தொடர்ந்து கூறிக் கொண்டேயிருந்தது. நான்-நான்-நான் மறுமொழியாக, "நல்லது, நான் தொடர்ந்து முன்னோக்கிப் போய்க்கொண்டேயிருக்கிறேன்" என்றேன். அவர், "பாதையின் முடிவில் பெரிய பலன் இருக்கிறது" என்றார். நான், "நான்.. உணருகிறேன். யார்... அது நிச்சயமாக என்னுடைய மனைவியாகத்தான் இருக்க வேண்டும். தேனே, நீ என்ன சொன்னாய்?" என்றேன். நான் அவளை அசைத்து, "மேடா? நீ என்ன சொன்னாய்?" என்று கேட்டேன். அவளோ, "ஊ?" என்றாள். அவள் தூங்கிக்கொண் டிருந்தாள். 208. அப்பொழுது நான், "நல்லது, அது அவளல்ல. அது ஒருக்கால் பரிசுத்த ஆவியானவராக இருக்கும்" என்றேன். நான், "அன்புள்ள பரலோகப் பிதாவே, நீர்தான் உமது தாசனிடம் பேசிக் கொண்டிருந்தீரா? நான் எதை அறிந்துகொள்ள நீர் விரும்புகிறீர்?" என்று கேட்டேன். 209. எதுவும் பேசவில்லை. நான் சிறிதுநேரம் காத்திருந்தேன். அது... என்று பேசிக்கொண்டிருப்பதை மறுபடியும் கேட்டேன். "கர்த்தாவே, காலத்திரைக்கு அப்பால் நான் காணட்டும்" என்ற அந்தப் பாடலை யாரோ ஒருவர் பாடிக்கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிந்தது போன்று தோன்றியது. நீங்கள் எப்பொழுதாவது அதைக் கேட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு தெரியுமா? கர்த்தாவே, துயரங்களும் பயங்களுமாகிய நிழலின் திரைக்கு அப்பால் நான் காணட்டும், துறைமுக மணிகளின் இனிய ஓசையை நான் கேட்கட்டும், அது என் பாதையைப் பிரகாசமாக்கி எல்லா பயத்தையும் போக்கும்; கர்த்தாவே, நான் காலத்திரைக்கு அப்பால் பார்க்கட்டும். யாரோ ஒருவர் அதைப் பாடிக்கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிந்தது போன்று தோன்றினது. நான், 'அது என்னவென்று ஆச்சரியாயிருக்கிறதே?" என்று நினைத்தேன். நான் இப்பொழுது இருப்பதைப் போன்றே இருந்தேன். அப்பொழுது ஏதோவொன்று, "தொடர்ந்து முன்னோக்கிப் போய்க் கொண்டேயிரு' என்று கூறுவதை நான் கேட்டேன். நான், "தொடர்ந்து முன்னோக்கிப் போவேன்" என்றேன். அவர், "திரைக்கு அப்பால் காண விரும்புகிறாயா?" என்றார். நான், அது எனக்கு உதவியாக இருக்கும்" என்றேன். 210. சற்று கழிந்து, எனக்கு ஏதோவொன்று சம்பவிப்பதை உணர்ந்தவனாய், நான், "இங்கே என்ன காரியம் நடக்கிறது?" என்று நினைத்தேன். நான் திரும்பிப் பார்த்தபோது, நான் படுக்கையில் படுத்துக்கொண்டிருப் பதை நானே காண முடிந்தது. 211. இப்பொழுது, இது-இது உங்களுக்கு இடறலாக இருக்குமாயின், இதைச் சொல்லுவதற்காக தேவன் என்னை மன்னிப்பாராக. பாருங்கள்? நான் இதற்கு முன்பு இதை ஒருபோதும் கூறியதே கிடையாது, என்னுடைய சபையாரிடம், என்னுடைய சொந்த சபையாரிடம் மாத்திரமே சொல்லியிருக்கிறேன். நான் திரும்பிப்பார்த்த போது, நீங்கள் என்னை ஒரு மதவெறி பிடித்தவன் என்று வகைப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான்- நான்..... நான் அவ்வாறு இருந்தால், அது எனக்குத் தெரியாது, நான்-நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை. இல்லை, ஐயா. ஆனால் நான்.... நான் என்னுடைய வேதாகமத்தை இதன்மேல் வைத்திருக்கையில், சென்ற இரவில் அணில்களைக் குறித்து நான் உங்களிடம் கூறினபடியே, இதுவும் உண்மை என்று பரலோகத் திலிருக்கிற தேவன் அறிவார். சமீபத்தில் தான் இது சம்பவித்தது. நான் திரும்பிப்பார்த்தபோது, நான் என்னையே கண்டேன், எனக்கு அசைவேயில்லாதிருந்தது. நான் திரும்பி, இவ்விதமாக பார்த்தபோது, ஒரு சிறிய ஸ்தலம் இந்த விதமாய் இறங்கி வருவதைப் போல் தோன்றியது. 212. நான்-நான்-நான் வருத்தம் தெரிவிக்கும்படியாக இதைச் சொல்லவில்லை, ஆனால் நான் பெண்களைக் குறித்து மிகவும் கடினமாக இருந்து வருகிறேன். நான் பெண்களை வெறுப்பவன் என்று அழைக்கப்படுகிறேன், ஆனால் நான் அவ்வாறல்ல; நான்-நான் பெண்களை வெறுப்பவன் அல்ல. நான்-நான் என்னுடைய சகோதரிகளை நேசிக்கிறேன், ஆனால் இந்த நவீன அமெரிக்க பெண்களைப் போன்று பெண்கள் நடந்துகொள்வதைக் காணவே எனக்குப் பிடிக்காது. நான் செயின்ட் ஏஞ்ச லோவுக்கு (Saint Angelo), இத்தாலியிலுள்ள ரோமில் அமைந்திருக்கும் நிலத்தடி கல்லறைக்குப் போயிருந்த போது, அங்கே அந்த நிலத்தடி கல்லறைக்கு அருகில், "அமெரிக்க பெண்களே, இந்த இடத்தில் பிரவேசிப்பதற்கு முன்பாக தயவுசெய்து உங்கள் உடைகளை அணிந்து, மரித்தோருக்கு மரியாதை செலுத்துங்கள்" என்ற ஒரு அறிவிக்கை பலகை இருந்தது. ம்ம். இந்த அமெரிக்க பெண்களை கவனித்துப்பாருங்கள், ஏன், அது ஒரு அவமானம். அவர்கள் என்னிடம், "அங்கே உங்கள் எல்லாருக்கும் ஒழுக்கமான எந்த பெண்களுமே இல்லையா?" என்று கேட்டார்கள். நான், "ஓ, நிச்சயமாக எங்களுக்கு இருக்கிறார்கள். அது வெறுமனே... அதுதான் அந்த மற்ற கூட்டத்தார்" என்று சொன்னேன். பாருங்கள்? ஆனால் வெறுமனே அமெரிக்கர்களாகவே அவர் கள் அறிந்திருக்கிறார்கள், அதுதான் அது. 213. மேலும் எனவே, இந்த... நான்... உங்களிடம் கூற இந்தக் கூட்டத்தில் எனக்கு நேரம் இருக்காது. 1933-.. இது ஒரு ஸ்திரீயின் தேசமாயுள்ளது. இது எண் 13-ஆக உள்ளது. இது வெளிப்படுத்தின விசேஷத்தின் 13-வது அதிகாரத்தில் காணப்படுகிறது: 13 நட்சத்திரங்கள், 13 கோடுகள், பதிமூன்று... எல்லாமே பதிமூன்று தான். எல்லாமே ஸ்திரீ தான். மேலும், கர்த்தர் உரைக் கிறதாவது, கடைசி நேரத்திற்கு முன்பாக ஒரு ஸ்திரீ ஆளுகை செய்வாள் என்பது நினைவிருக்கட்டும். அவள் ஒன்றில் ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ, அல்லது ஒரு ஸ்திரீக்கு ஒப்பான கத்தோலிக்க சபையாகவோ இருப்பாள். நான் அவளைக் கண்டேன்: ஒரு மகத்தான ஸ்திரீ, தேசம் அவளுக்கு தலைவணங்கினது. அது கடைசி நேரத்திற்கு முன்புள்ள ஒன்றாக இருக்கும். கர்த்தர் உரைக்கிறதாவது. வாலிப ஜனங்களே, இதை எழுதிவைத்து கண்டு கொள்ளுங்கள். அது சம்பவிக்கிறதா என்று பாருங்கள். அது சம்பவிக்கவில்லை என்றால், நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி. 214. இப்பொழுது, அதுதான் முடிவு என்பதை சற்றே நினைவில் கொள்ளுங்கள். இந்த அமெரிக்கா ஒரு ஸ்திரீயின் தேசமாயுள்ளது. அவள் சுயாதீனமாகவே தெய்வமாக இருக்கும் ஒரு இடமாக இது உள்ளது, மனிதன் அவளிடம் எதுவுமே கூறுவது கிடையாது. அவள் அதிகாரத்தன்மை கொண்டவளாக இருக்கிறாள்; அவள் தான் எல்லாவற்றையும், வர்த்தகங்களையும் மற்றும் எல்லாவற்றையுமே நடத்துகிறாள், சபைக்குள்ளும் கூட வந்துவிட்டாள், மேடையிலும், பிரசங்க பீடத்திலும் கூட வந்து, இப்பொழுது அதை நடத்திக் கொண்டிருக்கிறாள். எனவே அங்கு - அவ்விதமாகத்தான் அது இருக்கிறது, பாருங்கள், அது... காயீன் மற்றும் ஆபேலைப் போன்று... அல்லது ஆபேல்... காயீனைப் போன்று அது முற்றிலுமாக வேதத்திற்கு எதிராயுள்ளது. நிச்சயமாக, இந்தக் காரியங்கள் எல்லாமே, அவள் தான் ஆளுகை செய்கிறவளாய் இருக்கிறாள். மேலும் அவள்-அவள் ஒரு பெண் தெய்வமாகவே இருக்கிறாள். அமெரிக்காவில் அதுதான் உண்மையாக உள்ளது. 215. சகோதரிகளே, உங்களையல்ல, ஆனால் நான் எப்போதுமே அவர்களிடம் அவ்விதமாக சற்று கடினமாகவே இருந்தேன். ஒருக்கால் சிலசமயங்களில் சற்று மிகவும் கடினமாகவே இருந்தேன் என்று நான்-நான் நினைத்தேன், சிலசமயங்களில் அவ்வாறு இருந்திருக்கலாம். ஆனால் நான் எவ்வாறு (அதைச்) செய்ய முடியும்? நீங்கள்-நீங்கள் ஆவிக்குரியவர்களாக இருந்தால், சரியாக இப்பொழுதே அதைப் புரிந்துகொள்வீர்கள். பாருங்கள்? நான் என்ன கூற வருகிறேன் என்று நீங்கள் புரிந்துகொள்வதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கி றீர்கள்? [சபையார், "ஆமென்" என்று கூறுகிறார்கள்) நல்லது. 216. எலியாவை கவனித்துப் பாருங்கள். அவன் எப்படியாக கூக்குரலிட்டான்? அவனால் அதிலிருந்து விலகியிருக்க முடியவில்லை. அவன் அந்த யேசபேலுக்கு விரோதமாக கூக்குரலிட்டான்; அவன் அவ்வாறு செய்தானா? எவ்வாறு... இங்கே யோவான் ஸ்நானகனும் அவனுடைய அதே ஆவியோடு வருகிறான். அதைக்குறித்து கூக்குரலிடுவதை அவனால் எங்ஙனம் தவிர்க்க முடிந்திருக்கும்? "நீ உன்னுடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது முறையான தல்ல. அதற்காக அவனுடைய தலையை கிரயமாக செலுத்த வேண்டியதாயிற்று. பாருங்கள்? பாருங்கள்? தேவன் தம்முடைய மனிதனை எடுத்துக்கொள்கிறார், ஆனால் ஒருபோதும் தம்முடைய ஆவியை எடுப்பது கிடையாது. புரிகிறதா? அது தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. நான் 1933-ல் அந்த நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது, அவர் அங்கே அந்த நதியில் பேசினவண்ணமாக, கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்னோடியாயிருப்பது என்பது, அது தொடர்பாக என்ன சம்பவித்தது என்று பாருங்கள். புரிகிறதா? அது சம்பவிக்கும் என்று அவர் சொன்னது மிகச்சரியாக சம்பவித்தது. எனவே உங்களால் அதை அடக்கிக் கொண்டிருக்க இயலாது. 217. நான் நோக்கிப்பார்த்தபோது, ஏறக்குறைய 20 வயதுள்ள மில்லியன் கணக்கான வாலிப ஸ்திரீகள் என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள், அதைப்போன்று காணப்பட்டது. என் வாழ்நாள் முழுவதிலும் அவ்வளவு அழகான ஸ்திரீகளை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்களுடைய கண்கள் நட்சத்திரங்களைப் போன்றும், அவர்களுடைய பற்கள் முத்து(க்களைப்) போன்று வெண்மையாகவும், அவர்களுடைய இடுப்பு வரைக்கும் நீளமான தலைமயிர் தொங்கிக்கொண்டும், கீழே அவர்களுடைய பாதங்கள் வரை வெண்ணங்கி களைத் தரித்தவர்களாயும், வெறுங்காலுடனும் காணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்... இப்பொழுது, நான்... பெண்களே, இப்பொழுது, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஓடோடி வந்து தங்களுடைய கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, "எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே" என்று கூச்சலிட்டார்கள். 218. இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் என்னுடைய சரிதையை வாசித்திருப்பீர்கள், நான் ஒரு பையனாக, 7 வயதுடையவனாக இருந்தபோது, கர்த்தருடைய தூதனானவர் அந்நாளில் அந்தப் புதரிலே ஒரு சுழற் காற்றில் என்னைச் சந்தித்து, "ஒருபோதும் புகை பிடிக்கவோ, மது அருந்தவோ, அல்லது உன்னுடைய சரீரத்தை கறைபடுத்தவோ செய்யாதே" என்று கூறினார் என்பதை தேவன் அறிவார். நான் என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் புகைபிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது, நான் பெற்றிருக்கிற. என்னுடைய மனைவியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நான் அறிந்ததில்லை. எனவே பிறகு, நான் ஒரு பாவியாக இருந்தபோதும், ஒழுக்கக்கேடாக ஜீவித்தது கிடையாது. மேலும்... ஆனால் நான்... நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தது முதற்கொண்டு, எவ்வாறு ஜீவிப்பது என்று நான் அறிந்தவண்ணம் நன்னடத்தை உள்ளவனாகவே வாழ முயன்றுவருகிறேன், அது சத்தியம் என்பதை தேவன் அறிவார். 219. நான் இதைக் கூறட்டும்: ஒரு மனிதன் எவ்வளவு பரிசுத்தமுள்ளவனாய் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அவன் மனிதனாய் இருக்கும் காலம் வரையில், மறு பாலினத்தவரை, ஒரு ஸ்திரீயை கட்டித் தழுவி, ஒரு மனிதனுக்குரிய உடல் தூண்டு ணர்ச்சியைக் கொண்டிராமல் இருக்க முடியாது. எனக்குக் கவலையில்லை; நீங்கள் அதை என்னிடம் கூறலாம், அப்பொழுது நீங்கள் ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நான் உங்களிடம் கூறுவேன். நீங்கள் உயிரோட்டமுடைய ஒரு மனிதனாக இருந்து, நீங்கள் உண்மையாகவே ஒரு -ஒரு மனிதனாக இருப்பீர்க ளானால், அது அவ்விதமாகவே இருக்கும்; உங்களால் அதைத் தவிர்க்க இயலாது. நீங்கள் ஒரு மனித இனமாக இருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் தவறு ஏதும் செய்வீர்கள் என்று நான் சொல்லவில்லை; ஆனால் அந்த உடல் தூண்டுணர்ச்சியானது அங்கே சரியாக அதே விதமாகவே இருக்கும். 220. ஆனால் இதிலோ, அது போய்விட்டிருந்தது. தேவனுக்குத் துதிஉண்டாவதாக, அது போய்விட்டிருந்தது. அது என் சொந்த சகோதரி டெலோரஸை நான் தழுவிக் கொள்ளும்போது இருப்பதைப் போன்று (அதைப்) போன்றும் இல்லாதிருந்தது. அது ஒரு தாய் தன்னுடைய குழந்தையை எடுப்பது போன்றும் இல்லை. எனக்கு - எனக்குத் தெரியாது. அது பரிபூரணமாயிருந்தது. 221. நான் நோக்கிப்பார்த்தபோது, இதோ ஒரு கூட்டம் மனிதர்கள் வருகிறார்கள், அவர்களில் மில்லியன்கணக்கானோர் இவ்வளவு தூரத்திலிருந்து வந்து கொண்டிருப்பதைப் போன்று காணப்பட்டது. அவர்கள் யாவரும் வெண்ணங்கிகளை அணிந்திருந்தார்கள் மேலும் அடர்த்தியான தலைமயிர் அவர்கள் கழுத்தைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்தது போன்று உடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் என்னைப் பற்றிக்கொண்டு, "எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே" என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். 222. நான், "எனக்கு -எனக்கு தெரியவில்லையே" என்று கூறிவிட்டு திரும்பிப்பார்த்தேன், நான் பார்த்த போது, நான் அங்கே படுக்கையில் படுத்துக்கொண் டிருந்தேன். இப்பொழுது அது எங்கிருந்தாலும், அது இங்கிருந்து மிக தூரத்தில் இல்லை. அது வேறொரு பரிமாணமா, அல்லது என்னவென்று, என்னால் கூற இயலாது. ஆனால் நான் திரும்பிப்பார்த்தபோது, படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் என்னையே நான் கண்டேன்; நான் இவ்விதமாய் பார்த்தபோது, இங்கேயோ இந்த ஜனங்கள் இருந்தார்கள். மேலும் அந்த... 223. நான் "பரிபூரணம்" என்று கூறினால், அதுவும் அதை எட்டாது. நான் "உன்னதமானது" என்று கூறினாலும்; என்னால் (சரியான) ஆங்கில வார்த்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே நேற்றைய தினம் என்பதோ, நாளை என்பதோ இல்லாதிருந்தது, அதெல்லாமே இப்பொழுது என்பதாகவே இருந்தது; வியாதியோ, வருத்தமோ, பாவமோ, களைப்போ அங்கே கிடையாது; அவர்கள் புசிப்பதோ குடிப்பதோ இல்லை; அவர்கள் தூங்குவதும் கிடையாது, அவர்கள் உறங்கவேண்டியிருக்கவில்லை; இருப்பினும் அவர்கள் நபர்களாகவே (beings) இருந்தார்கள். அவர்கள் தங்கள் கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டுக்கொண்டபோது, நான் இந்த விதமாக என்னுடைய சொந்த கரங்களைத் தொட்டு உணருவது போன்று அதேவிதமாகவே அதை உணர்ந்தேன். (சகோதரன் பிரான்ஹாம் தமது கரத்தைத் தட்டிக் கொடுக்கிறார்]. 224. அதன்பிறகு நான் அந்த திரள்கூட்டத்தினரினூடே உருவ நோக்கிப்பார்த்தபோது, இதோ என்னுடைய சொந்த அன்புக்குரிய மனைவி வருகிறாள். பில்லியின் தாயாகிய அவள் 22 வயதாக இருந்தபோது, மரித்தாள், இதோ அவள் வருகிறாள். அவள் சரியாக... வந்தபோது, நான், "அவள் என்னை தன்னுடைய புருஷன் என்று அழைப்பாள்" என்று சொல்லிக்கொண்டேன். 225. அவள் அந்த பெண்களினூடாக நடந்துவந்து கொண்டே, என்னைநோக்கி அந்த விதமாக கைஅசைத்தாள். அந்த கருமையான கண்கள் அப்படியே ஒளிவீசிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது. அவள் ஒரு ஜெர்மன் தேசத்து பெண். அவள் ஓடிவந்து தன்னுடைய கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டுகொண்டு, "என் அன்புக்குரிய சகோதரனே" என்றாள். அங்கே மிகவும் அழகானதொரு பெண் நின்று தன்னுடைய கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டு, 'எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே" என்றாள். அதன்பிறகு ஹோப் தன்னுடைய கரத்தை போட்டு, (அதுதான் என்னுடைய மனைவியாக இருந்தவள்), அவள் இந்த மற்ற பெண்ணைச் சுற்றிலும் தன் கரத்தை போட்டு, "இது அற்புதமாக இல்லையா? அவர் இப்பொழுது நம்மோடு இருக்கிறார்" என்றாள். நான், "எனக்கு-எனக்கு - இது இது புரியவில்லையே. எனக்கு -எனக்கு எனக்கு... புரிந்து(கொள்ள)... முடியவில்லையே என்றேன். 226. இம்மனிதர்கள் என்னைத் தூக்கி ஒரு மகத்தான பெரிய உயரமான ஸ்தலத்தில் உட்கார வைத்து, என்னை அமரச்செய்து, அவர்கள் தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார்கள், அவர்களில் யாருமே என்னை முத்தமிடவில்லை, அப்படியே என்னை கட்டித்தழுவி, "சகோதரனே, எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே" என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் நோக்கிப்பார்த்தபோது, ஜனங்கள் எங்கிலுமிருந்து வந்துகொண்டிருந்தார்கள். நான், "இது என்ன?" என்றேன். இப்பொழுது அந்த சத்தம், (வேறு) யாரிடமும் இருந்து வரும் சத்தமல்ல, அறைக்குள் பேசிய அதே சத்தம் தான் அப்பொழுதும் என்னோடிருந்தது, அவர், "இதுதான் பரிபூரண அன்பு" என்றார். 227. பரிசுத்த ஆவியின் அத்தாட்சியானது பரிபூரண அன்பே என்று நான் எப்போதுமே போதித்திருக்கிறேன். பாருங்கள்? அந்நிய பாஷைகளில் பேசுவதில் எனக்கு நம்பிக்கை உண்டு, நிச்சயமாக. "ஆனால் நான் மனுஷர் பாஷையிலும் தூதர்கள் பாஷையிலும் பேசினாலும் கிறிஸ்தவ அன்பு எனக்கிராவிட்டால், நான் ஒன்று மில்லை, சத்தமிடுகிற வெண்கலமாகவும், ஓசையிடுகிற கைத்தாளமாகவுமே நான் ஆகிவிடுகிறேன்." ஆகவே, நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசும்போது, அதனோடு கூட அன்பையும் பெற்றிருங்கள், அதுதான் உங்களை வெளிப்படுத்தும். 228. இங்கே நாம் கொண்டிருக்கும் அன்பானது நிழலுக்குள்ளாக (இருக்கும்) நிழலின், நிழலுடைய ஒரு நிழலில் இருந்துதான் இங்கே துவங்குவது போன்றிருக்கிறது; அந்த நிழலில் இருந்து ஒரு பனிமூட்டத்துக்கும், அதன்பிறகு ஒரு சிறு ஈரப்பதத்திற்கும், பிறகு ஒரு சிற்றோடைக்குள்ளும், ஒரு நதிக்குள்ளும், அதன்பிறகு சமுத்திரத்திற்குள்ளுமாக இருக்கிறது. அங்கேதான் அது சென்றடைகிறது. எல்லாமே, முற்றிலும் பரிபூரணமாக. உங்களால் மரிக்க முடியாதிருந்தது; நீங்கள் பாவமான எதுவாகவும் இருக்க முடியாதிருந்தது. ஓ, நான் ஒருபோ தும்... அந்த ஸ்தலம் எவ்வாறு இருந்தது என்பதை என்னால் என்னால் ஒருபோதும் விளக்கிச்சொல்ல இயலாது. பாருங்கள்? அது-அது-அது அப்படியே... அது முற்றிலும் பரிபூரணமாகவும், பரிபூரணத்திற்கு அப்பாலும் இருந்தது. சற்று கழிந்து, அங்கே ஒரு... நான், "இது என்னவென்று எனக்கு-எனக்கு புரியவில்லையே" என்றேன். அதன்பிறகு மிகவும் அழகான ஒரு பெண் ஓடிவந்து, "ஓ, என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரனே, நீர் வந்துசேர்ந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாயுள்ளது" என்றாள். அவள் அங்கிருந்து போனபோது, நான் அவளை நோக்கிப்பார்த்து, 'என்னே, எல்லாரும் எப்படியாக மிகவும் அழகாயும் மிகவும் வாலிபமாகவும் இருக்கிறார்கள், மிகவும்.... இது என்ன?" என்று எண்ணினேன். தொடர்ந்து அந்த சத்தமானது, "இங்கே முதிர் வயதுக்கு சமானமாய் (இருந்த) யாவுமே, எல்லாமே பரிபூரணத்திற்கு திரும்பிவிட்டன" என்றார். 229. பாருங்கள், நாம் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரைக்கும் ஆகாரத்தைப் புசிக்கிறோம். எனக்கு 16 வயதிருக்கும்போது, நான் sa-..ஐ புசித் திருப்பேன். நான் கூறும் இதற்கு விஞ்ஞானம் பதில் அளிக்கட்டும்: நான் 16 வயதிருக்கும்போது இதே ஆகாரத்தையே புசித்தேன், இப்பொழுதும் பீன்ஸ், ரொட்டி, உருளைக்கிழங்கு, இறைச்சியைத் தான் புசிக்கி றேன். நான் புசிக்கும் ஒவ்வொரு முறையும், என்னுடைய ஜீவனை புதுப்பித்துக்கொள்கிறேன். அதுதான் இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது என்பதை எவரும் அறிவார்கள், அவ்வாறுதான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். இப்பொழுது, இங்கே அமர்ந்திருக்கும் மருத்துவரும் அதையே அறிந்திருக்கிறார். அப்போது நான் எல்லா நேரமும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரியவனாகவும் ஆனேன். எனக்கு ஏறக்குறைய 22 வயதானபோது, நீங்களும் கூட, நான் அப்பொழுதும் அதே ஆகாரத்தையே புசித்தும், எல்லா நேரமும் வயது முதிர்ந்தவனாகவும் வலுவற்றவனாகவும் ஆகிக்கொண் டிருக்கிறேன், (அது) என்னுடைய சரீரத்தில் புது ஜீவனை வைக்கத்தான் செய்கிறது. 230. விஞ்ஞானிகளே, (இதை) எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்: நான் தண்ணீரை ஒரு கூஜாவிலிருந்து கண்ணாடிக்குவளைக்குள் ஊற்றுவேன் என்றால், அது பாதி நிரம்பும்போது, நான் தொடர்ந்து இன்னும் அதிகமாக ஊற்றிக்கொண்டிருந்தால், அது தொடர்ந்து கீழே சிந்திக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானப்பூர்வமாக, அதைக் குறித்து என்னிடம் சொல்லுங்கள் பார்க்கலாம். அது என்ன, அது தேவன் செய்த ஒரு நியமனமாய் உள்ளது. நீங்கள் அந்த வயதை அடையும்போது, சரியாக அவர் உங்களை விரும்பும் நிலையில் உங்களைப் பிடித்து, "மரணமே வா; தொடங்கு" என்கிறார். உங்களுக்கு ஏறக்குறைய 22 வயதான பிறகு நீங்கள் மரிக்க துவங்கவில்லையா என்று விஞ்ஞானத்தைக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு தான் நன்றாக புசித்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல, நீங்கள் மரித்துக்கொண்டு, மிகவும் பக்கத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறீர்கள். இறுதியாக அது.. சரியாக அப்பொழுதே மரணமானது உங்கள் பாதையில் (track) இருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த வயதை அடையும் வரைக்கும் வளர்ந்துகொண்டேயிருக்கிறீர்கள். ஏறக்குறைய... முதற்கொண்டு. ஏறக்குறைய 15 வயது தொடங்கி ஏறத்தாழ 22 வயது வரைக்கும் நீங்கள் உங்களுடைய உச்ச உயர்நிலையில் இருக்கிறீர்கள். அது சரியே. 231. இந்த ஜனங்கள் சரியாக தங்கள் உச்ச உயர் நிலையிலும், சரியாக தங்கள் மிகச்சிறந்த நிலையிலும் இருப்பதாக காணப்பட்டார்கள். தொடர்ந்து நான், அங்கிருந்த அவர்களையும் அவர்கள் எவ்வாறு காணப் பட்டார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆகையால், நான், "அது அற்புதமாக இல்லையா?" என்று நினைத்தேன். 232. எட்டு வயதான என்னுடைய சிறு மகளை நான் கண்டபோது, when... அந்த இரவு உங்களுக்கு ஞாபகம் இருக்கும், என் சரிதையில் நீங்கள் அதை வாசித்திருக்கிறீர்கள். நான் அவளைச் சந்தித்தபோது, அவள் ஒரு வாலிப பெண்ணாக இருந்து, "ஹலோ, அப்பா" என்றாள். அதற்கு நான், "அப்பாவா? என் வயது உனக்கு இருக்கும்போது, எப்படி. இது எனக்கு புரியவில்லையே" என்றேன். அவளோ, "அப்பா, பூமியில், நான் உங்கள் குட்டி ஷாரோனாக இருந்தேன்" என்றாள். நான், "உன் தாய் எங்கே?" என்று கேட்டேன். அவள், "அவர்கள் மேலே உங்கள் வீட்டில் உங்க ளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சகோதரன் பில்லி பாலுக்காக நான் இங்கே காத்துக்கொண்டிருப்பேன்" என்றாள். 233. நான் தரிசனத்தைவிட்டு வெளியே வந்த போது.... அங்கே ஹோப் தன்னுடைய கரத்தை என்னைச் சுற்றிலும் போட்டிருந்தாள், நான் தரிசனத்தைவிட்டு வெளியே வந்து, அறைக்குள் நின்று கொண்டிருந்தபோது. அவள் அப்பொழுதும் தன்னுடைய கரத்தை என்னைச் சுற்றிலும் போட்டிருந்தாள். அப்பொழுது நான் தரிசனத் திலோ, நினைவற்ற நிலையிலோ இல்லை; நான் இப்பொழுது இருப்பதுபோன்றே நின்றுகொண்டிருந்தேன். அவளோ என்னை இந்த தோளின்மேல் மென்மையாக தட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தாள். தேவன் என்னுடைய நியாயாதிபதி யாயிருக்கிறார். நான், "ஹோப், நீ இன்னும் இங்குதான் இருக்கிறாய், இல்லையா?" என்றேன். அவள், "பில்லி, நீங்கள் என்னைக் குறித்தும் ஷாரோனைக் குறித்தும் கவலைப்பட மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்" என்றாள். 234. நான் சற்றேறக்குறைய... ஒருசில நிமிடங் களுக்கு முன்பு தான் நான் ஒரு கைத்துப்பாக்கியை என் கரத்தில் வைத்திருந்தேன். நான் அதைத் தொடர்ந்து இயக்கி (snapped), தற்கொலை செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதே நாளில் தான், நான் ஒரு மின்பணியாளராக (எலக்ட்ரீஷியனாக) வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய கையை 33,000 வோல்ட் மின்கம்பியின் மேல் வைக்க முயன்றேன், என்னுடைய சரிதை உங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரிந்த முதலாவது காரியம் என்னவென்றால், என்ன சம்பவித்தது என்பதை அறியாமலேயே, நான் அங்கே தரையில் அமர்ந்திருந்தேன், வியர்வை சிந்திக்கொண்டிருந்தது. தேவன் இந்த ஊழியத்தை ஜனங்களாகிய உங்களுக்காக ஒதுக்கிவைத்தார் என்பதைதான் அது குறித்துக் காட்டுகிறது; நான் சரியாக அப்பொழுதே மரித்துப் போயிருந்திருப்பேன். அவ்வண்ணமாக, அவள் தன்னுடைய கரத்தை என்னைச் சுற்றிலும் வைத்திருந்தாள், நான், "ஹோப், நீ இன்னும் இங்குதான் இருக்கிறாய்" என்றேன். அறையிலோ இருளாயிருந்தது. அவள், "எனக்கு வாக்குக் கொடுப்பீர்களா?" என்றாள். நான், "உனக்கு வாக்குக்கொடுக்கிறேன், ஹோப்" என்றேன். அவள் அவ்வாறு செய்தபோது, என்னைவிட்டுப் போய்விட்டாள்; அவள் என்னை அன்பாக தட்டிக் கொடுத்து, ஒருவிதத்தில் என்னை கட்டித் தழுவி, அதன்பிறகு என்னைவிட்டுப் போய்விட்டாள். நான், "ஹோப், நீ இன்னும் இங்கு எங்கோ தான் இருக்கிறாய், இல்லையா?" என்றேன். நான் அவளை இருட்டில் தடவித் தேடிப் பார்த்தேன். நான் விளக்கைப் போட்டு, ஒவ்வொரு நாற்காலியிலும் சென்று தொட முயன்று சுற்றிலும் கையை நீட்டிப்பார்த்தேன். 235. நான், "எங்கேயிருக்கிறாய், தேனே? என்னை விட்டுப் போகாதே; என்னைவிட்டு போய்விடாதே" என்றேன். அறையினூடாக சுற்றிலும் போய், அவ்விதமாக தடவிப்பார்த்துக் கொண்டிருந்தேன்; (அப்பொழுது) வெறுமனே ஒரு வாலிப பையனாக, சற்றுமுன்பு தான் விவாகம் பண்ணியிருந்தேன், பில்லியும் ஷாரோனும் பிறந்திருந்தார்கள். 236. நான் அவளைக் கண்டேன். இந்தமுறை நான் அவளைக் கண்டபோதும், அவள் அதேவிதமாகவே தோற்றமளித்தாள். நான் அங்கே இந்த ஸ்தலத்தில் உட்கார்ந்தவாறு, "எனக்கு இது புரியவில்லையே. நீங்கள் ஏன் என்னை இங்கே மேலே அமர வைக்கிறீர்கள்?" என்றேன். "நீர் ஒரு வழிகாட்டியாக (leader) இருந்தீர். ஜனங்களை வழிநடத்தும்படி, நீர் ஒரு வழிகாட்டியாகவே (leader) பிறந்தீர்" என்றார்கள். அதற்கு நான், "ஓ, என்னே. நல்லது..." என்றேன். அவர், "நல்லது, இதுதான் பரிபூரணம். இது கோத்திரபிதாக்கள் தங்கள் ஜனங்களோடு சேர்க்கப் பட்டது போல, அதைப் போன்றது என்றார். நான், "இது..? நான்-நான்-நான்-நான்... இதுதான் மரணத்திற்குப் பிறகு நிகழ்கிறதா?" என்று கேட்டேன். 'ஆமாம்." நான் திரும்பிப் பார்த்தபோது, அங்கே அப்பொழுதும் நான் படுக்கையில் கிடந்தேன். தொடர்ந்து அவர், "இதுதான் மரணத்திற்கு பிற்பாடு சம்பவிக்கிறது" என்றார். அதற்கு நான், ஓ அப்படியானால் மரித்துபோய்விட்டேன். நல்லது, இது அற்புதமாயிருக் கிறது; நான் இங்கே இருப்பது எனக்கு நல்லது. நான் இதை விரும்புகிறேன்" என்றேன். அதன்பிறகு சற்று முன்பு தன்னுடைய கரங்களை அந்த விதமாக என்னைச் சுற்றிலும் போட்ட மிக அழகான வாலிப பெண்ணாகிய, இந்தப் பெண். மேலும் "அப்படியே தொடர்ந்து முன்னோக்கி பிசகாமல் சென்று கொண்டேயிரு" என்று கூறப்பட்டது. அதற்கு நான், "நல்லது, ஏன்... என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே" என்றேன். நான், "இவர்கள் எல்லாரும் பிரான்ஹாம்களா?" என்று கேட்டேன். அவர்கள் மில்லியன்கணக்காக இருப்பது போல் தோன்றியது. நான், "இவர்கள் எல்லாரும் பிரான்ஹாம்களா?" என்று கேட்டேன். அந்த சத்தமானது, "இவர்கள் உன் மூலமாக மனமாற்ற மடைந்தவர்கள்" என்றது. நான், 'மனமாற்றமடைந்தவர்களா?" என்றேன். 237. "நீ அந்தப் பெண்ணைக் கண்டு அதிசயிக் கிறாயா? நீ அவளை கிறிஸ்துவிடம் நடத்தியபோது, நீ அவள் 90 வயதைக் கடந்தவளாயிருந்தாள். இப்பொழுது அவளைப் பார். அவள், 'என்னுடைய விலையேறப் பெற்ற சகோதரனே' என்று கூச்சலிட்டதில் வியப்பொன்று மில்லை" என்றது. 238. நான், "ஓ, என்னால் மாத்திரம் திரும்பிப்போக முடியுமானால், எனக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பம் இருக்குமானால். நான் இதன் முக்கியத்துவத்தை அவர்கள் மனதில் பதியவைத்து, வேகமாக அப்பால் இழுத்து, அவர்களை வற்புறுத்தியிருப்பேனே. பாருங்கள்? இதை யாரும் இழந்துபோய்விடாதீர்கள். இது -இது பரிபூரண மாயுள்ளது" என்றேன். 239. சற்று கழிந்து, நான் நோக்கிப்பார்த்தேன். என்னிடம் ஒரு வயதான நாய் இருந்தது. நாங்கள் வழக்கமாக வேட்டையாடுவதுண்டு; அது எனக்கு ஆடை அணிவித்து, பள்ளிக்கு அழைத்துவரும், (நாங்கள்) ஓபோசம் வேட்டை, கூன் வேட்டை மற்றும் காரியங்களையும் செய்வதுண்டு. நாங்கள் பட்டணத்திற்குள் இடம்பெயர்ந்து சென்றபோது, ஒரு போலீஸ்காரன் அதற்கு விஷம் கொடுத்து கொன்று போட்டான். 240. நான் அதனுடைய கல்லறையை தட்டிக் கொடுத்து, அதை எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் (back yard) அடக்கம் செய்தபோது, நான், "ஃபிரிட்ஸ், அங்கே...என்றொரு ஸ்தலம் இருக்குமானால்" என்றேன். (அப்போது) நான் ஒரு பாவியாக, ஏறக்குறைய 17 வயதுடையவனாயிருந்தேன். நான், "பரலோகம் என்னப்படும் ஒரு ஸ்தலம் இருக்குமானால், நீ அங்கே யிருப்பாய்" என்றேன். அதன்பிறகு, நான் மனமாற்றமடைந்தேன். நான் எப்போதுமே... என்று நினைத்துப் பார்ப்பதுண்டு இப்பொழுது சிலர்.. நான் யாரோ ஒருவரிடம் இதைக் கூறினேன், அவர்கள், "பரலோகத்தில் ஒரு மிருகமா" என்றனர். 241. பரலோகத்தில் நிச்சயமாக மிருகங்கள் உண்டு. நான் உங்களிடம் ஒரு காரியத்தை கேட்க விரும்புகிறேன். (அப்பொழுது) இந்த விமர்சனத்தை மிக விரைவாக நிறுத்திவிடலாம். இறங்கிவந்து எலியாவை பெற்றுக் கொண்டு மேலேறிச் சென்ற அந்த குதிரைகளுக்கும் இரதங்களுக்கும் என்ன சம்பவித்தது என்று என்னிடம் கூறுங்கள். இயேசு இரத்தத்தில் தோய்க்கப்பட்ட தமது வஸ்திரத்தை உடையவராய், சவாரிசெய்து வருகிறாரே, ஒரு வெண் போர்க்குதிரை மேல் சவாரிசெய்கிறாரே. அந்தக் குதிரை எங்கே உள்ளது? உ-ஊ? ஒருமித்து மேயப்போகிற அந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும், காளை மாடு போன்று வைக்கோலைத் தின்னுகிற சிங்கமும் எங்கே இருக்கிறது? அது எங்கிருந்து வருகிறது? 242. நான் நோக்கிப்பார்த்தபோது, இதோ அந்த குன்றினூடாக பழக்கமான ஃபிரிட்ஸ் இறங்கி வந்து கொண்டிருந்தது. அது என்னை பார்த்தவுடன் மேலே வந்து என் கரத்தை நக்கியது, நான் அதை அன்போடு தட்டிக்கொடுத்தேன். சற்று கழிந்து பழக்கமான என் னுடைய குதிரையாகிய பிரின்ஸ் வந்து தன்னுடைய கழுத்தை என் தோளைச் சுற்றிலும் வைத்து மெல்ல கனைக்கத் துவங்கியது. நான், "ஓ, தேவனே" என்றேன். நான் மேலே நோக்கிப்பார்த்தேன். அவர், "எப்போதாவது நீ நேசித்த யாவும், மற்றும் எப்பொழுதாவது உன்னை நேசித்த யாவுமே இங்கே ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கிறது" என்றார். அதற்கு நான், "இயேசுவைக் காண விரும்புகிறேன். நான் நேசித்து யாருக்காக உழைத்தேனோ அந்த ஒருவரைக் காண விரும்புகிறேன்" என்றேன். 243. அவர்கள், "உம்மால் இப்பொழுது உடனடியாக அவரைக் காண முடியாது; அவர் இதை விட உயர் இருக்கிறார். ஆனால் ஏதோவொரு நாளில் அவர் திரும்பி வருவார், அவர் வரும்போது, முதலில் உம்மிடம் வருவார். நீர் பிரசங்கித்த சுவிசேஷத்தின் பேரில் நீர் விசாரிக்கப்படுவீர். அப்போது, நீர் அந்த விசாரணையில் தேர்ச்சியடைவீரானால் (if you pass the test), நாங்கள் உம்மோடும், அவரோடும் பூமிக்குத் திரும்பிச்சென்று, ஒரு சரீரத்தில், நாங்கள் புசிக்கவும் குடிக்கவுமான ஒரு மாம்ச சரீரத்தில் என்றென்றுமாய் ஒன்றாக வாழ்வோம்" என்றார்கள். அதற்கு நான், நான் பிரசங்கம் பண்ணுகிற வார்த்தையின் பேரில் அவர் என்னை விசாரிப்பார் (question me) என்றா பொருள் கொள்கிறீர்?" என்று கேட்டேன். "ஆம்" என்றார். என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்த சத்தம் தான் அதைச் சொன்னது. நான், நல்லது, பரிசுத்த பவுலும் கூட விசாரிக்கப் படுவாரா?" என்று கேட்டேன். "நிச்சயமாக, அவனுடைய சபையாரோடு விசாரிக்கப் படுவான்" என்றார். நான், "அப்படியானால் பரிசுத்த பவுல் அதில் தேர்ச்சியடைவாரானால், நானும் கூட தேர்ச்சியடைவேன். ஒரு வார்த்தையிலும் பிசகாமல், அப்படியே மிகச்சரியாக அவர் பிரசங்கித்தவிதமாகவே, நான் அதை பிரசங்கித்திருக்கிறேன்" என்றேன். அப்பொழுது அந்த மில்லியன்கணக்கானோர், "நாங் கள் அதை அறிந்தவர்களாய், நிச்சயத்தோடு இளைப்பாறிக் கொண்டி ருக்கிறோம்" என்று மிக உரத்த சத்தமாய் கூறினார்கள். ஏறக்குறைய அந்நேரத்தில், அந்த சத்தமானது, "தொடர்ந்து பிசகாமல் முன்னோக்கி சென்றுகொண்டேயிரு" என்று கூறுவதைக் கேட்டேன். அப்பொழுது நான் என்னையே நழுவிச்செல்வதாக உணர்ந்தேன். நான், "நான் திரும்பிப்போக வேண்டிய தில்லை, அப்படித்தானே?" என்றேன். "தொடர்ந்து பிசகாமல் முன்னோக்கிப் போய்க் கொண்டேயிரு." நான் திரும்பி என்னுடைய சரீரத்தைப் பார்த்து, அது அசைவதைக் கண்டேன். நான் உணர்வு நிலைக்கு திரும்பவும் வந்து கொண்டிருந்தேன்; சற்றுநேரத் தில் நான் மீண்டும் அறைக்குள் இருந்தேன். 244. நண்பர்களே, அந்த நேரம் முதற்கொண்டு, நான் ஒரு மாற்றப்பட்ட நபராக இருந்து வருகிறேன். இதைக் குறித்து நீங்கள் என்ன நினைப்பீர்களோ எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய கரம் இந்த வேதாகமத்தின் மேல் இருக்கையில், அது உண்மையாகும். அது... அது எங்கேயிருந்தாலும், அது இங்கே இருந்ததா, அது ஒரு தரிசனமா என்று எனக்குத் தெரியாது. நான் அதைப்போன்ற ஒன்றை ஒருபோதும் (கண்டதே) இல்லை. அது ஒரு சிறு மறுரூபம் (translation) என்று நான் கூறட்டும் (அதுதான் என்று நான் சொல்லவில்லை), என்னுடைய ஆவி வெளியே புறப்பட்டுச் சென்று, அங்கு போனது என்று தான் சொல்லுகிறேன் (அது என்னவென்று எனக்குத் தெரியாது), அந்த முதலாம் வானத்தின் (first Heaven) கீழேயே அது மகிமையுள்ளதாக இருக்குமானால், பவுல் மூன்றாம் வானத்திற்குப் (third Heaven) போய், திரும்பி வந்து, "தேவனை நேசிக்கிறவர்களுக்காக அவர் பண்ட சாலையில் வைத்திருப்பவைகளை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அது மனுஷருடைய இருதயங்களில் பிரவேசித் ததுமில்லை" என்று கூறியபோது, பவுல் எதைக் கண்டிருக்க வேண்டும். 245. நான் இன்னும் அதிகமாய் தீர்மானம் பண்ணியுள்ளேன். நான்... அது முதற்கொண்டு இது என்னுடைய இரண்டாவது எழுப்புதல். மனிதர்களையும் ஸ்திரீகளையும் வற்புறுத்தும்படியாக என்னால் முடிந்த எல்லா வற்றையும் செய்ய வேண்டுமென்று நான் இன்னும் அதிகமாக தீர்மானித்துள்ளேன், தயவுசெய்து இதைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள்: தேவனுடைய அன்பு உங்கள் இருதயத்தில் முழு நிறைவாக நங்கூரம் பாய்ச்சப்படவில்லை என்றால், நீங்கள் எந்த உணர்ச்சியையோ மனவெழுச்சியையோ எடுத்துக் கொள்ள வேண்டாம்; தேவன்.... கிறிஸ்து உங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக (all in all) இருந்து, உங்களால்-உங்களால் மறு கன்னத்தையும் திருப்ப முடியும் என்பதில் நிச்சயமுடையவர் களாயிருங்கள். என் சகோதரனே, இழந்துவிடாதே. 246. இதை நினைவில்கொள்ளுங்கள். அந்த தரிசனத்தில், அது என்னவாக இருந்தாலும் அதில், எனக்கிருக்கும் விசுவாசத்தைக் கொண்டு நான் இதைக் கூறுகிறேன், நான் இதை கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன்: உங்களுக்கு பரிபூரண அன்பு இருந்தா லொழிய, நீங்கள் அங்கே ஒருபோதும் இருக்கவே இருக்க மாட்டீர்கள், ஏனென்றால் அது இல்லாமல் அங்கே எதுவும் எப்போதும் இருக்கவே முடியாது. உங்களுடைய ஆவி அங்கே பொருந்தாததாய் இருக்கும். அதனால் வர முடியாது; அது வருவதற்கு அங்கே எந்த வழியும் இருக்காது. ஒரு சோள விதைத்தானியத்திற்குள் ஜீவ அணு இல்லாமல் அது நிலத்தைவிட்டு மேலே வளராது என்பது போல தான் இதுவும், அதைக்காட்டிலும் அதிகம் ஒன்றுமில்லை. அது எவ்வளவு தான் இயற்கையாக உள்ளதாய் காணப்பட்டாலும் அது ஒரு பொருட்டேயல்ல, அதனால் வளர முடியாது. 247. என் நண்பனே, வயோதிப ஜனங்களே, வாலிப ஜனங்களே, நீங்கள் எந்நேரத்தில் இந்த இடத்தைவிட்டுப் போகப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. நமக்கு அது தெரியாது. ஆனால் உங்களை நேசிக்கிற ஒரு கிறிஸ்தவ சகோதரனாக, நான் உங்களை வற் புறுத்தட்டும்: நீங்கள் மறுபடியும் பிறந்தாலொழிய, அன்பின் தேவனுடைய ஆவியானவர் உங்கள் இருதயத்திற்குள் வந்தாலொழிய, நீங்கள் நிச்சயமாக அந்த ஸ்தலத்தை தவற விட்டுவிடுவீர்கள். நான் உங்களிடம் (இதைக்) கேட்கட்டும்: தேவன் எனக்கு... தந்திருப்பார் என்றால், நம்மிடையே தயவை கொடுத்து, நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்கள் என்றால், நான் நேர்மையாக இருக்கிறேன். என்ன சம்பவித்தது? எனக்குத் தெரியாது. 248. ஆனால் எங்கும் நிறைந்திருக்கிறவரும், இப்பொழுது இங்கே இருக்கிறவருமாகிய பரலோகத்தின் தேவனே, நான் இந்த உலகத்தைவிட்டுப் போகும்போது, பரலோகப் பிதாவே, இயேசு வரும் மட்டும், நான் அங்கேயே இளைப்பாறுவேனாக. அவர் வருவதை நான் காணும் வரை, என்னால் மாத்திரம் அந்த ஸ்தலத்தில் இளைப்பாறக் கூடுமானால், அது... அது -அது -அதுவே எனக்குப் போதுமான வெகுமதியாக இருக்கும். 249. அதன்பிறகு எனக்கு வெளிப்படுத்தப்பட்டது என்னவென்றால், "பூமிக்குரிய இந்தக் கூடாரம் மறைந்து போனாலும், ஏற்கனவே நமக்காக ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது"; காத்துக் கொண்டிருக்கும் ஒன்றை நாம் பெற்றிருக்கிறோம். சகோதரனே, சகோதரியே, உண்மை. இப்பொழுது, நான் தேவனுடைய ஆவியை உடையவனாயிருக்கிறேன் என்று நினைக்கிறேன். என்மேல் இருக்கும் ஆவியானது தேவனுடைய ஆவி இல்லை என்றால், எனக்குத் தெரியாது. 250. கவனியுங்கள், இதன் சுபாவத்தை நாம் எடுத்துக்கொள்வோம். இஸ்ரவேல் புத்திரர்களை பின் தொடர்ந்து சென்ற அக்கினி ஸ்தம்பத்தை, (அதன்) புகைப்படம் அவர்களிடம் இருக்கிறதே அந்த ஒன்றை நாம் எடுத்துக்கொள்வோம். உங்களில் அநேகரிடமும் அது இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை; அவ்வாறு இல்லாவிட்டால், நீங்கள் இதனூடாக போகும்போது, அதை வாங்கிக்கொள்ளுங்கள். அது மத்திய அரசாங் கத்தின் மூலமாக, கைரேகை மற்றும் தஸ்தாவேஜ்-க்கான FBI முகவர்களின் மூலமாக நுணுக்கமாக ஆராயப்பட்டு, அது அங்கே அந்தக் கூடத்தில் இருக்கிறது. இதுவரை புகைப்படம் எடுக்கப்பட்ட ஒரே இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் (Supernatural Being) என்பதாக, ஒன்று வாசிங்டன், டிசி-யிலுள்ள கலைப்படைப்புகளுக்கான மதம் சம்பந்தமான மன்றத்தில் (Religious Hall of Art) தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மேடையின்மேல் காணப்பட்டே வருகிறது. பரிசுத்தவான்களுக்கு (saints) அது தெரியும்; அவர்கள் அதைக் கவனித்திருக்கிறார்கள். மில்லியன் மில்லியன் கணக்கான முறைகள் உலகத்தைச் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் அது அசைவது பார்க்கப் பட்டு, அது மேடையின்மேல் தோன்றுவது நேரடியாக காணப்பட்டுவிட்டது. 251. ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு முன்பு, என்னுடைய மனைவி முதல் முறையாக அவளாகவே அதைப் பார்த்தாள். அது அங்கே தோன்றினபோது, அந்நாளிலே அவள் அந்த ஆற்றண்டையில் இருந்தாள். உள்ளூர் பாப்டிஸ்டு ஊழியக்காரர் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தபோது, அவர்மேல் மர்மமான ஒளி தோன்றியது என்ற கட்டுரையானது அசோசியேட்டட் பிரஸ்-ல் (Associated Press என்பது நியூயார்க் சிட்டியை தலைமையகமாக கொண்ட ஒரு அமெரிக்க செய்தி நிறுவனமாகும். இது 1846-ல் நிறுவப்பட்டது மொழிபெயர்ப்பாளர்) (வெளியாகி), உலகம் முழுவதிலுமுள்ள ஆங்கிலம் பேசும் தேசங்களுக்குச் சென்றது (English-speaking world - என்பது உலகம் முழுவதிலும் ஆங்கில மொழியை அதிகாரப் பூர்வ மொழியாகவோ, நிர்வாக, அல்லது கலாச்சார மொழியாகவோ கொண்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும் - மொழிபெயர்ப்பாளர்). அங்கே நின்று, அது பேசியது; அது முன்னும் பின்னுமாக பேசிக்கொண்டிருப்பதை ஜனங்கள் கேட்டார்கள். என்னுடைய முதலாவது எழுப்புதலில் மனமாற்றமடைந்த 500 பேருக்கு நான் ஓஹியோ நதியில் ஞானஸ்நானம் கொடுப்பதை ஆயிரக்கணக்கான ஜனங்கள் அங்கே நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அது செய்தித் தாளில் வந்தது, செய்தித்தாளிலிருந்து வெட்டப்பட்ட கட்டுரையில் அது இருந்தது; எங்களிடம் அது உள்ளது. அசோசியேட்டட் பிரஸ் (அதை) வைத்திருந்தது; கனடா அதைப் பெற்றிருந்தது; தேசத்தின் எல்லாவிடங்களிலும். 'மர்மமான ஒளி...' 252. இப்பொழுது, விஞ்ஞான உலகமானது அதை புகைப்படம் எடுத்துவிட்டது. இப்பொழுது, அவர்கள் அதை மூன்று அல்லது நான்கு வெவ்வேறு தடவைகள் பெற்றும்விட்டார்கள். ஜெர்மனி அதை புகைப்படம் எடுத்துள்ளது. அவர்கள் சமீபத்தில் இங்கே கலிஃபோர்னி யாவில் அதை புகைப்படம் எடுத்தனர். அது நிஜமான கேமராக்களை உடைய உண்மையான மனிதர்களாகும். ஜெர்மனியில் புகைப்பட கேமராவை (வைத்திருந் தவர்கள்), "எங்கள் கேமராவால் அதை புகைப்படம் எடுக்க (catch) முடியுமா என்று வியப்படைகிறோம்" என்றார்கள். நான், "(அதை) முயன்றுபார்க்க நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்" என்றேன். 253.ஆவியானவர் இறங்கியபோது, அது இறங்கி வருவதை அவர்கள் புகைப்படம் பிடித்தார்கள், அது பகுத்தறிதலைச் செய்து கொண்டிருந்த போதும் புகைப்படம் எடுத்தார்கள், மற்றும் மீண்டுமாக அது திரும்ப மேலே ஏறிப்போனபோதும் புகைப்படம் எடுத்தார்கள். ஓ, என்னே. ஜெர்மனியில் ஆயிரமாயிரம் பேர் சிலுவைக்கு முன்பாக விழுந்தார்கள். அவர்கள்... மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்பிச் செல்லும்படி என்னால் விடுவித் துக்கொள்ளக் கூடுமானால், உடனே, நான் அங்கே தான் திரும்பிச்செல்கிறேன். சுவிட்சர்லாந்திலுள்ள லொசன்னேயில் (Lausanne, Switzerland) அது மீண்டும் வந்தது. 254. இப்பொழுது, அதன் சுபாவத்தைக் கவனி யுங்கள். ஒரு திராட்சைக் செடியானது... அது... முதலாவது கிளை.... இயேசு, "நானே திராட்சைச் செடி; நீங்கள் கிளைகள்" என்றார். பரிசுத்த யோவான் 15 என்று நம்பு கிறேன். அது சரிதானா? "நானே திராட்சைச் செடி." 255. இப்பொழுது, திராட்சைச் செடியானது எத்தகைய ஒரு கிளையை வளரச்செய்தது? முதலாவது கிளையானது ஒரு பெந்தெகோஸ்தே சபையாக இருந்தது. அது சரிதானா? அப்படியானால் வெளிவரும் இரண் டாவது கிளையும் வேறொரு பெந்தெகோஸ்தே சபையாகவே இருக்கும். இப்பொழுது, எல்லா சபைகளிலுமே நாம் பெந்தெகோஸ்தேயைக் காண்பதில்லை, அப்படித் தானே? இல்லை. நல்லது, அது என்ன? அது ஒட்ட வைக்கப்பட்ட திராட்சைச் செடியாகும். 256. நீங்கள் ஒரு பீச் மரத்தையோ அல்லது ஒரு, ஒரு-ஒரு ஆரஞ்சு மரத்தை தான் கூறுகிறேன், (அம் மரத்தை) எடுத்து, (அதில்) ஏறக்குறைய எம்மாதிரியான சிட்ரஸ் பழங்களையும் ஒட்ட வைக்க முடியும். அநேகமாக எதையும், நாரத்தம்பழத்தையோ (grapefruit) அல்லது இன்னும் கூடுதலான (வகை பழங்களையும்) உங்களால் ஒட்ட வைக்க முடியும், ஆனால் அது ஒட்டவைக்கப்பட்டதாகும். ஆனால் மூலமுதலான திராட்சைச் செடி தாமே ஒரு கிளைவிடுமானால், முதலாவது கிளை கொடுத்த அதேவிதமான கனியையே இதுவும் கொடுக்கும். 257. இப்பொழுது, இயேசு கிறிஸ்து திராட்சைச் செடியாக இருக்கிறார், அவருடைய ஜீவனானது... இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். அவருடைய... திராட்சைச் செடி கனி கொடுப்பதில்லை; கிளை தான் கனிகொடுக்கிறது, ஆனால் அது திராட்சைச் செடியின் மூலமாகவே சக்திபெறுகிறது. அது சரிதானா? நல்லது, அப்படியானால் கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இருக்கு மானால், அது அவருடைய ஆவியையும் அவருடைய கிரியைகளையும் தோன்றச் செய்யும். அது சரிதானா? அது அவ்வாறு செய்தாக வேண்டும், ஏனென்றால் அது தேவனுடைய திராட்சைச் செடியாக (Vine of God) உள்ளது. இப்பொழுது... 258. இப்பொழுது, இந்த கர்த்தருடைய தூதனான வரைக் கவனியுங்கள். அது உண்மை என்று நமக்குத் தெரியும். இப்பொழுது, அது எம்மாதிரியான சுபாவத்தைக் கொண்டிருக் கிறது என்பதைக் கவனியுங்கள். அது இங்கே பூமியின்மேல் இருந்தபோது, கொடுத்த அதே கனியையே இதுவும் கொடுக்கிறது. இப்பொழுது, அது சபையில் திரும்பி வந்து, அதே கனியையே கொடுத்து, முதல்முறை அது உண்டுபண்ணின விதமாக அப்படியே மிகச்சரியாக வேறொரு பெந்தெகோஸ்தே சபையை உண்டாக்குகிறது. இப்பொழுது, இப்பொழுது, அந்த சபையானது தங்களுடைய சாட்சியை தங்கள் இரத்தத்தோடு கூட முத்திரையிட்டார்கள். அவர்கள் தேவ பக்தியுள்ள ஜனங்களாக இருந்து, தேவனை நேசித்து, அதனோடு தரித் திருந்தார்கள். 259. நீங்கள் என்ன செய்தாலும், நண்பர்களே, நீங்கள் என்ன செய்தாலும், நான் உங்களிடம் (இதைக்) கேட்கட்டும், நான் ஒரு தேவ ஊழியன் என்று நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களானால், நான் ஒரு காரியத்தை உங்களிடம் கூறட்டும்: அந்த அற்புதமான ஸ்தலத்தை இழந்துவிடாதீர்கள். அதை தவறவிட்டு விடாதீர்கள். நாம் சற்றுநேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 260. நாம் மேற்கொண்டு ஆராதனையில் போவ தற்கு முன்பாக: இங்கே ஒருவரோ, இரண்டு பேரோ, பன்னிரண்டு பேரோ, இங்கேயுள்ள எத்தனை பேர், "சகோதரன் பிரான்ஹாமே. இப்பொழுதே என்னை ஜெபத்தில் நினைவுகூரும், நீர் இதைக் கூறியது முதற்கொண்டு, எனக்கு சற்றே மரண பயமாயுள்ளது, நான்-நான்-நான் அந்த உறுதியைக் கொண்டிருக்க விரும்புகிறேன், நான் தேவனை நோக்கி என்னுடைய கரத்தை உயர்த்தி, 'எனக்காக வேண்டுதல் செய்யும்' என்று கூற விரும்புகிறேன்" என்று சொல்ல விருப்பம் கொள்வீர்களா என்று இப்பொழுது வியப்படைகிறேன். 261. இங்கேயிருக்கும் மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக; தேவன் உன்னையும், உன்னையும், உன்னையும் ஆசீர் வதிப்பாராக. ஆம், அங்கே பின்னாலுள்ள யாவரையும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கட்டிடம் முழு வதும், பால்கனியிலுள்ள (மாடி முகப்பிலுள்ள) உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக; அங்கே மேலேயிருக்கும் உங்களுடைய கரங்களை நாங்கள் காண்கிறோம். "எல்லா அறிவுக்கும் மேலான அந்த சமாதானத்தை நான் கொண் டிருக்க விரும்புகிறேன்." 262. நான் கூர்ந்து கவனித்துக்கொண்டே, ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கரத்தை மேலே உயர்த் துங்கள். பரிசுத்த ஆவியானவர் பேசுவாராக. நீங்கள் இன்றிரவு மரிப்பீர்களானால், அழுகையும் புலம்பலும் பற்கடிப்பும் உள்ள இடத்திற்குப் போகப்போகிறீர்களா? அல்லது சமாதானத்தோடு அந்த ஆசீர்வதிக்கப் பட்ட, இனிமையான இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க விரும்பு கிறீர்களா? நான் இதை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தோடு, கர்த்தருடைய நாமத்தில் கூறுகிறேன். 263. தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக; சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது சரி, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 264. நான் கவனித்துக்கொண்டும், சற்று நேரம் காத்துக் கொண்டுமிருக்கிறேன். யாவரும் உங்கள் தலைகளை தாழ்த்திய படி, ஜெபித்துக் கொண்டிருங்கள். சரி, அப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக; நான் உம் கரத்தைக் காண்கிறேன். நான் ஏதோவொன்றை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக; அது அருமையானது. சரி, வேறு யாராவது? அப்படியே தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கிறேன். சரி. 265. பரலோகப் பிதாவே, இவர்களுடைய கரங்களை நீர் காண்கிறீர். நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன், ஏதோவொன்று நடந்துகொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தேன், அதைக் குறித்த எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர், பிதாவே. உமது ஆவி இவர்கள்மேல் இனிமையாக இருக்க வேண்டுமென்று நான் இப்பொழுது ஜெபிக்கிறேன். நான் கூறியிருக்கும் இதை இவர்கள் அறிந்துகொள்ளட்டும், "இந்த நேரம் முதற்கொண்டு," இவர்களுடைய மனப்பான்மைகள் மாற்றப்பட்டு விட்டன என்றும், இவர்களுடைய இருதயங்களில் இருந்த வன்குணம் மெதுவாக மறைந்துபோய் விட்டது என்றும், இனிய சமாதானமும் தெய்வீக அன்பும் அதனுடைய இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டது என்றும் இவர்களால் கூற முடியும் என்பதாக இது இருப்பதாக. இதை அருளும், பிதாவே. 266. அவர் தம்முடைய முகத்தின்மேல் உமிழ் நீரோடும், தம்முடைய நெற்றியின்மேல் முட்களையும் உடையவராய், வானங்களையும் பூமியையும் தமது கரங்களில் உடையவராயிருந்தும், அவரைக் கொலை செய்து கொண்டிருந்த ஜனங்களுக்காக மரிக்க சிலுவையை நோக்கி சாதுவாக நடந்துசென்ற, அவர் செய்தது போன்றே, இவர்களும் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டவும், இரண்டாவது மைல் தூரம் செல்லவும் கூடும்படி, இவர்கள் ஒவ்வொருவரும் தேவ அன்பின் ஞானஸ்நானத்தை தங்கள் இருதயங்களில் பெற்றுக்கொள்வார்களாக. தேவனே, எவ்வாறு... 267. பிதாவே, அவ்விதமாக எங்களை ஆக்கியருளும். அவர்களுடைய கல்லான இருதயத்தை எங் களைவிட்டு எடுத்து, ஒரு உண்மையான, இனிமையான, கனிவான இருதயத்தை எங்களுக்குள் வைத்து, அவர் பெற்றிருந்தது போன்ற ஒரு ஆவியை எங்களுக்குள் வைத்தருளும். தேவ ஆவி இவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமருவதாக; முப்பது அல்லது நாற்பது பேர் தங்கள் கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். பிதாவே, நீர் இவர்களுக்கு நித்திய ஜீவனை அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இவர்கள் உம்மைக்குறித்து ஒருபோதும் வெட்கப்படாதிருந்து, இனிமையோடு உம்மிடத்தில் வருவார்களாக. 268. ஏதோவொன்று தான் இவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தும்படி செய்தது என்பதை இவர்கள் இப்பொழுது உணருவார்களாக. அது என்ன? பரிசுத்த ஆவியானவரே. இப்பொழுது இவர்கள்மேல் இருக்கிற, தேவனுடைய ஆவி தான், ஒரு தீர்மானம் செய்யும் படியாக இவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தும்படி தூண்டியது. 269. இவர்கள், "அங்கே அந்தப் பள்ளி அஜ்ங்கத்திலே, அந்த சனிக்கிழமை இரவு முதற்கொண்டு, நான் தேவனைச் சந்தித்தேன். ஏதோவொன்று எனக்கு நேரிட்டது; அந்நேரம் முதற்கொண்டு இப்பொழுது வரை நான் மாற்றப்பட்டுவிட்டேன்" என்று கூறக்கூடிய இரவாக இந்த இரவு இருப்பதாக. 270. இதை, அருளும், பிதாவே. இந்தச் செய்தியின் வெற்றிக் கோப்பைகளாக, இவர்களை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். நீர், "பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவரும் என்னிடம் வருவார்கள், அவர்களில் ஒருவரும் இழக்கப்படுவதில்லை" என்று கூறியிருக்கிறீர். கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்து, கடைசி நாளில் அவர்களை எழுப்புவீர் என்று அவர்களிடம் கூறியிருக்கிறீர், ஒரு சில வாரங்களுக்கு முன்பு, காணும்படி எனக்கு சிலாக்கியம் கிடைத்த இம்மகத்தான ஸ்தலத்தின் பிரசன்னத்திற்குள் அவர்களைக் கொண்டுசெல்லும், அந்த நித்திய ஜீவனை, அந்த அன்பை நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களிடம் கூறியிருக்கிறீர். 271. பிதாவே, அது என்னவென்று என்னால் கூற இயலவில்லை. எனக்குத் தெரியாது. என்னுடைய இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர், ஆனால் நான் என்ன கூறிக் கொண்டிருக் கிறேனோ அதில் மாத்திரம் நேர்மையாக இருக்கிறேன் என்று நீர் எனக்காக சாட்சிகொடுத் தருளும், பிதாவே. மேலும் நான்... அது அவ்வளவு இனிமையானதொரு ஸ்தலமாக உள்ளது. தேவனே, எனது நாட்கள் முடியும்போது, இந்த வேதாகமத்தை குட்டி ஜோசப்பின் கரத்திலே நான் வைக்கக்கூடிய ஒரு மனிதனாக அவனைக் காண விரும்புகிறேன், ஏனென்றால், அவன் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளிலே, நீர் உரைத்து, "ஜோசப், நீ ஒரு தீர்க்கதரிசி" என்று சொன்னீர். தேவனே, நீர் என்னுடைய மகன்மேல் ஆவியின் இரட்டிப்பான பங்கை வரும்படி செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நான் முதுமை அடையும்வரை உமக்காக ஆத்துமாக்களை ஆதாயப் படுத்தும்படி நான் வாழ நீர் என்னை அனுமதிப்பீரானால், அப்பொழுது எனது மகன் ஜோசப்பின் கரங்களுக்குள் இந்த வேதாகமத்தை வைத்து, இதே சுவிசேஷத்தோடு கூட தொடர்ந்து செல்லும்படி அவனிடம் கூறுவேன், அதுவே சந்தோஷம் நிறைந்த ஒரு ஜீவியமாயிருக்கும் (full life), பிதாவே. 272. ஆயினும் நீர் எனக்காக ஆயத்தமாயிருக்கும் நேரத்தில், ஆமென். என்னே ஓர் அற்புதமான இளைப்பாறுதல்; நான்-நான் மறுபடியும் அந்த ஸ்தலத்தைக் காண ஏங்குகிறேன். கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு இங்குள்ள ஒவ்வொருவரும், இன்றிரவு செய்தியைக் கேட்ட ஒவ்வொரு நபரும், அவர்களில் ஒருவர் (கூட) இழக்கப் பட்டு போகாமல் இருக்கட்டும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரையும் நான் அங்கே காணட்டும். 273. அப்போது, நாங்கள் ஓடோடிச்சென்று, எங்கள் கைகளை ஒருவர்மேல் ஒருவர் போட்டுக்கொள்ளும் போது, அங்கே எந்த வித்தியாசமும் இருக்காது, அப்போது மனிதனுக்கும் ஸ்திரீக்குமிடையே எந்த வித்தியாசமும் இருக்காது; பாவம் என்ற கோடு நீங்கிப்போய் விட்டிருக்கும். அப்போது நாங்கள் உண்மையாகவே சகோதர சகோதரிகளாய் இருப்போம், அங்கு நாங்கள் வாழ முடியும், பாவமோ, தீய எண்ணங்களோ இனி ஒருபோதும் அங்கே நுழைய முடியாது, அம்மாதிரியான ஒரு ஸ்தலத்திற்கு (அப்படிப்பட்ட) எதுவும் ஒருபோதும் வர முடியாது. அங்கு எந்த அசுத்தமும் இருக்க முடியாது. நாங்கள் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருப்போம். 274. கர்த்தாவே, நாங்கள் அங்கே காணப்படுவோமாக. நான் இவர்களிடம் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன் என்பதை இந்த வயதான ஸ்திரீகளும், வயதான மனிதர்களும் உணரட்டும். அது-அது -அது சத்தியமாயுள்ளது. இன்றிரவு ஒரு முக்கிய தீர்மானம் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் நின்றுகொண்டிருக்கும், இந்த வாலிப ஜனங்கள் தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவார்களாக (pattern), அவர்கள் மரிக்கும் நாளில் எந்த வருத்தமும் அங்கு இருக்காது என்ற சரியான வழியை அவர்கள் தெரிந்துகொள்வார்களாக. இதை அருளும், பிதாவே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இப்பொழுது இவர்களை உம் கரங்களில் ஒப்புவிக்கிறேன். ஆமென். 275. நீங்கள் மிகவும் நன்றாக உணருகிறீர்களா? தேவ ஆவியானவர் தான் நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தும்படி செய்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பார்க்கலாம். அது தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது தேவனிடமிருந்து தான் வருகிறது என்று விசுவாசிக்கிறீர்களா? நான் என் இருதயத்திலிருந்து உங்களுக்குச் சொன்னேன். சமீபத்தில், நான் இங்கு ஒரு ரபியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர், "திரு.பிரன்ஹாம் அவர்களே, நீர் அவரை தேவனுடைய குமாரன் என்று அழைக்கிறீர்," என்று கூறினார், "தேவனுக்கு ஒரு குமாரன் இருப்பது என்பது தூரமாயிருப்பதாக" என்றார். 'அவர் தேவனுடைய குமாரனாகத் தான் இருந்தார்" என்று நான் கூறினேன். "தேவனுக்கு ஒரு குமாரன் இருக்கிறாரா? அவர் இயேசுவும் அல்ல, ஒரு கிறிஸ்துவும் அல்ல. அவர் ஒரு இயேசுவாக இருந்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு கிறிஸ்துவாக இருக்கவில்லை" என்றார். அது அப்படித் தான் இருந்தது. நான், "ஐயா, நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பீர்களா?" என்று கேட்டேன். அவர், "ஆம், நிச்சயமாக நான் தீர்க்கதரிசிகளை நம்புகிறேன்" என்றார். அவர் மிச்சிகனிலுள்ள, பென்டன் துறைமுகத்தைச் சேர்ந்த, ஒரு ரபி, யூத ரபியாக இருந்தார். 276. நான் சொன்னேன்... ஜான் ரைன் (John Rhyn) இருபது ஆண்டுகளாக குருடராக இருந்து, சுகப்படுத்தப் பட்டார், அவர் வீதியில் அமர்ந்திருப்பார். அவர், "நான் ஜான் அவர்களுக்கு அநேக (நேரங்களில்) பிச்சை கொடுத்திருக்கிறேன். எந்த -எந்த வல்லமையினால், எந்த அதிகாரத்தினால், நீர் அவருக்குப் பார்வை அளித்தீர்?" என்று அவர் கேட்டார். நான், "நான் அவருக்கு ஒருபோதும் பார்வை அளிக்கவில்லை. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள விசுவாசத்தின் மூலமாகத் தான் அவர் தம் பார்வையைப் பெற்றுக்கொண்டார்" என்று கூறினேன். அவரோ, "எந்த தேவ குமாரன்? தேவனுக்கு எப்படி ஒரு குமாரன் இருக்க முடியும்?" என்று கேட்டார். அதற்கு நான், அவருக்கு ஒரு குமாரன் இருந்தார். ஏசாயா 9:6-ஐ நீர் விசுவாசிக்கிறீரா?" என்று கேட்டேன். "நிச்சயமாக" என்று கூறினார். தீர்க்கதரிசி யாரைப் பற்றி பேசுகிறான்? மேசியாவைப் பற்றி தானா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம்" என்றார். "மேசியா தேவனுடன் என்ன-என்ன உறவைக் கொண்டிருப்பார்?" என்று நான் கேட்டேன். அவர், அவர் தேவனாக இருந்தார். அவர் தேவனாகத்தான் இருப்பார்" என்றார். 277. நான், "இயேசுவும் அவ்வாறே இருந்தார். மாம்சமாகி, நம் மத்தியில் வாசம் செய்த தேவனாகவே அவர் இருந்தார். தேவன் தம்மையே ஒரு சரீரத்தின் மூலம் வெளிக்காட்டினார். அவர்-அவர் மாம்சமான தேவனாயிருந்தார்; தேவனுடைய ஆவி அவருக்குள் பரிபூரணமாக வாசமாயிருந்தது. நாமோ அதை அளவோடே கொண்டிருக்கிறோம்" என்றேன். 278. நாம் அவருடைய ஜீவனைக் காண்கிறோம். இப்போது, தேவனுடைய ஆவி நமக்குள்ளே இருக்கிறது, ஆனால் அது என்ன: ஆவியானவர் பாய்ந்தோடுவதற்கு அந்தச் சிறிய அடைக்கப்பட்ட வாய்க்கால்களை நம்மால் திறக்க முடியவில்லை. இப்போது, தேவனுடைய ஆவி, அது இன்றிரவு சபையில் இருந்திருந்தால், தேவனுடைய ஆவியைக் குறித்து சாட்சிகொடுத்திருக்கும். அது சரிதானா? கூட்டத்தில் ஏதேனும் ஜெப அட்டைகள் உள்ளதா? (அவன் ஜெப அட்டைகளை விநியோகித்துள்ளானா? இல்லையா?) அங்கே ஜெப அட்டைகள் உள்ளனவா? இல்லை, அங்கே ஜெப அட்டைகள் எதுவும் இல்லை. 279. ஆனால் ஒரு தேவன் இருக்கிறார்: அவருடைய பெயர் இயேசு கிறிஸ்து. அவர் தேவனுடைய குமாரன். நான் அவருடைய அபிஷேகத்தைக் கொண்டிருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன். நான் உங்க ளுக்குப் பிரசங்கித்த செய்தி, அது தேவனால் உண்டானது என்றால், தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை சரி என நிரூபித்துக் காட்டட்டும். நான் இதைச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நான் வேறு ஏதாவது சொல்வதற்கு முன்பு, நான் -நான் இதற்கான அவசரத்தை உணருகிறேன். இங்கு எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள்? வியாதிப்பட்டு, தேவன் தேவை என்றுள்ளவர்கள், உங்கள் கரத்தை உயர்த்துங்கள், உங்கள் கரத்தை உயர்த்திக் காட்டுங்கள். அப்படியே உங்கள் கையை உயர்த்தி, "நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். 280. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் இங்கு வந்து, தாம் செய்த அதே கிரியைகளைச் செய்வாரானால்... இயேசு கிறிஸ்துவே இப்போது பிரதான ஆசாரியர் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? எபிரெயர் புத்தகம், சகோதரர்களே, அது சரியா? அது சரிதானா? அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராயிருக்கிறார். அது வேதாகமம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் எப்போது அவ்வாறு இருக்கிறார்? சரியாக இப்போதே; நல்லது, அவர் அவ்வாறு இருப்பாரானால், "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று எபிரெயர் 13:8-ல் வேதாகமம் கூறுகிறது. அது சரிதானா? சரி. அவர் அதே பிரதான ஆசாரியராக இருப்பாரானால், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவும் (இருக்கிறார்), நீங்கள் அவரைத் தொடுவீர்களானால், அவர் இன்று எவ்வாறு செயல்படுவார்? அவர் மாறாதவராயிருந்தால், அவர் அதே விதமாகவே செயல்படுவார். அது சரிதானா? 281. அப்படியானால் ஒருசமயம் ஒரு ஸ்திரீ, ஜனக் கூட்டத்தினூடாக நெருக்கியடித்து (வந்து), அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபோது, தான் சொஸ்தமாக்கப்பட்டதை தனக்குள்ளே உணர்ந்து, வெளியே போய், ஜனக் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டாள். அநேகர் அவரைத் தொட்டபடி, "ஓ, வணக்கம் ரபி அவர்களே. உம்மை இங்கே கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம்" என்றும் இன்ன பிறவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு இந்த ஸ்திரீயோ... 282. இயேசு, "என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டார். பேதுரு அவரைக் கடிந்துகொண்டான், ஆனால் அவரோ, "என்னிடமிருந்து வல்லமையும் பலமும் போனதை நான் அறிகிறேன்" என்றார். அவர் அந்தச் சிறு பெண்ணைக் கண்டுபிடிக்கும் வரை கூட்டத்தினரை சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்து, அவளுக்கு இரத்தப் போக்கு (blood issue) இருந்தது என்றும், அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது என்றும் அவளிடம் கூறினார். அது சரிதானா? 283. நல்லது இப்போது, அவர் அதே பிரதான ஆசாரியராக இருப்பாரானால், அவர் தொடப்பட்டால், இன்றிரவும் அவர் அதே காரியத்தைச் செய்ய மாட்டாரா? இப்போது, அவர் அதை எவ்வாறு செய்வார்? அவர் இப்போது திராட்சச்செடியாக இருக்கிறார்; நாமோ கிளைகளாயிருக்கிறோம். அது சரியா? நல்லது அப்படியானால், அவர் கிளை மூலமாக செயல்படுவார். அது அந்தத் திராட்சைச் செடியிலுள்ள ஒரு சரியான கிளையாக இருக்குமானால், அந்த ஜீவன், திராட்சைச் செடியில் இருந்தவிதமாகவே அதுவும் செயல்படும். அது சரியா? இப்போது, நீங்கள் ஜெபம் பண்ணுங்கள்; விசுவாசியுங்கள். 284. நான் ஜெபிக்கிறேன்; நான் விசுவாசிக்கிறேன். லகெங்கிலும் தேவனுக்காக நான் எடுத்த நிலைப்பாட்டின் பேரில்; இந்த பகுத்தறிதலின் ஊழியமானது இப்போது விலகி, நான் வார்த்தையைப் பேசும் ஓர் உயர்ந்த ஊழியத்திற்குள் அடியெடுத்து வைக்கிறேன். தேவன் என்ன செய்திருக்கிறார் என்று நீங்கள் பார்க்கிறீர்களா? அவர் அதை மீண்டும் மக்களின் மடியிலேயே வைத்துவிட்டார். அவர்கள் சரியான அணுகுமுறையுடன் வந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கட்டும், ஆனால் அவர்கள் சரியான அணுகுமுறையைக் கொண் டிருக்க வேண்டும். பாருங்கள், புரிகிறதா? பாருங்கள், யாரும் சுகமளிக்க முடியாது; அவரே சுகமளிப்பவர். ஆனால் அவர் என்னிடம் பேசும் வரை, என்னால் அதைச் சொல்ல முடியாது, புரிகிறதா? ஆனால் நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் இப்போதே உங்கள் விசுவாசத்தைக்கொண்டு உரைத்து, உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் வெறுமனே, உங்கள் இருதயத்தில், 'கர்த்தாவே, அவர் என்னிடம் பேசட்டும்" என்று ஜெபித்துக் கொண்டேயிருந்து, என்ன நடக்கிறது என்று பாருங்கள். 285 அவர் அதைச் செய்வாரானால், உங்கள் கரத்தை உயர்த்திய ஒவ்வொருவரும், இங்கே வந்து பீடத்தைச் சுற்றி நின்று, தேவனோடு சமாதானம் செய்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஜெபித்து, விசுவாசம் கொண்டிருங்கள். 286. இப்போதும், பரலோகப் பிதாவே, அவ்விதமாய் பிரசங்கித்த பிறகு, இது ஒரு... குறிப்பிடத்தக்க மாற்றமாயுள்ளது. பிதாவே, உமது ஆவியானவர் எங்கள் மூலமாக கிரியை செய்ய, நாங்கள் ஒன்றாக அனு மதிக்கும்படி, என்னை நானே ஆசுவாசப் படுத்திக்கொள்ளவும், அங்குள்ள ஜனங்களை இளைப்பாறப் பண்ணவும், நீர் எனக்கு பலத்தை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் மூலமாக அல்ல, என் மூலமாக நீர் கிரியைசெய்தால், அது எவ்வளவு நன்மையைச் செய்யும்? அங்கே எந்த எதிர்ச்செயலும் இருக்காதே. நீர் வளர்க்கப்பட்ட உம்முடைய சொந்த பட்டணத்திற்கு நீர் வந்தபோது, அவர்கள் உம்மை அவமதித்தார்களே. அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம், "நீர் அநேக வல்லமை வாய்ந்த கிரியைகளை செய்யக்கூடாமற் போயிற்று" என்று நீர் சொன்னீரே. நீர் இன்றிரவும் மாறாதவராகவே இருக்கிறீர், ஏனென்றால் நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறீர். எல்லா அவிசுவாசமும் எடுபட்டுப் போவதாக. அவர்கள் தாமே.. அவிசுவாசம் என்னைத் தாக்கி, "அது இன்றிரவு கிரியை செய்யாது" என்று சொன்னால், நான் அதை விரும்பவில்லை. அவர் எனக்கு வாக்குத்தத்தம் செய்துவிட்டார், நான் அவரை விசுவாசிக்கிறேன். இப்போது, அவிசுவாசம் இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறட்டும், கிறிஸ்து தாம் செய்வதாகக் கூறியபடி அவர் ஜீவிக்கிறார் என்று தம்மைதாமே நிரூபித்துக் காட்டட்டும். 287. அப்படியானால், பிதாவே, முடிவு நேரம் காலையிலே வருமானால், கர்த்தாவே, அவர்கள் ஒரு சாக்குப்போக்கும் இல்லாமல் போவார்கள். இன்று இரவு இக்கட்டிடத்தில் தங்களுடன் பேசுவது தேவனுடைய உண்மையான ஆவியே என்பதை, தங்கள் கரங்களை உயர்த்தி, உம்மை விரும்பும் இந்த மக்கள் அறிந்துகொள்ளும்படி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இந்தக் காரியங்களை உம்மிடம் ஒப்புவிக்கிறோம். ஆமென். 288. இப்போது, நான் இங்கிருக்கும் ஒவ்வொரு ஆவியையும் என் கட்டுப்பாட்டின்கீழ், அல்லது பரிசுத்தவியின் கட்டுப்பாட்டின்கீழ் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எடுத்துக்கொள்கிறேன். இப்போது, நீங்கள் ஜெபியுங்கள். 289. இங்கே பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணிக்கு, இங்கே இரண்டாவதாக இருப்பவர்களுக்கு, சிறுநீரகப் பிரச்சினை உள்ளது, அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்மணியே, நீங்கள் குணமடைய விரும்புகிறீர்களா? தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? சரி, அப்படியானால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். வீட்டிற்குச் சென்று சுகமாக இருங்கள். அந்தப் பெண்மணி தன்னுடைய சிறுநீரகப் பிரச்சினைக்காக ஜெபிக்க வில்லையா என்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அது சரியே. அது சரிதானா, பெண்மணியே? அது சரியே, உங்கள் கரத்தை உயர்த்திக்காட்டுங்கள், அதனால் ஜனங்களால் காண முடியும். இப்போது, அவர்களிடம் ஜெப அட்டை இல்லை. அந்தப் பெண்மணியை எனக்குத் தெரியாது; என் ஜீவியத்தில் நான் அவர்களை ஒருபோதும் கண்டதில்லை. அது சரிதானா, பெண்மணியே? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருந்தால், உங்கள் கரத்தை அசைத்துக்காட்டுங்கள். இப்போது, விசுவாசிக்க உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது. 290. அது அவரை மாறாதவராக செய்கிறதா? அவள் என்ன செய்தாள்? அவள் அந்த பிரதான ஆசாரியரைத் தொட்டாள்; அந்தப் பிரதான ஆசாரியரே என் மூலமாகப் பேசி, ஒரு தரிசனத்தைக் காண்பித்தார், தாம் செய்வதாக அவர் சொன்னதைச் சரியாகச் (செய்தார்). 291. இயேசு, "நான் ஒன்றும் செய்வதில்லை... என்று கூறினார், பரிசுத்த யோவான் 5:19. "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், குமாரன் தாமாகவே ஒன்றும் செய்ய முடியாது; பிதாவானவர் செய்ய தாம் காண்கிறதை, குமாரனும் அந்தப்படியே செய்கிறார்." அது சரிதானா? அது வேதவாக்கியம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? பரிசுத்த யோவான் 5:19. ஜெபியுங்கள், வெறுமனே ஜெபியுங்கள்; தாழ்மையுடன் ஜெபித்துக் கொண்டிருங்கள். 292. இதோ, ஒரு வயதான பெண் இங்கே பின்னால், என் விரலின் வரிசையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். இங்கே அந்தப் பெண்ணின் மீது அந்த ஒளி தொங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் காணவில்லையா? அங்கே பாருங்கள்; உங்கள் தலையைத் திருப்பிக் கொண்டு இங்கே பாருங்கள். அந்தப் பெண் தன் தலையை உயர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் சற்று வயதானவர்கள்; அவர்களுக்கு நரைமுடி உள்ளது. அவர்களுக்கு ஒரு cat-... உண்டாயிருந்தது, அவர்களுடைய கண்ணில் கண்புரை நோய் (cataract) உள்ளது. அவர்கள் அதை அகற்றிவிட முயற்சிக்கப் போகிறார்கள். முன்பே இவர்களுக்கு ஒரு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது. இது கர்த்தர் உரைக்கிறதாவது. 293 இப்போது, அம்மா, அது சரிதான், இல்லையா? அது சரி என்றால், உங்கள் கையை அசைத்துக் காட்டுங்கள். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருந்தால், உங்கள் கரத்தை அசைத்துக் காட்டுங்கள். அங்கே தான் காரியம். இப்போது, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, விசுவாசமாயிருங்கள்; அப்படியே தேவனை விசுவாசியுங்கள். 294. இப்போது, அவர்கள் எதைத் தொட்டார்கள்? அவர்கள் பிரதான ஆசாரியரைத் தொட்டார்கள். நீங்கள் விசுவாசிப்பீர்களானால், எல்லாம் கூடும். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்; விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் எங்கிருந்தாலும், பால்கனியில் இருந்தாலும் அல்லது நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு பொருட்டல்ல, தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருங்கள். தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருங்கள். வெறுமனே, "கர்த்தாவே, என்னை நினைவுகூரும். நான் சுகவீனமாக இருக்கிறேன்" என்று கூறுங்கள். இப்போது, உங்களை பதற்றப்படுத்த முயற்சிக்காதீர்கள். வெறுமனே, "கர்த்தாவே, அந்த மனிதர் என்னிடம் சத்தியத்தையே சொல்லுகிறார் என்று விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிக் கிறேன்" என்று கூறுங்கள். 295. இப்போது பாருங்கள், தூதனானவர் என்னிடம் என்ன சொன்னார்? ஜனங்கள் உன்னை நம்பும்படி செய்ய உன்னால் கூடுமானால்.." ஒரு மனிதனாக என்னை நம்புவதல்ல, நான் உங்களுக்குச் சொல்லும் செய்தியை விசுவாசியுங்கள். "உன்னை நம்பும்படி (செய்து), உத்தமமாக (இருப்பாயானால்... நீ ஜெபிக்கும் போது, உன் ஜெபத்திற்கு முன்பாக எதுவும் நிற்காது." அதைத்தான் அந்த மனிதர் என்னிடம் சொன்னார். 296. ஒரு பெண் அழுவதையும், தன் கண்களி லிருந்து கண்ணீரை துடைப்பதையும் நான் காண்கிறேன். அவள் இங்கே என் முன்னே அமர்ந்திருக்கிறாள், அவள் என்னை தேவனுடைய தீர்க்கதரிசியாக விசுவாசித்தால், தேவன் அவளைக் குணமாக்குவார். எனக்கு உன்னைத் தெரியாது, உன்னை ஒருபோதும் கண்டதில்லை. ஆனால் நீ இங்கிருந்து வரவில்லை; நீ கிராண்ட்ஸ் பாஸிலிருந்து (Grants Pass) வருகிறாய். நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், சுகமடைவாய். தேவனே, அவள் தவறவிடப் போகிறாள்; கர்த்தாவே, அவள் அதைத் தவறவிட வேண்டாம். திருமதி. க்ரூகர்? அவரை விசுவாசிக்கும்படியாக நான் உனக்கு சவால் விடுகிறேன். விசுவாசம் கொண்டிரு. 297. எனக்கு அந்தப் பெண்ணைத் தெரியாது; என் வாழ்க்கையில் நான் அவளைப் பார்த்ததில்லை, தேவன் அதை அறிவார். நான் எப்பொழுதாவது அவளை அறிந்துகொள்ள, உலகில் எந்த வழியும் எனக்கு இல்லை. அவள் வெறுமனே அங்கு அமர்ந்திருக்கும் ஒரு பெண் தான். 298. பெண்மணியே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருந்தால், உன் கரத்தை உயர்த்திக்காட்டு. சரி, உம்-ஹம். நல்லது, அவர் உங்களிடம் என்ன சொல்லியிருந்தாலும், அது உண்மை தானா? இப்படி உன் கையை முன்னும் பின்னுமாக அசைத்துக்காட்டு. சரி. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 299. ஒரு பெண்மணி இங்கே பின்னால் அமர்ந் திருப்பதை நான் காண்கிறேன். அவள் சிறு வட்டவடிவ புள்ளிகளால் நிறைந்த நீல மற்றும் வெள்ளை நிற ஆடையை (blue and white polka-dot dress) அணிந் திருக்கிறாள். அவளுக்கு இடது பக்கவாட்டில் ஒரு கட்டி உள்ளது. விசுவாசமாயிருங்கள்; சந்தேகப்படாதீர்கள். அதைத் தவற விட்டு விடாதீர்கள். தேவன்... திருமதி கிரிஃபித் (Mrs. Griffith), தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், சர்வவல்லமையுள்ள தேவன் குணமாக்கி சுக மடையும்படி செய்வார். இப்போது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறீர்களா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சகோதரியே, தேவனால் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அவர் சுகமாக்குகிறார். உங்கள்... அது போய்விடும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, நீங்கள் வேண்டிக் கொள்வதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். உம்-ஹம். 300. இப்பொழுது, நீங்கள் அவரை விசுவாசிக்கி றீர்களா? அப்படியானால் என்னை அங்கு கொண்டு சென்ற ஆவியானவர், இங்கு சுழன்றுகொண்டிருக்கிறதும், இதுவரை புகைப்படம் எடுக்கப் பட்டதிலேயே முதன் முறையாக இயற்கைக்கு மேம்பட்ட தொரு ஜீவனான புகைப்படமாக விஞ்ஞான உலகம் வைத்திருக் கிறதுமான அதே ஆவியானவரே. இது இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தியது போன்ற ஒரு பெரிய அக்கினி ஸ்தம்ப மாகும், இன்றிரவு அதுதான் இங்கே நம்மை அபிஷே கித்து, அது பூமியின்மேல் இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்தபோது செய்த அதே கிரியைகளைச் செய்து கொண்டிருக்கிறது. 301. "கொஞ்சக்காலத்திலே, உலகம் என்னைக் காணாது, ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான், 'நான்' என்பது ஒரு தனிப்பட்ட பிரதிபெயர், நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று இயேசு கூறி யிருக்கிறார். 302. ஜனங்களே (ஓ, தேவனே!), உங்களால் உணர முடியவில்லையா? தோள் தொங்கினவனாய், வழுக்கைத் தலை கொண்டவனாய், இங்கே நின்றுகொண்டு இவைகளை உங்களிடம் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும், இந்தச் சிறிய மனிதன்பேரில் எந்தக் கவனமும் செலுத்த வேண்டாம். கல்லாதவனும், பக்குவமற்றவனுமாகிய என்னை பார்க்காதீர்கள், அதைக் கவனிக்காதீர்கள். இங்கு இதனூடாக கிரியை செய்துகொண்டிருக்கும் ஆவியானவரின் சுபாவத்தையே கவனியுங்கள். கர்த்தராகிய இயேசுவை விசுவாசியுங்கள்! அது நான் அல்ல; உங்களையோ, உங்களைப் பற்றி எதுவுமோ எனக்குத் தெரியாது. அது அவராயுள்ளது, அது கிறிஸ்து தாம் செய்யப் போவதாகக் கூறியிருக்கிற தம்முடைய வார்த் தையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாயுள்ளது. 303. முடிவு நெருங்கி வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களால் கூடும்போதே. இரக்கத்தின் வாசல்கள் புறஜாதியாருக்குத் திறந்திருக்கும் போதே, அடைக்கலத்தைத் தேடுங்கள். புகலிடத்தைத் தேடிக்கொள்ளுங்கள்; அது கர்த்தர் உரைக்கிறதாவது. 304. உங்களை அங்கே அழைத்துச் செல்லும் அந்த சமாதானம் இல்லாத ஒவ்வொருவரையும் இங்கு வந்து, இங்கே இந்த பீடத்தின் அருகே நிற்கும்படி அழைக் கிறேன். இங்குள்ள ஒவ்வொரு பாவியும், ஒவ்வொரு பின்மாற்றக்காரரும், நீங்கள் இங்கு வந்து பீடத்தின் அருகே நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களை அறிந்திருக்கும் தேவ ஆவியானவர் இங்கே இருந்தால், நிச்சயமாக என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். 305. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எழுந்து இங்கு வந்து, நீர் எவ்வளவு உத்தமமாயிருக்கிறீர் என்று பாரும். பரலோகத்திற்குச் செல்வது அல்லது உம்முடைய இரட்சிப்பை இழப்பது ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை இது அர்த்தப்படுத்துமானால், நீர் அங்கே பின்னாலிருந்து இங்கு நடந்து வருவீரா? "நான் ஒரு சபை அங்கத்தினன். நான் மறுபடியும் பிறந்திருக்கிறேனே" என்று நீர் கூறலாம். அந்த அன்பு உம்மிடம் உள்ளதா, நிச்சயமாகவே உள்ளதா? அதைச் செய்யும் (இங்கு நடந்து வாரும் மொழிபெயர்ப்பாளர்). இப்போது நாம் பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் அவர் முதலில் என்னை நேசித்ததால் (என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.) கிரயத்துக்கு வாங்கினார் என் இரட்சிப்பை கல்வாரியில். ஒவ்வொரு பாவியும் இப்போது வரட்டும். நீங்கள் இங்கே நிற்பீர்களா? உங்கள் சபை சேர்க்கையோ, உங்கள் கோட்பாடோ, உங்கள் நிறமோ, நீங்கள் யாராக இருந் தாலும் பரவாயில்லை. 306 வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உன்னை ஒரு பிரசங்கியாக ஆக்குவாராக. சரி, வாருங்கள். நாங்கள் பாடலைப் பாடுவதற்கு முன்பே, நீங்கள் இப்போது வருவீர்களா? உங்கள் கரத்தை உயர்த்தி, எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானமாகிய, அந்த சமாதானத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிற நீங்கள் வாருங்கள். நீங்கள் வரமாட்டீர்களா? நான் அவரை நேசிக்கிறேன், ஆம், உங்களை அங்கு கொண்டு செல்ல அவரது அன்பு தேவை. நான்... இப்போது எழுந்து இங்கே கீழே வாருங்கள், அவ்வாறு வருவீர்களா? ஏனெனில்... மற்றும் நீங்கள் வரமாட்டீர்களா? ஏறக்குறைய முப்பது கரங்கள் மேலே உயர்த்தப்பட்டுள்ளன. *இரட்சிப்பை கல்வாரி மரத்தில். இப்போது, சற்றுபொறுங்கள். இங்கே நிற்கும் மூன்று மனிதர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெண்கள் தான் முதலாவது வந்தார்கள் என்று நினைத்தேன். 307. கவனியுங்கள்! இதோ கர்த்தருடைய நாமத்தில், இந்தச் சபைக்கு, நான் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருக்கிறேன்! ஆகையால் தான் நம்மால் எழுப்பு தலைக் கொண்டிருக்க முடியவில்லை; ஆகையால்தான் தேவனுடைய ஆவி சபையோரிடத்தில் அசைவாட முடியவில்லை; ஆகையால்தான் என்னுடைய ஊழியம் ஜனங்களிடம் பிரபலமற்றதாய் ஆவதாகத் தோன்றுகிறது: பரிசுத்த ஆவியானவர் வந்து, தாம் செய்வதாகக் கூறியுள்ள அனைத்தையும் உறுதிப் படுத்துகிறார், ஜனங்களோ தங்கள் கைகளை உயர்த்தியும், தங்கள் ஆசனத்திலேயே இருந்துவிடுகிறார்கள். இது உத்தமம் அல்ல. 308. அப்படியானால், ஒரு சுகமளிக்கிற ஆராதனையை நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? முப்பது பேர் தங்கள் கைகளை உயர்த்தியும், மூன்று பேரே வரும்போது, இந்தச் சபை அதன் பூரணத்திற்கு தொடர்ந்து செல்லும் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதற்குச் செவிகொடுங்கள்! அது கர்த்தருடைய நாமத்தில் என்பதாக இருக்கிறது: அமெரிக்கா அதன் நாளைக் கண்டுவிட்டது; இனி அது எழும்பாது. அது அதன் வீழ்ச்சியில் உள்ளது. நான் கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன். நான்... ...?... உங்களை ஆசீர்வதிப்பாராக.)Content-Length: 0